- Joined
- Jul 10, 2024
- Messages
- 503
அத்தியாயம் 5
இருட்டில் கானகம் படுபயங்கரமாக இருந்தது. மிரட்டியது அந்தகாரமது மிருவை. பயந்துக் கொண்டே வேக வேகமாய் நடந்தாள் நாயகியவள் கால் போன போக்கில்.
நல்ல வேலை கையில் ஸ்போர்ட்ஸ் வாட்ச். டார்ச்சை ஆன் செய்து அச்சத்தில் தடாகம் தேடி போனாள் கோதையவள்.
பத்து, பதினைந்து நிமிட தொடர் நடையில் கண்டாள் வஞ்சியவள் கொட்டும் அருவியை திட்டிகள் முன். மின்மினி பூச்சிகள் சுதந்திரமாய் சுற்றி திரிந்தன வனாந்தரத்தில். பூரித்து போனாள் பாவையவள் கண்ட அழகில்.
கற்பாறைகளில் ஏறி நீர்நிலம் பயணித்தாள் பேதையவள். தன் மீது கொண்ட வாடையையும் சேற்றையும் போக்கிக் கொள்ள நினைத்தவள் குதித்தாள் அருவிக்குள்.
ஜில்லென்ற நீர் தேகம் தீண்ட சட்டென சிலிர்த்து சூடேறித்தான் போனாள் மங்கையவள். நீரில் முங்கி எழுந்து நிம்மதி கொண்டாள் தற்சமயத்திற்கு தாரகை அவள்.
அடித்தூற்றும் நீர்வீழ்ச்சியில் முதலை இருக்க வாய்ப்பே இல்லை. அறிவாள் படித்தவள். மீன்கள் இருக்கும். இல்லை என்றிட முடியாது. ஆனால், நேரங்கெட்ட நேரத்தில் அவைகள் அங்கொன்றும் சுற்றி திரியாது. அவளாகவே நினைத்துக் கொண்டாள்.
எரிச்சல் கொடுத்தது வயமனின் அச்சு அவளின் இடையில். உடலை வளைத்து தொட்டு பார்த்தாள். வாய் தவறி வலியில் முகம் சுணங்கி ஓசையெழுப்பினாள் மிரு.
பின் நாக்கு கடித்து அவளை அவளே ஆசுவாசப்படுத்திக் கொண்டாள். சுற்றி முற்றி பார்த்தாள் பகினி அவள். யாருமில்லை என்று உறுதி செய்துக் கொண்டாள்.
இருந்தும் அவள் கவனிக்கவில்லை. முற்றிழையின் செயலினை பச்சை கண்கள் ரெண்டு பார்த்துக் கொண்டே இருக்கிறது என்று.
மேனி கொண்ட ஓட்டை ஒடிசலான வெள்ளை வர்ண ஆடையை கழட்டி வைத்தாள் மிரு பாறையின் மீது. உள்ளிருந்த மேலாடை முதலில் நடந்த சேசிங் சீனில் ஹூக் கழண்டி போக, பதறி ஓடியவளோ அதனை உறுவி வீசி ஓட்டத்தினை தொடர்ந்திருந்தாள்.
ஆகவே, இப்போது அம்மணக்கட்டையான நிலைதான் மிருடானிக்கு.
ஜலத்தில் ஆசைத்தீர நீராடினாள் பெண்ணவள்.
அவளை ரகசியமாய் நோட்டமிட்டான் பச்சைக்கலர் விழிக்களுக்கு சொந்தமான வேங்கையவன். வனமும் அவனது, இரவும் அவனது.
கேட்க யாருக்கு உண்டு தைரியம். ஆறு மடங்கு மனிதனை விட கூரிய பார்வைகளை கொண்டிருக்கும் அவனிடத்திலிருந்து சுலபமாய் தப்பித்திட முடியுமா என்ன.
அதுவும் இந்த அர்த்த ராத்திரியில் சொல்லிடவா வேண்டும். இது அவனுக்கான வேட்டை நேரம்.
அடி மேல் அடி வைத்து பதுங்கி ஏறினான் வயமா அவன் பாறையின் மீது. ஏந்திழை அவளையே பார்த்தான் நாலு கால் ஹீரோ அவன் பேதையவள் மனிதன் என்று நினைத்து ரசித்த அதே அம்பகங்கள் கொண்டு.
குளித்துக் கொண்டிருந்த பனிமொழியோ முதுகை வயமன் அவனுக்கு காட்டியப்படியே ஆருவத்தில் ஆர்வமாய் விளையாடி கொண்டிருந்தாள்.
நீரை கைகளால் தூக்கி மேல் நோக்கி வீசிய வதனியோ இதுதான் அவளுக்கான சொற்ப நேரம் என்று கருதினாள். வேறு என்னதான் செய்ய முடியும் இப்பேர்ப்பட்ட காட்டில் கோமகள் அவளால்.
மிரு வீசிய நீர் வந்து விழுந்தது உழுவை அவன் மீது. முறைப்போடு அவளின் சிறுபிள்ளைத்தனத்தை சினங்கொண்டு வெறித்தவன் சுருக்கினான் நேத்திரங்களை.
மிருவின் முதுகினில் டாட்டூ. புலி சின்னம். கம்பீரமாய் சீறி பாய்வது போலிருந்தது. ஒளிரும் கண்களோடு டாட்டூவை பார்த்தவன் பல்லை காட்டினான் ஆவேசம் பொங்க சத்தமின்றி.
குளித்து முடித்த ஆரணங்களோ எடுத்து அணிந்துக் கொண்டாள் அவளின் பழைய ஆடையை. பாறையின் பக்கம் அவள் தலை திரும்பிடவே இல்லை. கைகள் கொண்டு துழாவியே எடுத்தாள் வாசுரை அவள்.
நீரில் ஆடையினை அலசி பிழிந்து உதறியே அணிந்துக் கொண்டாள் மிரு அவள். எப்படியும் மறுநாள் வரை தாக்கு பிடித்தால், ஆடை காய்ந்திடும். அதுதான் அவளின் கணக்கு.
பெண்டு அவள் முதுகில் பதிந்திருந்த டாட்டூ மட்டும் தெரிந்தது தனியே தனித்து. வெள்ளாடையின் லட்சனம் அப்படி.
பின்னோக்கி இறங்கினான் புலி அவன் பாறையிலிருந்து. ஒளித்துக் கொண்டான் ஆணவன், அவனை மிருவின் பார்வையிலிருந்து.
சருகுச் சத்தம் லேசாய் கேட்க பட்டென சிரசை திருப்பினாள் மிரு நீரில் நின்றவாறே. பக்கு பக்கு என்றது அவளுக்கு.
எதுவும் இருக்காது என்று அவளே அவளை சமாதானம் செய்து கொண்டாள். அதுவும் அந்த பொழிலில்.
ஏறினாள் அருவியிலிருந்து பாறைக்கு நோக்கி. இன்றைக்கு இந்த பாறையிலேயே படுத்து தூங்கிடலாம் என்று நினைத்தாள். நினைத்தாள் அவ்வளவுதான்.
அவளிருக்கும் மனநிலையில் துயில் கண்ணை எட்டி பார்த்திடுமா என்ன.
கரும்பாறை அதன் மீது ஒரு பேச்சுக்கு படுக்கை கொண்டாள் பயம் கொண்ட நங்கை அவள். ஜில்லு தண்ணியில் முதலில் போட்ட ஆட்டத்திற்கு இப்போதுதான் ரிசால்ட் கிடைக்க ஆரம்பித்திருந்தது. கிடுகிடுத்தது பெதும்பையின் உடல்.
குளிரோடு குளிராக தேகத்தை அவளின் கையாலேயே கட்டியணைத்து கொண்டாள் நேரிழை அவள் குப்பிற படுத்த வாக்கில். நயனங்கள் ரெண்டும் சொருகிட ஆரம்பித்தது மிருவிற்கு.
கண் இழுத்துக் கொண்டு போக, நித்திரையில் சஞ்சரிக்க நினைத்தவளின் மிழிகள் ரெண்டும் படக்கென்று திறந்தன.
அலறினாள் மிரு உயிரே போகின்ற வலியில் படுத்த நிலையிலேயே.
வயமா அவன் நகங் கொண்டு கீறி நின்றான் ஒளியிழையின் முதுகினில் புலி டாட்டூவை.
அந்திகை அவள் சுதாரிக்கும் முன் கோபங் கொண்ட வேங்கையவன் கவ்வியிழுத்து ஓடினான் ஆயிழையின் காலை தரதரவென்று.
மிருவோ நிலத்தினில் காயம்பட்ட முதுகு சேர்த்து இழுக்கப்பட உயிரே போகின்ற ரணத்தினை உணர்ந்தாள். கத்தினாள் கதறினாள் காலில் வேறு கோர பற்களின் தடங்கள் மரண ரோதனையைக் கொடுத்திட.
ருசியான டின்னரை சுவைத்திட அவன் கோட்டையை நோக்கி இழுத்து ஓடினான் வயமா அவன் சிக்கியிருந்த மனித பிரியாணியை.
தீவியின் ஆரணியம்...
முந்தைய அத்தியாயங்களை படிக்க:
https://amydeepz.com/forums/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D.38/

Author: KD
Article Title: தீவியின் ஆரணியம்: 5
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.