What's new

Welcome!

ஹாய் டார்லிங்ஸ்! வெல்கம் டூ எமி தீப்ஸ் நாவல்ஸ் சைட்! இணைந்திடுங்கள் & மகிழ்ந்திடுங்கள்!

SignUp Now!

KD

Administrator
Staff member
Joined
Jul 10, 2024
Messages
476
அத்தியாயம் 18

அமேசான் காடு

ரத்தம் சொட்ட சொட்ட வஞ்சகனின் கொய்த தலையை வாயில் கவ்வியவாறு மூச்சிரைக்க உறும்பி நின்றான் வர்மா.

அவனின் சக்திமிக்க கோர பற்களின் இடையினில் பிடிக்கொண்டு நின்ற கபாலத்தினை கீழிறக்கினான் வர்மா.

அதன் மீது அவனின் வலது முன்னங்காலை பதித்து உறும்பினான் வயமா அவன் குறையா கோபம் கொண்டு.

பிளிறும் சத்தத்தோடு அவன் முன் வந்து நின்றான் கரிய நிற வர்ண மதகயம். அவன் மீது அமர்ந்திருந்தான் குட்டி வானரன்.

வர்மாவோ வாலாட்டினான் உறும்பலோடு நண்பனை பார்த்து. பாறையிலிருந்து நிலத்திற்கு எகிறி குதித்தான் வயமா அவன்.

நடையை கட்டினான் கொந்தி கிடந்த கயவனின் உடலை நோக்கி.

நண்பனோ அவனை பின்தொடர்ந்தான் குகைக்குள். வர்மா அவனோ செத்து சுண்ணாம்பாகி போயிருந்தவனின் மீது இன்னும் அடங்கா வெறிக்கொண்டே இருந்தான். செத்த பிணம் என்றும் பாராது அதை புரட்டி எடுத்தான்.

பெரிய பாதம் கொண்ட பொங்கடியானோ பிளிறினான் வர்மாவை போதும் நிறுத்து எனும் அதட்டல் கொண்டு.

அதற்குள் தலைவர் குட்டி கடுவனோ ஸ்பாட் செக்கிங் செய்ய ஆரம்பித்திருந்தார் மிருவின் பேக்பேக்கை.

அதிலிருந்த வாசனை திரவிய போத்தல் முதற்கொண்டு அவரின் ஆராய்ச்சியில் பாதி காணாமல் போனது.

நல்ல வேலை தண்ணீர் என்று குடிக்க போனவனை தடுத்தான் வர்மா கையால் தட்டி விட்டு.

போத்தலோ கீழே விழுந்து உடைந்தது. குரங்கு குட்டியோ பயந்து போனது வர்மா கடுப்பாகி உறும்பிட.

சேட்டைக்காரனோ அச்சங்கொண்டவனாய் மீண்டும் கும்பியின் மீதேறி அமர்ந்துக் கொண்டான்.

வர்மாவின் தீவிரமான பச்சை விழிகளும் மாதங்கனின் சிறிய கண்களும் மட்டுமே ரகசியம் பேசிக் கொண்டன.

நாயகியின் பேக்பேக்கை தூக்கி அவன் உடலின் மீது வைத்தான் அரசுவா. குட்டி குரங்கோ மீண்டும் அதன் செக்கிங்கை ஆரம்பித்தது.

தந்தம் கொண்ட அல்லியன் அவன், ஒரே தூக்கு சேயிழை அவளை, அவன் தும்பிக்கை கொண்டு.

கணக்காத காரிகை அவளை வளைத்து பிடித்து அசால்ட்டாய் தூக்கி குப்பிற கிடத்தினான் கரேணு அவன் முதுகின் மேல்.

குரங்கு குட்டியோ இப்போது பேக்பேக்கை விட்டுவிட்டு முற்றிழையின் கூந்தல், காது, தோடு என்று தொட்டு பார்த்திட ஆரம்பித்திருந்தான்.

பரலோகம் போய் சேர்ந்திருந்த தீய எண்ணம் கொண்ட காட்டுவாசியின் தேகமோ முண்டமின்றி பிண்டமாய் அங்கேயே கிடக்க, வர்மாவோ நடையை கட்டினான் முன்னோக்கி.

வீடாகி போன வனத்தில் குடும்பம் பெரிது. அடிப்பிடி சண்டைகள் போக வெளியில் எல்லாம் வானத்தை போல பிரதர்ஸ்தான், அன்புதான், ஒற்றுமைத்தான்.

உணவு தட்டுப்பாடோ அல்லது வஞ்சமோ கொண்டால் மட்டுமே அப்பாலே போனால் செக்க சிவந்த வானம் பிரதர்ஸ் என்பது உண்மையாகும்.

இன்று தோழனாக இருக்கும் யானை இவனுக்கு மதம் பிடித்தால் அவ்வளவுதான் வர்மாவை மிதித்தே கொன்றிடுவான்.

அதேப்போலத்தான் வர்மாவும் திடிரென்று ஒருநாள் கடுப்பாகி போனால் தொண்டையை குறிப்பார்த்திடுவான்.

அவ்வளவே இவர்களின் நட்பெல்லாம். இதற்கு மேற்பட்டும் இருக்கிறது ஒன்றிரண்டு. விதிவிலக்காய்.

போகும் வழியில் ஆற்றில் நீராடி தன்னுடலை சுத்தப்படுத்திக் கொண்டான் வர்மா. தண்ணீர் அவன் இனத்திற்கு மிக பிடித்த ஒன்றாகும். அதில் குளிப்பது, விளையாடுவது எல்லாம் அவனின் வாடிக்கையாகும்.

புதிய குகையை வந்தடைந்தனர் நண்பர்கள் இருவரும். வர்மா ஒரு உறும்பு உறும்பிட தெறித்துக் கொண்டு பறந்து வெளியேறினர் வௌவ்வால்கள்.

வெற்றிகரமாக அவர்களை விரட்டி அடித்த பூரிப்பில் ஜில்லென்ற நிலத்தில் படுக்கையை போட்டு மல்லாக்க படுத்தான் வர்மா, சம்பவம் செய்த களைப்பை ஆற்றிக்கொள்ள.

வஞ்சியை தரையில் அலுங்காமல் குலுங்காமல் படுக்க வைத்தான் தந்தி அவன். கூடவே, குரங்கு குட்டியின் கையிலிருந்தும் பிடிங்கி சுந்தரியின் பக்கத்துலேயே வைத்தான் பேடையின் பேக்பேக்கை.

ஆனை அவனும் நடந்து வந்த அசதியில் அங்கேயே கவுந்து விட்டான்.

ஒருவழியாய் நேரம் இப்படியே போக, கண் விழித்தாள் உடல் தேறிய மங்கையவள்.

அவள் எழுகையில் கைக்கெட்டும் தூரத்தில் வர்மா மட்டுமே இருந்தான். யானையும் குரங்கும் கிளம்பியிருந்தனர்.

நல்ல உறக்கத்தில் வர்மா இருக்க, எழுந்தமர்ந்தவளோ அவளின் மேனியில் பச்சிலை வைத்தியங்களை கண்டு வியப்பும் பயமும் கொண்டாள். மேனியை தொட்டு தடவியவள் எழ முயன்று தோற்றாள்.

யார் எப்படி வைத்தியம் பார்த்தது என்று சிந்திக்க தலையோ மீண்டும் கனத்தது. உடல் கூட சரியாய் ஒத்துழைக்க மறுத்தது.

சரி போனால் போகட்டும் இன்னும் கொஞ்ச நேரம் தூங்கி பொழுதை கழிப்போம் என்றெண்ணி பைந்தொடியோ சொருகிய நேத்திரங்களை மூடி ஒருக்களித்து படுத்துக் கொண்டாள்.

பாவம் ஒளியிழையவள் அறியவில்லை அம்மணியின் தலையணை பச்சோந்தி என்று. நல்ல உறக்கம் கொண்டவள் துயில் கலைந்து படுத்தவாறே நெட்டி முறிக்க, அவளின் தலைக்கு அடியில் என்னவோ ஊர்வதை உணர்ந்து பதறியடித்து எழ மொத்த காய்ச்சலும் காணாமல் போயிருந்தது மிருடானிக்கு.

கோற்றொடி அவள் அலற, எழுந்தான் வர்மா சடீரென்று நித்திரை கலைந்து பேயடித்தது போல.

வயமா அவன் முன்னங்கை கொண்டு பச்சை கண்களை வாஞ்சையாக ஒத்தியெடுக்க, வாசுரையோ அவளின் தலை தொடங்கி கை கால்கள் வரை உதறி குதித்தாள் பதற்றத்தில்.

நேரிழை அவள் போட்ட சத்தத்தில் கலர் மாறிய பச்சோந்தியோ அப்போதே ஓடி ஒளிந்து விட்டது குகையின் உள்பக்கமாய் துண்டை காணோம் துணியை காணோம் என்று.

கத்தி கூப்பாடு போட்ட பெதும்பையோ அச்சத்தில் தெறித்து போய் இருக்குமிடத்திலிருந்து பின்னோக்கிட, கன்னியவளுக்கு பின்னால் கதை புரியாமல் நின்ற வர்மாவே விழிகளை சுருக்கிட, சொடக்கிடும் நொடிகளில் வர்மாவை இடித்து நிலத்தில் விழ போனவளை உறும்பலோடு விலகி திரும்பியவனோ டக்கென்று மின்னலாய் மாறி தாங்கினான் கையால்.

தீவியின் ஆரணியம்...
 

Author: KD
Article Title: தீவியின் ஆரணியம்: 18
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top