What's new

Welcome!

ஹாய் டார்லிங்ஸ்! வெல்கம் டூ எமி தீப்ஸ் நாவல்ஸ் சைட்! இணைந்திடுங்கள் & மகிழ்ந்திடுங்கள்!

SignUp Now!

KD

Administrator
Staff member
Joined
Jul 10, 2024
Messages
503
அத்தியாயம் 4

பிரேசில் - அமேசான் வனம்


மயக்கம் எவ்வளவு நேரமோ.

மிரு விழிகள் விழிக்க, சூரியன் மோர்னிங் ஷிஃப்ட் முடிந்து வீடு திரும்பி கொண்டிருந்தான்.

எழுந்தாள் பேடையவள் வலிகொண்ட ஈனசுரத்தோடு முகம் கோண. அடித்து போட்டது போலான ரணம் உடலெங்கும். இடையில் புலியின் அன்பு நக முத்தங்கள் வேறு. கீறலோடு கூடிய ரத்த கசிவு. பார்வைகளை சூழல விட்டாள் பெண்ணவள்.

குளத்தின் அருகில்தான் கிடந்தாள் சனிதமவள். சருகுகளின் மீது பிஞ்சு போன செருப்பு கணக்காய்.

சரி போனால் போகட்டும் என்று ஒரு வழியாய் வேங்கை அவன் தந்த வேறு விதமான இடுப்பு வலியை சமாளித்து குட்டை பக்கம் போனாள் வஞ்சியவள். முகத்தை மட்டுமாவது கழுவி சேற்றின் அரிப்பிலிருந்து தப்பிக்க நினைத்தாள்.

அவளின் நல்ல நேரம். அப்போதுதான் ஜலத்தில் கைகளை நுழைத்து நீரை அள்ளிடலாம் என்று போன பகினியின் கண்ணில் சிக்கியது திடிரென்று தோன்றியது தண்ணீரிலான முட்டை ஒன்று.

முட்டிக் கால்கள் போட்டு மெதுவாய் சத்தமின்றி கீழே குனிந்து குட்டை நிசகத்தை (நீர்) மிழிகளால் உற்று நோக்கினாள் நாயகியவள்.

''கொக்கா, மக்கா! எவ்ளோ பெரியா முதலை! அதுவும் எத்தனை?!''

காட்சியைக் கண்ட உடனே ஆயிழையின் ஆன்மா மேலேகம் பறக்க தயாராகி விட்டது எனலாம்.

அடி மேல் அடி வைத்து பின்னோக்கி சென்றாள் பதுங்களாய் மங்கையவள். எங்கே திரும்பி ஓடிடும் சாக்கினில் முதலை அவளை கவ்விடுமோ என்ற பயத்தில் விழிகளை செக் போஸ்ட் போட்டு வைத்தாள் முதலையின் மீது வேறெங்கும் பார்வைகளை நகர்த்தாது.

ஸ்லொவ் மோஷனில் பூனையாட்டம் இடத்தை விட்டு கால்கள் அகல, டமாரென்றது முதுகு. வாயை மடக்கி குமித்தவள் நெளிந்தாள் வலியால். அம்பகங்கள் வேறு விரிந்தது நெஞ்சம் பக்கென்றிட.

மெதுவாய் உடல் அதிர முகத்தை வலது திருப்பிய தெரியிழையின் சக்குகளோ எதிர்கொண்டது என்னவோ அல்லியனின் தும்பிக்கையையே.

பீதியில் பேடை அவள் அலற, குட்டி துவிரதம் அவனோ பயத்தில் பிளிற, அடர்ந்த வல்லையோ அதிர்வு கொண்டது.

அச்சம் உயிர் துஞ்ச, நின்று இடத்திலேயே நின்றிடாமல் காடே நிம்மதி இழக்கும் வகையில் கத்தி கொண்டே ஓடினாள் கால் போன போக்கில் அச்சத்தில் பேதி வந்தவளாட்டம் மிரு.

ஒருவழியாய் அவளின் மாரத்தான் ஓட்டம் நிறுத்தங்கொண்டது, குறுக்கே கிடந்த மரதண்டு கால் தடுக்க. ஸ்பைடர் மேனாட்டம் காற்றில் பறந்து நிலத்தில் விழுந்தாள் வல்வியவள் தொப்பென்று மூஞ்சு முகரையெல்லாம் செம்மண்ணை வெறித்தனமாய் முத்தமிட.

மல்லாக்க விழுந்த நேரிழையோ கொஞ்ச நேரத்திற்கு அங்கேயே லேண்டாகி விட்டாள். ஓட்டமும் நடையுமாய் பல மணி நேரங்களை கழித்தவளின் யாக்கையில் தெம்பில்லை. தன்னிலையை நினைத்து கதறினாள் மண்ணில் முகம் புதைத்த வஞ்சியவள்.

அழுது கலைத்தவள் சோர்வில் நிலத்திலேயே கண்ணயர்ந்து விட்டாள் அப்போதைய இயற்கை கொடுத்த ஏசி குளுகுளுவில்.

சில பல வினோத சத்தங்கள் செவியை துளைக்க, நித்திரை கலைந்த கோமகளோ பதறி எழுந்தாள் தெறித்து போய். இமைகள் திறந்ததும் கண்டது என்னவோ கும்மிருட்டுதான்.

நிலவு நைட் ஷிஃப்ட் எடுத்தாச்சு. இருட்டில் என்ன செய்வது, ஏது செய்வது என்று தெரியவில்லை மிருடானிக்கு. பகல் பொழுதில் ஏதோ பரவாயில்லை சமாளித்தாயிற்று.

ஆனால், இப்போது கண்ணும் தெரியவில்லை, கீழிருக்கும் மண்ணும் தெரியவில்லை. என்ன செய்ய என்று இடுப்பை இறுக்கினாள் நங்கையவ அமர்ந்த வாக்கிலேயே.

மேனி கொண்ட காயங்களால் மலரவள் முகம் வாடி சுணங்கியது. புலிப்பையாவின் கைவரிசையோ இடையோரம் ஏகத்துக்கு கலைக்கட்டி இருந்தது. அடிப்பட்ட இடத்தை கண்கொண்டு பார்த்திட கூட திராணியில்லை தாரகை அவளுக்கு.

இருக்கும் கொஞ்சநஞ்ச தைரியமும் எங்கே ரத்த சரித்திரம் கொண்ட இடுப்பை பார்த்த மாத்திரம் காணாது போயிடுமோ என்ற பயமே முற்றிழை அவளுக்கு.

கவலையில் கண்டதையும் யோசித்த கோதையின் காதோரமோ ஆருவத்தின் (தண்ணீர்) சத்தம் கேட்டது.

தொண்டை வேறு வறண்டு கிடக்க, மனம் சத்தம் கேட்ட இடம் நோக்கி பயணிக்க சொன்னது சுந்தரியவளை.

கண்ணிருந்தும் குருடியாய், அருவியின் ஓசையை வழிகாட்டியாய் முன்னிறுத்தி பயணிக்க ஆரம்பித்தாள் பெருங்காட்டில் ஏந்திழையவள், தலையெழுத்தே என்றெண்ணிய தனியொருத்தியாய் அவளை ஆட்கொண்ட அந்தகாரத்தில்.

தீவியின் ஆரணியம்...

முந்தைய அத்தியாயங்களை படிக்க:


https://amydeepz.com/forums/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D.38/
 

Author: KD
Article Title: தீவியின் ஆரணியம்: 4
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top