- Joined
- Jul 10, 2024
- Messages
- 459
தாழ் திறவாய் ததுளனே! : 1
அன்றைய செய்தித்தாளின் முதல் பக்கத்திலே மானம் கப்பலேறி நிற்க, பத்திரிக்கையை தூக்கி விசிறினான் நாயகனவன்.
''இப்போ விட்டடுச்சு என்ன பிரயோஜனம்?! இதை நேத்தே யோசிச்சிருக்கணும்!''
எரியும் நெருப்பில் எண்ணையை ஊற்றினான் ஹீரோவின் நண்பனான சுந்தர்.
''நானா இருந்திருந்தேன், இந்நேரத்துக்கு அந்த டாப் மாடல் சங்க்யா, கட்டினா என்னதான் கட்டிப்பேன்னு அடம் பிடிக்கற அளவுக்கு பர்போமன்ஸ் பண்ணிருப்பேன்! நீ என்னன்னா, எல்லாத்தையும் சொதப்பிட்டு வந்து, இங்க வயசுக்கு வந்த பொண்ணு மாதிரி குத்த வெச்சிருக்க!''
ஏற்கனவே, அசிங்கத்தில் ஊரே கழுவி ஊற்றிக் கொண்டிருக்க, சுந்தர் வேறு தொடர்ந்து தோழனை காண்டாக்கினான்.
அவனை முறைத்து, பார்வைகளை தரை இறக்கி தலை குனிந்தான் ராகன்.
''சரி, அடுத்து என்னதான் பண்ண போறே?! இப்படி அமைதியா இருந்தா என்ன அர்த்தம்?!''
சுந்தர் மீண்டும் வாய் திறக்க, தம்பியின் அலுவலக அறை கதவை திறந்து உள்ளே நுழைந்தான் பெரியவன்.
''நியூஸ் வெளியாக்கின எல்லா பேப்பர்ஸ் ஓனர்ஸ்க்கிட்டையும் பேசிட்டேன்! ரெண்டு, மூணு நாள்லே மிஸ்லீட் இன்ஃபோன்னு அவுங்க சார்பா மறுப்பு செய்தி போடறதா சொல்லிருக்காங்க!''
உடனடி நடவடிக்கைக்கு முனைந்து அதையும் அழுத்தம் கொடுக்காது, அதன் போக்கிலேயே விட்டு பிடிக்கும் யுக்தியை கடைப்பிடித்திருந்தான் ஆணவன்.
''அதெல்லாம் சரிதான்! ஆனா, போன மானம் போனதுதானே?! அதை எப்படி திரும்ப ரிக்கவர் பண்றது?!''
சுந்தர் பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வரப்பார்த்த மூத்தவனை நோக்கி குதர்க்கமாய் கேட்க,
''மக்களே பொறுத்த வரைக்கும், இன்னைக்கு இது, நாளைக்கு வேறே ஒன்னு! அடுத்தடுத்த சென்சேஷன் நியூஸ்லே கவனத்தை செலுத்தி போய்கிட்டே இருப்பாங்க! அப்படியே இதை மறந்திடவும் செய்வாங்க! நாமளும் அதுக்கு ஏத்த மாதிரி அமைதியா இருந்திட்டா எந்த பிரச்சனையும் இல்லே!''
''சரி, பேப்பர் மேட்டர் ஓவர்! அப்போ, இந்த சோஷியல் மீடியா?! இதை என்ன பண்றது?!''
என்ற சுந்தரோ அவன் டுவிட்டர் கணக்கை போனில் காண்பிக்க,
''தெரிஞ்ச இன்ஸ்பெக்ட்டர்கிட்ட பேசியிருக்கேன்! சைபர் க்ரைம் டிப்பார்ட்மெண்டிலே பேசறதா சொல்லிருக்காரு! கூடியே சீக்கிரத்துலையே அந்த வீடியோஸ்லாம் ரிமூவ் ஆகிடும்!''
பொறுமையாய் பெரியவன் சொல்ல,
''அந்த பைத்தியக்காரி வாயே திறக்காமே இருந்தாலே போதும்! ஒரு பிரச்சனையும் வராது! பேப்பர்காரன், போலீஸ்காரன்னு போறதுக்கு பதிலா அந்த கிறுக்கியே புடிச்சு நாலு சாத்து சாத்தினா எல்லாம் சரியாகிடும்!''
விகாரன் கோபத்தில் கத்தினான், முகம் கதத்தில் இறுகி கிடக்க.
''பேச ட்ரை பண்ணேன்! ஆனா, சரியான ரெஸ்பாண்ட் கிடைக்கலே! அவுங்க மேனேஜரை புடிக்க சொல்லிருக்கேன்! ஷூட்டிங் நடக்கற இடம் தெரிஞ்சா, நேராவே போய் பார்த்து பேசி பிரச்சனையே ஒரு முடிவுக்கு கொண்டு வந்திடுவேன்!''
''எதுக்கு?! அதையும் லைஃவ்லே போட்டு, லாயிக்கு இல்லாதவன், அண்ணனே சமாதானம் பேச அனுப்பியிருக்கான்னு சொல்லவா?!''
மீண்டும் ஆத்திரத்தில் சிம்மாசனம் கொண்ட ராகன் கூச்சல் கொள்ள,
''நான்தான் சொல்றேன்லே! நான் போய் பேசறேன்னு! நீ ஷேர் ஹோல்டர்ஸ்கிட்ட பேசற வேலையே பாரு! இதை நான் பார்த்துக்கறேன்!''
என்ற மூத்தவனோ கபாலம் சூடேறி போய் கிடந்த சின்னவனின் முன் நெற்றி கேசம் கோத,
''எப்படின்ணா?! அப்படி என்ன பேசுவே?!''
சுந்தர் சந்தேகம் கொள்ள,
''ஹ்ம்ம்.. பேசிட்டு வந்த பிறகு, சங்க்யா சோஷியல் மீடியாவுலே ஆப்டேட் பண்ணுவாங்க, அதை பார்த்து தெரிஞ்சிக்கோ! இப்போ, கிளம்பு! சும்மா இருக்கறவனே ஏத்திவிட்டுக்கிட்டு இருக்காதே!''
என்றவனோ தம்பிக்கு மென்புன்னகையை பரிசாக்கி, சுந்தரை கண்ணால் எச்சரித்து விரட்டினான் அறையிலிருந்து.
''ஆமா, எனக்கு வேறே இல்லே பாருங்க! இவன் சின்ன மொக்கு, நான் சொன்னதை கேட்டு ஆட!''
ஆதங்கத்தை சலிப்போடு வெளிப்படுத்திய ராகனின் நண்பனோ அங்கிருந்து வெளியேறினான்.
தாழ் திறந்திடுவான் ததுளன்...
Author: KD
Article Title: தாழ் திறவாய் ததுளனே! : 1
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: தாழ் திறவாய் ததுளனே! : 1
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.