What's new

Welcome!

ஹாய் டார்லிங்ஸ்! வெல்கம் டூ எமி தீப்ஸ் நாவல்ஸ் சைட்! இணைந்திடுங்கள் & மகிழ்ந்திடுங்கள்!

SignUp Now!

KD

Administrator
Staff member
Joined
Jul 10, 2024
Messages
503
தீவியின் ஆரணியம்: 2

ஷூட்டிங் ஸ்போட்


‘’கட்! கட்! கட்!’’

அலறினான் இயக்குனர் டர்ஷன்.

''நான் என்ன போர்ன் மூவியா எடுக்கறேன்?! காலே தொறந்துக்கிட்டும் தூக்கிக்கிட்டும்! ச்சை!''

கடுப்பில் முனகிய டர்ஷ் கத்தினான்.

''பேக் ஆப்!''

இயக்குனர் அவனின் ஆவேசமான குரலில் அங்கிருந்தோர் முகம் சோர்ந்து போனது. இதோடு மூன்றாவது நாள். இங்கே இப்படி, வந்து ஒரு ஷூட் கூட முழுதாய் முடியவில்லை.

மாடலுக்கு நிக்கவும் வரவில்லை, உட்காரவும் வரவில்லை. சாப்பிடவும் தூங்கிடவும் மட்டுமே நன்றாக வந்தது. அந்த சீன குட்டியை யாரும் ஆசைப்பட்டு இங்கே அழைத்து வரவில்லை.

எல்லாம் மேலிடத்து உத்தரவு. வேறு வழியில்லாமல் பல போராட்டங்களுக்கு பிறகு வந்து சேர்ந்திருந்தனர் அனைவரும் இதுவரை. ஆனால், வந்த வரை லாபம் என்னவோ கொசு கடியும் பயமும்தான் மிஞ்சியது எனலாம்.

வனம் அப்படிப்பட்டது. பயங்கரமான மிருகங்கள் எல்லாம் சும்மாவே கால் போன போக்கில் சுற்றி திரியும் கோட்டை. இங்கு வந்து மனிதர்கள் படம் காட்டினால், எல்லா நேரமும் விலங்குகள் பார்த்தும் பார்க்காமல் இருக்கும் என்றிட முடியாதே.

அதனால், அடக்கியே வாசித்தனர் ஷுட்டிங் வந்திருந்த கோஷ்டி, திரும்பவும் உசுரோடு வீடு போய் சேர்ந்திட வேண்டி.

கேமரா மேன் தொடங்கி லைட் மேன் வரை அவரவர் பொருட்களை எடுத்து வைத்திட அவர்களை பார்த்துக் கொண்டே டர்ஷின் தோளில் கை வைத்தாள் மிரு. அவன் காதில் மெதுவாய் சொன்னாள்.

''டர்ஷ், கூல்! நான் போறேன்! நீ கொஞ்சம் மைண்ட் ரிலேக்ஸ் பண்ணு!''

என்று அவனை சமாளித்தவள் திரும்பி அங்கிருந்த பிரபுவை நோக்கி கையசைத்தாள், டர்ஷுக்கு குடிக்க நீர் கொண்டு வரும் படி.

அடுத்த நொடியே இயக்குனரின் நிலையை சமன் செய்தவளாய் ஓடினாள் மூட்டை முடிச்சுகளைக் கட்டிக்கொண்டிருந்த டீமை நோக்கி.

''இருங்க, இருங்க! ஒரு பத்து நிமிஷம் மட்டும் பிரேக் எடுத்துக்கோங்க! இன்னிக்கு ஷூட் முடிச்சிட்டுத்தான் கிளம்பறோம்!''

அவள் கராறாய் சொல்லிட அனைவர் முகத்திலும் சந்தோஷமும் தன்னபிக்கையும் நிறைந்து ஒளிர்ந்தது.

சீன மாடல் பெண்ணோ கேரவனுக்குள் ஏறி விட்டாள்.

''கதிர் அந்த ட்ரஸை கொடு?!''

என்று சீனத்தி போட வேண்டிய ஆடையை கையில் வாங்கினாள் மிரு. அவளின் மேல் டி-ஷிர்டை கழட்டி கதிர் கையில் திணித்தவள் புதிய ஆடையை அணிந்துக் கொண்டாள்.

போஸ்களை முன் கூட்டியே பழகி பார்த்திட ட்ரையல் பார்த்தாள் மிரு. அப்போதுதான் சொல்லிக் கொடுக்கையில் வசதியாக இருக்குமென்று.

மரம் ஒன்றின் மீது முதுகை மற்றவர்களுக்கு காட்டி வளைந்து அவள் நிற்க பின்னாலிருந்த சுதாவோ கையை தட்டினாள்.

''பக்கா!''

இனிஷாவோ கையிலிருந்த போனில் மிருவின் போஸை படம் பிடித்துக் கொண்டாள்.

சுஷாவோ ஓடி சென்று மிருவின் ஆடைகளை கொஞ்சம் சரி செய்தும் வந்தாள்.

''ஓகே வா?!''

என்று முன்னிருக்கும் பச்சை பசேல் காடுகளை பார்த்து வினவியவள் விழிகள் மிக சாதாரணமாய் பார்வைகளை பாய விட்டிருந்தது ஆரணியத்தை நோக்கி.

மனித சத்தங்களின் ஊடே லேசான அசைவொன்று பிறந்தது செடிகளுக்கு மத்தியில். பின்னால் இருந்த சூட்டிங் கோஸ்திகளின் குசுகுசுப்புகளை தாண்டி மிக நுணுக்கமாய் கேட்டது மிருவிற்கு முன்னே ஏற்பட்ட மாற்றங்களின் ஓசை.

கொஞ்சங் கொஞ்சமாய் அகல விரிந்தது காரிகை அவளின் மிழிகள் நேருக்கு எதிரே பச்சை வர்ண கண் ஒன்றினை பார்த்திட. அதுவும் வெறும் கைக்கெட்டிடும் தூரத்தில்.

அம்பகங்களோ பார்வையோ. ஆனால், நிஜமாகவே அதன் அழகு பேரழகு. முழு முகமும் பச்சை கொடிகளுக்குள் ஒளிந்திருக்க தெரிந்தது என்னவோ ஒரே ஒரு கண் மட்டுமே. அளவெடுத்து வெட்டி ஒட்டினாற் போல அச்சு பிசுக்காமல் அம்சமாய் அமைந்திருந்தது அம்முகத்தில்.

அப்படி ஓர் ஈர்ப்பு அவ்வண்ண விலோசனங்கள் நோக்க மிருவிற்கு. ரசிப்பு எல்லையை மீறிட காதெல்லாம் சூடேறி போனது மயில் அவளுக்கு. ஓர் ஆணுக்கான வீரியம் அந்நேத்திரங்களில் தெரிந்தது.

விழுந்து விட்டாள் மிருடானி. அல்ப பச்சை கலர் பிரேட்சணங்களுக்கு.

ஆப்பு என்னவோ இதற்கு பிறகுதான் என்றறியா பெண்ணவளோ மற்றவர்களை போலவே ஷுட்க்கு வந்தவனோ இல்லை ரேஞ்சாரோ அதுவும் இல்லையென்றால் காட்டு வாசியா என்று இப்படி பல கணிப்புகள் கணிக்க கேட்டது சுதாவின் குரல்.

''ஓய்! நெக்ஸ்ட்!''

அவள் சொல்லிட மிரு அதே மரத்தை இறுக்கி அணைத்தப்படி எதிரே இருப்பவனை போலவே பாதி வதனம் காட்டி மறைத்து நின்றாள் கள்ள சிரிப்பை.

''எப்படியும் இப்போ வெளிய வந்துதானே ஆகணும்! மாட்டினியாடா பம்பரக்கட்ட மண்டையா?! யாருடா நீ?! எனக்கே தண்ணி காட்ட பார்க்கறே?!''

அதுப்பில் உள்ளுக்குள் எகத்தாளம் கொண்டவள், போட்டோகிராப்பர் என்று நினைத்துக் கொண்டாள்.

இதுவெல்லாம் இப்படியான ஷுட்டில் சகஜம். சில வேளைகளில் ஹிட் அடிப்பதே இப்படி ரகசியமாகவோ அல்லது எதர்ச்சையாகவோ எடுக்கப்படுகின்ற படங்கள் தான்.

ஆகவே, அப்படியான ரகசிய கேமராக்காரன் போல என்று நினைத்து விட்டாள் பனிமொழியவள்.

மிருவின் போஸ் மாற எதிர் அணிக்காரரின் செயலிலும் மாற்றம். கொஞ்சமாய் முகம் வெளியில் வர, இப்போது மிருவின் ஹார்ட் வெளியில் வந்தது.

மிரு ரசித்த ஆணவன் இடது பக்க பச்சை திட்டி பார்வையோடு அவளை கூர்ந்து நோக்கிட அடித்தளம் அடிவாங்கியது பாவையவளுக்கு.

இம்முறை சுதாவின் உத்தரவு வரும் முன்னே, மிரு நடராஜர் போல மரத்தை இடது கால் தூக்கி கட்டிக் கொண்டு நின்றாள் மொத்தமும் வெலவெலத்து போக.

பாவம் மிரு. அவளின் முன்பக்க ஷேக்கிங் பின்பக்கம் யாரும் அறியவில்லை.

நெஞ்சம் மூச்சு வாங்கிட மாயோளின் சக்குகளோ வெறித்தது அவளை செடிகளுக்கு நடுவினில் நின்றப்படி கூரிய பார்வைகளோடு இமைக்காது உற்றுப் பார்த்து கொண்டிருக்கும் முரடன் அவனை.

பெண்ணோ ஆணோ யார் கண்டது. என்ன கன்றாவியோ.

அது. அஃறிணை. அவ்வளவே.

பயத்தை உள்ளுக்குள் அடக்கிக் கொண்டு சிலையாட்டம் அவள் மரத்தை கிடுகிடுக்கும் விரல்களால் அழுத்தியிருக்க, வியர்த்து கொட்டியது மிருவிற்கு.

''மிரு நெக்ஸ்ட் போஸ்ட் ப்ளீஸ்!''

சுதா சொல்லிட, பயத்தில் உருகுலைந்தவளோ டெட் போடியாகிட ரெடியாகி கொண்டிருந்தாள்.

வெறும் ஒற்றை கண். மொத்தமாய் இப்படி சிக்கி சின்னாபின்னமாகிட வசமாய் வசதி அமைத்து கொடுத்திருந்தாள் மிரு.

அவள் உயிரை கையில் பிடித்துக் கொண்டு நிற்க, காடே அதிரியது கேட்ட தொடர் துப்பாக்கி சத்தங்களால்.

எல்லாரும் பயத்தில் அலறிட, ஓட்டம் முதன்மையான ஒன்றாய் மாறிப்போனது. காரணம் சொடக்கிடும் வினாடியில் வனத்தின் மொத்த மிருகங்களும் பயந்து மிரண்டு ஓடிட ஆரம்பித்திருந்தன.

ஷூட்டிங் குழுவோ ரெண்டாய் மூன்றாய் அப்படியே ஆங்காங்கே பிறந்து போயாயிற்று கத்தி பதறி பயத்தில் கால்கள் போன போக்கில் ஆளுக்கு ஒரு மூலையில்.

ஏன் எதற்கு துப்பாக்கி சத்தம். ஒன்றும் புரியவில்லை. காரணம் அலசிடவும் விருப்பம் இல்லை. போற பேக்கில் பார்த்துக் கொள்ளலாம் என்று மிருவும் எங்கையோ ஓடிட கண்ணெதிரே முதல் பலியே சுஷாதான்.

யானை ஒன்று அவளை தூக்கி தூர விசிறியடித்தது. மதம் யானைக்கு மட்டுமல்ல அங்கிருந்த எல்லா மிருகத்திற்கும்தான். துப்பாக்கி சத்தங்கள் அவைகளை மிரள வைத்திருந்தது.

நின்று சுஷாவிற்காக கண்ணீர் கூட சிந்திட முடியாமல், மிரு கண்ட காட்சியில் அலறி கொண்டு ஓடிட காலில் தட்டுப்பட்டது கைத்துண்டொன்று. அதிலிருந்த வளையல் சுட்டி காட்டியது கரத்தின் சொந்தக்காரி இஷானா என்று.

''இஷானா!''

என்றலறி ஆடிப்போன இதயத்தோடு விக்கித்து நிற்க தூரத்திலோ சுதாவை என்ன இழவெடுத்த மிருகமோ தெரியவில்லை துரத்திக் கொண்டு போனது.

வெள்ளை வர்ண ட்ரையல் உடை முழுதும் ரத்த சகதி. டீமில் இருந்தவர்கள் பந்தாடப்பட்டு கிடந்தனர் உயிரற்று.

கீழ் முதுகு வரை காலியான உடைதான் அது. மாடர்ன் டிரஸ். பின்னால் மட்டும். அதனால் ஏந்திழையின் ப்ரா ஹூக் மட்டும் அப்பட்டமாய் தெரியும் நிலை.

உயிரை பிடித்துக் கொண்டு ஓடிய சனிதமோ மிருகங்களோடு மிருகமாய் கலந்து சேற்றில் விழுந்து வாரி எழ, கண் முன்னோ சீறி நின்றிருந்தது அனகோண்டா பாம்பொன்று.

சேற்றில் உழன்ற கால்கள் ரெண்டையும் மடக்கிய நிலையில், கரங்களை நிலத்தி, பேயறைந்தவள் கணக்காய் பகினி அவள் அலண்டு கிடக்க, படம் எடுக்காமல் இரையானவளை கண்களால் அளந்து நாக்கை வெளியில் நீட்டி சீறியது சர்பம் அது.

ஈரக்குலை உதிர்ந்து போக, முற்றிழையின் விழிகளில் பொலபொலத்த கண்ணீரோ துடைத்திறங்கியது நேரிழையின் கன்னங்கள் கொண்ட சேற்றினை.

தீவியின் ஆரணியம்...

முந்தைய அத்தியாயங்களை படிக்க:


https://amydeepz.com/forums/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D.38/
 

Author: KD
Article Title: தீவியின் ஆரணியம்: 2
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top