What's new

Welcome!

ஹாய் டார்லிங்ஸ்! வெல்கம் டூ எமி தீப்ஸ் நாவல்ஸ் சைட்! இணைந்திடுங்கள் & மகிழ்ந்திடுங்கள்!

SignUp Now!

KD

Administrator
Staff member
Joined
Jul 10, 2024
Messages
414
அத்தியாயம் 107

நிகழ்காலம்


தம்பதிகளின் உறவுக்குள் மூன்றாவது நபருக்கு எப்படி வேலையிருக்கக் கூடாதோ, அதேப்போல் ரகசியங்களும் இருக்கக்கூடாது.

அதுவே அவர்களின் உறவை வலுவாக்கி சிறப்பிக்கும்.

கீத்து குறை தன்னில்தானென்று, அவளை டாக்டரிடமிருந்து ஒதுக்கிக் கொண்டாள். விலகி போகும் பத்தினியை விடாது நெருங்கியவனோ, அவளின் ரணமான விழிகளை காண்கையில் தன்னிச்சையாக மனம் பின்னோக்குவதை உணர்ந்தான்.

ஔகத்தில்லா, நிம்மதியையே நறுதுதலவள் விரும்புகிறாள் என்றுணர்ந்தான் ஆணவன். பல தடைகளுக்கு பின்னால் காதல் மணவாட்டியை கரம் பிடித்த ஔகத்தோ, இனியும் அவளை பிரிந்து வாழ முடியாது என்ற முடிவுக்கு வந்தான்.

ஒன்று படாஸ், இல்லையேல் ஔகத்.

இருவரில் ஒருவரே, தொலைந்தவளாய் கிடக்கும் வல்லபியை மீட்டு வர முடியும் என்று என்று ஆழமாய் சிந்தித்து பல திட்டங்களை வகுத்தான் ஔகத், வருங்காலத்தை மனதில் கொண்டு.

யுவதியவள் பழையப்படி ஆணவனோடு கொஞ்சி பேசிடா விட்டாலும் பரவாயில்லை. ஆனால், இப்படி முடங்கி போயிடக்கூடாது. அதுவே வேண்டும் டாக்டருக்கு.

அதுவும் மங்கையவள் விரும்பி அணிந்த போலீஸ் சட்டையை யாருக்காகவும், எதற்காகவும் பெண்டு அவள் தூக்கிப்போட்டிடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தான் ஔகத்.

பறந்தான் ஜெர்மனுக்கு டாக்டரவன் பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வர, ரெண்டு வாரங்களாய் இட்லி சட்டினியாய் இருந்த தம்பதிகள் யாரோ போலிருக்க ஒரே வீட்டில், நடைபிணமாய்.

முந்தைய ஊடலேதும் இல்லை என்றாலும், அவன் முகத்தை டைனிங் டேபிள் மற்றும் படுக்கையறை என்று டாக்டரை பார்த்திடாமல் இல்லை போலீஸ்காரியவள்.

இருப்பினும், சொல்லிக் கொள்ளாமல் அவன் ஜெர்மன் கிளம்பியது மேலும் நங்கையவளை வேதனைப்படுத்தியது.

ஒரேடியாக போய் விட்டானா, இல்லை காயங்கொண்ட மனதுக்கு மருந்து தேடி போயிருக்கிறானா என்று புரியாது, நாட்களை கடத்தினாள் காவல்காரியவள் தனியொருத்தியாய் அப்பெரிய மாளிகையில், குஞ்சரி தாய்லாந்திலிருக்க.

நெஞ்சம் நொடிப்பொழுதும் ஔகத்தின் புராணம் பாட, கவனத்தை கேசில் செலுத்தினாள் சுந்தரியவள்.

முடிவாகி விட்டது வேலையை விடுவதென்று, அதற்குள் படாஸின் தந்திரமா அல்லது அவனையே பித்தாக்கி திரிய வைத்த கிருத்திகாவின் புத்திக்கூர்மையா என்று ஒருகை பார்த்திட திண்ணம் கொண்டாள் காரிகையவள்.

ஆகவே, விட்ட இடத்திலிருந்து தொடங்கிட முனைந்தாள் முற்றிழையவள்.

நம்பிக்கை என்ற ஒன்றை மொத்தையும் இழந்து நிற்கும் அபலை அவளுக்கு இப்போது யாரை நம்புவதென்று தெரியாத வேளையில், மிகச்சரியாய் வந்தது பரத்தின் அழைப்பு.

சொன்னான் தடவியல் நிபுணன் அவன், ஔகத்தின் டி.என்.ஏ.வில் அவன் கண்ட அதிசயங்களை.

''மேடம், நான் சொல்ல போறே விஷயம் ரொம்பவே பெருசு.''

என்றவன் ஆரம்பிக்கும் முன்னரே தூபத்தை போட, அடிவயிறு கலக்கியது காவல்காரிக்கு. ஏற்கனவே, புருஷனவன் எலி தின்ன கதையை அறிந்தவள், இப்போது எதை தின்னு வைத்திருக்கிறானோ என்று பதைத்தாள், மெல்லியாளவள்.

''இதை நீங்க எப்படி எடுத்துக்க போறீங்கன்னு எனக்கு தெரியலே! ஆனா, மனசே திடப்படுத்திக்கோங்க!''

என்றவனின் பீடிகையில்,

''ஐம் ரெடி பரத்!''

என்ற கீத்துவோ, சுவரில் ரீசனோடு குட்டி கீத்து இருக்கும் புகைப்படத்தின் முன் நின்றவாறு கதை கேட்டிட தயாராகினாள்.

லேப்பிஸ்ட் பரத், தனியார் துப்பறிவாளனான அவன் நண்பன் அசோக் மூலம் தெரிந்துக் கொண்ட விடயங்களை போட்டுடைக்கலானான், டாக்டர் பொண்டாட்டியிடம்.

கீத்துதான் முன்னரே எடுத்து கொடுத்திருந்தால் பரத்திடம், கட்டியவனின் தலை முடி தொடங்கி அவன் பயன்படுத்திய பல் பிரஷ், டவல் என்று அத்தனையையும், பரிசோதனைக்காக.

கூடவே, டாக்டர் அப்போதிலிருந்து இப்போது வரை எடுத்துக் கொள்ளும் டேப்லட்ஸ் மற்றும் இன்ஜெக்ஷனையும் கூட அவனறியாது எடுத்து, அனுப்பி வைத்தாள் லேப்புக்கு டெஸ்ட்டுக்காய் வதூ அவள்.

பேரழகனின் முகம் என்றைக்கு கோர உருவம் கொண்டு அம்மணியை பதற வைத்ததோ, அப்போதே அலெர்ட் ஆகிவிட்டாள் அந்திகையவள், கணவனின் மறுமுகத்தை தோலுரிக்க.

ஔகத்தின் டி.என்.ஏ மற்றும் அவன் உட்கொள்ளும் மருந்துகளையும் பரிசோதித்த பரத்தோ, அவனுக்கு எழுந்த சந்தேகங்களை தீர்த்துக்கொள்ள, அனுப்பினான் அவனின் டிடெக்டிவ் நண்பன் அசோக்கை ஸ்ரீலங்காவிற்கு, கீத்து மூலம் ஔகத்தின் வளர்ப்பிடம் அங்குதான் என்றறிந்து.

மழலை பருவத்தில் பச்சை மாமிசங்களை உண்ட டாக்டரின் மெடிக்கல் ஹிஸ்ட்ரீயில் அவனுக்கு குறு (Kuru disease) என்றழைப்படும் மிக அரிதான நோய் இருப்பதை கண்டறிந்தான் பரத், வெளிநாடு போன நண்பனின் மூலம்,

மனித மூளையின் திசுக்களில் காணப்படும் தொற்று புரதத்தால் (protein) ஏற்படும் இந்நோய், மனிதர்களின் மேல்மாடியை வஞ்சகமின்றி புசித்திடும் கூட்டத்தினரையே பெரும்பான்மையாய் தாக்கிடும்.

ஆனால், ஔகத்திற்கு எப்படி இந்நோய் வந்ததென்று யோசித்த பரத், அவன் எவன் மூளையை தின்று செரித்தான் என்றும் சிந்தித்திட ஆரம்பித்தான்.

இருப்பினும், ஆறு மாதங்களுக்கு பிறகான மெடிக்கல் பதிவுகளில், அவனுக்கு அப்படியான நோய் இருந்ததற்கான தடயமே இல்லாது போனதுதான் பரத்தை அதிர்ச்சியாக்கியது.

ஆகவே, அக்குறிப்பிட்ட ஆறு மாதங்களுக்கு சின்னவனை கேடி எங்கே அழைத்து போனான் என்று அசோக் நாயாய் பேயாய் அலைந்து திரிய, கடைசி வரைக்கும் அவனால் அக்கேள்விக்கு விடைக் காணவே முடியவில்லை.

பதிலற்ற வேள்வியை ஓரந்தள்ளி வைத்த பரத்தோ, ஔகத்தின் மருந்து மாத்திரைகளை ஆராய, கேள்விக்குறியான தேடலுக்கு விடை கிடைத்தது அவனின் ஆராய்ச்சியின் முடிவில்.

இமயமலையில் பூக்கின்ற முக்கால்வாசி பூக்களையே அவனின் பிணி போக்கும் நிவாரணங்களா ஆக்கியிருந்தான் டாக்டர் ஔகத் சர்வேஷ் குமார்.

அதில் முதலிடம் டாக்டர் எடுத்துக் கொண்டிருக்கும் ஓபியோகார்டிசெப்ஸ் சினென்சிஸ் (Ophiocordyceps sinensis) என்றழைப்படும் கம்பளிப்பூச்சி பூஞ்சையிலான மருந்தாகும்.

உயரமான இமயமலையில் வாழும் அந்துப்பூச்சிகளிலிருந்து எடுக்கப்படும் இப்பூஞ்சை பல மருத்துவ நன்மைகளைக் கொண்டதாகும்.

குறிப்பாய், இருமல், மூச்சுக்குழாய் அழற்சி, சிறுநீரகக் கோளாறுகள், ஆண்களின் பாலியல் பிரச்சனை, இரத்த சோகை, ஒழுங்கற்ற இதயத் துடிப்பு, அதீத கொழுப்பு, கல்லீரல் இம்சைகைள் மற்றும் தலைசுற்றல் போன்றவைகள் அதிலடங்கும்.

அடுத்ததாக, ரூ (rue) அல்லது சிட்ரஸ் (citrus) என்றழைக்கப்படும் ரூட்டேசி (rutaceae) இனத்தை சேர்ந்த வில்வ மரத்தின், முதன்மை இரசாயன கூறான, பெர்பெரினை (berberine) கொண்டு உருவாக்கப்பட்ட டேப்லட்டாகும்.

அது நினைவாற்றல் குறைபாட்டை மேம்படுத்தி, மூளையிலிருந்து பெறப்படும் நியூரோட்ரோபிக் காரணி (Brain - derived neurotrophic factor @ BDNF) குளுக்கோஸ் மற்றும் ஆற்றல் வளர்சிதை (glucose and energy metabolism) மாற்றம் ஒழுங்காக இருக்கவும், பி செல்கள் (B cells) சோர்வடையாமல் இருப்பதையும் தடுக்க, டாக்டர் உட்கொள்ளும் மருந்தாகும்.

பி.டி.என்.எஃப் (BDNF) அளவு குறைந்தால், பார்கின்சன் நோய் (Parkinson's disease), அல்சைமர் நோய் (Alzheimer's disease) , மல்டிபிள் ஸ்களீரோசிஸ் (multiple sclerosis) மற்றும் ஹண்டிங்டன் நோய் (Huntington's disease) போன்ற பல நரம்பியல் நோய்களை எதிர் நோக்க வேண்டி வரும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்‌.

இறுதியாக, ப்ளூ போப்பி (blue poppy) என்றழைக்கப்படும், நீல வர்ணத்திலான விஷ குறிஞ்சியாகும்.

அதன் வேர் போதைப்பொருளுக்கான ஆல்கலாய்டுகளைக் கொண்டிருக்கும் விஷமமாகும்.

இவ்வேரிலிருந்து உருவாக்கப்பட்ட இன்ஜெக்ஷனைதான் டாக்டர் அவன் பின்முதுகில் குத்திக் கொள்கிறான்.

இமயமலைப் பூக்களின் ராணியான இந்நறுவீவியின் அபினைதான் (opium), படாஸ் இதுநாள் வரை செய்த கொலைகளின் வலி நீக்கியாக (anesthesia) பயன்படுத்தி வந்தான்.

ஆனால், கீத்து புருஷன் இவைகளை எதற்காக குறிப்பிட்டு பயன்படுத்துகிறான் என்பதை பரத்தால் கணித்திடவே முடியவில்லை, காரணம் ஔகதின் மெடிக்கல் செக் ஆப் அவன் ஆரோக்கியமானவன் என்ற ரிசால்ட்டையே தாங்கி வந்திருந்தது.

அப்படியிருக்க ஏன் இப்படியான மருந்து மாத்திரைகள் டாக்டருக்கு தேவை, என்று சத்தியமாய் பரத்தை போல் கீத்துவிற்குமே புரியவில்லை.

போனை வைக்கும் முன், முடிவுரையாக சொன்னான் தடவியல் நிபுணன் பரத், போலீஸ்காரியின் உத்தம புருஷன் ஔகத்தின் டவலிலிருக்கும் வெண்ணிலா வாசம், செயற்கை அல்ல, இயற்கையானதென்று.

இயற்கை நறுமணமிக்க கரிம இரசாயனமான (aromatic organic chemical compound), கூமரின்ஸ்சிலிருந்து (Coumarins) உருவாகும் பென்சோபைரோன் கலவைகளே (benzopyrone compounds), இப்படியான வாசனையை தருவிக்கின்றன.

இந்நறுமணம் இனிப்பு க்ளோவர் (sweet clover), டோங்கா பீன்ஸ் (tonka beans), சில வகையான இலவங்கப்பட்டை (certain types of cinnamon) மற்றும் செம்புற்று (strawberries) பழங்களில் இயற்கையாகவே காணப்படும் ஒன்றாகும்.

ஆனால், அது எப்படி ஔகத்தின் மீது இயற்கையாகவே வீசுகிறது என்பதுதான் மிகப்பெரிய கேள்விக்குறியாகும்.

அதே வேளையில், இரத்த நாளங்களில் ஏற்படும் இரத்தக் கட்டிகளைத் தடுக்க மற்றும் இதய நோய்களுக்கான மருந்துகளை தயாரிக்கவும் இவ்வாசனை பொருளை மருத்துவத்தில் பயன்படுத்துகிறார்கள்.

கூடவே, குறிப்பிடத்தக்க தாவரங்களிலிருந்து எடுக்கப்படும் கூமரினானது, இரத்த உறைவுக்கான எதிர்ப்பு மருந்தாகவும் (anticoagulant) உருவாக்கப்படுகிறது.

டாக்டர் ஔகத் உண்ணும் மருந்துகளின் விளக்கங்களை கேட்ட காதல் மணவாளியோ, நடமாடும் பார்மஸியான கணவனுக்கு ஏற்படும் வேதியல் மாற்றங்களை சமாளிக்கவே ஆணவன் இது அத்தனையையும் உண்கிறான் என்று பரத்தை அவளின் கூற்றுக்கு ஆமோதிக்க வைத்தாள்.

காவல்காரியிடம் மல்லுக்கட்டிட விரும்பா தடவியல் மன்னனோ, சரி என்றுக் கூறி கோலை கட் செய்தான்.

கிருத்திகாவோ மடிக்கணினியில், கேதார்நாத்துக்கான விமான டிக்கெட்டை புக் செய்து, கர்ணாவுக்கு தந்தியனுப்பினாள் தாய்லாந்து பயணிப்பதாக, லீவு சொல்லி.

படாஸ்...
முந்தைய அத்தியாயங்களை படிக்க:
https://amydeepz.com/forums/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D.14/
 

Author: KD
Article Title: படாஸ்: 107
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top