- Joined
- Jul 10, 2024
- Messages
- 414
அத்தியாயம் 110
இறந்த காலம்
உறவுகள் பல இருந்தும் அனாதையாய் கிடந்த தியூடிதரா ஔகத் சர்வேஷ் குமாருக்கு, தம்பியாக வந்து சேர்ந்தவன்தான் கடல் தாண்டிய சுரஜேஷ்ட ஏகஷ்ருங்கா.
இல்லாது போனவனின் தாக்கத்தை தனிக்க முடியாது அல்லாடியவனுக்கு கடவுள் அளித்த கொடைதான் சுரஜேஷ்.
பாசத்தை காமிக்க எவனுமில்லை என்று கதறிக்கொண்டிருந்தவனுக்கு, அல்வா போல தம்பியொருவன் அண்ணா என்ற அழைப்போடு உரிமைக் கொண்டாட அவனை விட்டிடுவானா ஔகத்.
ஆகவே, பறந்தான் தம்பியோடு அண்ணனவன், ஜப்பானுக்கு.
கேடியோ, மகன் எப்போது குகைக்குள் தன்னிலை உணர்ந்து தியானத்தில் அமர்ந்தானோ, அப்போதே அவனுக்கான மடலை அவன் பேக்கில் வைத்து, அங்கிருந்து கிளம்பி போயிருந்தான்.
சுரஜேஷோடு விமான பயணம் மேற்கொண்ட ஔகத்தோ, அவன் அப்பா எழுதிய கடிதத்தை பிரித்து படித்து புரிந்துக் கொண்டான், இனி அவன் வாழ்க்கையில் கேடி இல்லையென்று.
தந்தையாக, மகனுக்கு அவன் வாழ்க்கையின் உன்னதத்தை எடுத்துரைக்க வேண்டிய கடமையை செவ்வென செய்து முடித்த காரணத்தால், இனி தொடர்ந்து அதை செம்மையாக வளப்படுத்தி, செழிப்பாக வைத்திருக்க வேண்டியது ஔகத்தின் பொறுப்பே என்று சொல்லியிருந்தான் நிமலன் சர்வேஷ் குமார்.
ஜன்னலோர சீட்டில் அமர்ந்தாற்படி மேலிருக்கும் வானையும் கீழிருக்கும் பெளவத்தையும் (கடல்) அமைதியாய் வெறித்த பேரழகனின் தோளிலோ, தலை சாய்த்து நிம்மதியாய் உறங்கிக் கொண்டிருந்தான் சுரஜேஷ்.
அந்நொடியில் தீர்க்கமாய் முடிவெடுத்தான் ஔகத், இனி அவன் வாழ்க்கை தம்பியோடுதான் என்று.
தேடி பிடித்து அழைத்து வந்த அண்ணன் ஔகத்தை அறிமுகப்படுத்தினான் சுரஜேஷ், அவன் தந்தை கெய்டனுக்கு.
தம்பி மகனை பார்த்தவனுக்கோ தம்பியையே பார்த்தது போலிருந்தது. வார்த்தைகள் ஏதுமின்றி, கட்டியணைத்துக் கொண்டான் கெய்டன், கேடியை போலவே புருவங்கள் குறுக்கி, ஒட்டாது எட்டி நின்ற ஔகத்தை நெருங்கி போய்.
மகனவனுக்கோ, கேடிக்கெல்லாம் கேடியையே அணைத்தது போலிருந்தது. விழிகளை இறுக்கமாய் மூடிக்கொண்டவன் சிந்தைக்குள்ளோ, அவன் ஜனித்த வயிற்றை அவ்வப்போது தகப்பனவன் தொட்டு தடவி முத்தமிட்டது ஞாபகத்திற்கு வந்தது.
கருவிலிருந்து மகனோடு கேடிக்கெல்லாம் கேடி தலை முட்டி செல்ல விளையாட்டு விளையாடி, பாட்டுப்பாடிய காட்சியெல்லாம் கருப்பு வெள்ளையாய் மிழிகளை தாண்டிய இருட்டில் படம் ஓட்ட, டேடி என்று கத்தி அலற பார்த்த வாயை அடக்கி, மனதால் மட்டுமே முழக்கம் கொண்டான் நிமலனின் மகன், குழப்பங்கொண்டாலுமே.
ஔகத்தின் கன்னத்தை வருடிக் கொடுத்த கெய்டனோ, தெரிந்த எதையும் உணர்ச்சி பூர்வமாக காட்டிக் கொள்ளாது மறைக்க, பேச வேண்டிய நேரத்தில் மௌனம் காத்த சுயநலமான வாயோ, மறந்துவிட்டது ஏட்டிக்கு போட்டியான கண்களோ நிஜத்தை உணர்த்தி ஆணவன் திட்டிகளை குளமாக்கி விட்டதென்பதை.
நேரடியற்ற தொடர்பில் பூத்த மகனை ஆரத்தழுவி செல்லங்கொஞ்ச கைகள் பரபரத்தாலும், அவசரச் செயல் தேவையற்ற பூதகரத்தை கிளப்பிடுமோ என்று நெருடல் கொண்டான் கெய்டன்.
மகன் சுரஜேஷ் நகர, தன்னின் சரிப்பாதியான உணர்ச்சிகளில் கருவாகி வளர்ந்து நிற்கும் ஔகத்தின் முகத்தை இருக்கரங்களால் பற்றி வைத்தான் நெற்றி முத்தமொன்றை கெய்டன்.
ஆணவன் இதழொத்தலில் கேடிக்கெல்லாம் கேடியை உணர்ந்த மகனோ,
''உங்களோ நான் அப்பான்னு கூப்பிடலாமா?''
என்று கேட்க, ஆனந்தம் அகத்துக்குள் கூத்தாடியது கெய்டனுக்கு. கேடிக்கு எதுவும் தெரிய வேண்டாமென்று கறாராய் சொன்னவனோ, மீகனுக்கு தகவல் சொன்னான் இனி ஔகத் அவன் பொறுப்பென்று.
புதிய குடும்பம் கிடைக்க பெற்ற சின்னவனோ, தம்பியின் பிரச்சனையை பற்றி கெய்டனிடம் இன்னும் விளக்கமாய் கேட்டுத் தெரிந்துக் கொண்டான்.
அப்பாவை கட்டியணைத்த அண்ணனை இமைக்காது பார்த்த சின்னவனோ, வந்து நின்றான் ஔகத்திடம் அவனையும் அப்படி இறுக பிடித்திடக்கோரி.
சிரித்தவனோ, தம்பியின் ஆசையை நிறைவேற்ற, உள்ளுக்குள்ளோ மின்சார பாய்ச்சல் ஒன்றை கொண்டான் ஔகத். மடிந்து போன இரட்டையனின் கதகதப்பை உணர்ந்தான் பேரழகனவன், தம்பியின் அணைப்பில்.
அவனோ குட் நைட் சொல்லி படுக்க போக, ராவெல்லாம் தூக்கங்கெட்டு போனான் ஔகத்.
ஹைபிரிட் கருவாக்க, சுரஜேஷை என்னவெல்லாம் செய்து தொலைத்தார்கள் என்பதை, என்னதான் கெய்டன் ஓரிரு வாக்கியங்களில் ஔகத்திடம் கூறி இருந்தாலும், மூத்தவனுக்கோ சில விஷயங்களை மேலும் அலசி ஆராய தோன்றியது.
பதினைந்து வயதில் கெய்டனின் லேப்புக்குள் நுழைந்தான் ஔகத். கஜேந்திரனின் பேரனை பார்த்த மியாவிற்கோ சந்தோஷம் தாளவில்லை.
நடையில் கஜேனின் கம்பீரத்தை கொண்டிருந்த ஔகத்தை கண்ட பாட்டியோ, ஓடிப்போய் இறுக அணைத்துக் கொண்டார் நண்பனின் மூத்த பேரனை.
கெய்டன் சொல்ல வேண்டிய சில சம்பவங்களை மட்டும் சொல்லியிருந்தான் தாயாக அவனை வளர்த்த மியாவிடத்தில்.
மருத்துவ ரீதியான ஆராய்ச்சியில் விருப்பம் கொண்ட ஔகத்திற்கு எல்லாமுமாய் மாறினார் மியா.
கற்றுக்கொள்ள ஆர்வங்கொண்டவனுக்கு அனைத்தையும் சொல்லிக் கொடுத்தார் மியா. பள்ளிக்கூடம் போகாமலே ஹோம் ஸ்கூலிங் கொண்டான் ஔகத், விஞ்ஞானமும் மெய்ஞானம் படித்து.
இருப்பினும், சாதாரண குழந்தைகளை விட, ஔகத் அதீத புத்திசாலியாய் இருப்பது சந்தேகத்தை கிளப்பியது மியாவிற்கு.
காரணம், ஔகத்தின் வேகமும் விவேகமும் ஹைபிரிட் பேரனான, சுரஜேஷ்ட ஏகஷ்ருங்காவை விட பன்மடங்கு முந்தியிருந்தது கற்பிதல் வளர்ச்சியில்.
கெய்டனின் காதில் மேட்டரை போட்டு வைத்த மியா பாட்டியோ, ஔகத் துயில் கொண்ட நேரத்தில் அவன் ரத்தத்தை ஊசியால் உறிஞ்சி எடுத்தார்.
குருதியை கொண்டு வந்து ஆராய்ச்சி கூடத்தில் கடை பரப்பிய கெய்டனோ, ரிசால்ட் கண்டு பூரிப்பில் கெத்தாய் ஆர்ப்பாட்டம் கொண்டான்.
''மா, மூளைக்கார நிர்மலனும், முரட்டுத்தன நிமலனும், இனி ஒரே தலைக்குள்ளே தனித்தனி இல்லமா! ரெண்டு ஒன்னாகி, ஓருருவ உயிராகி, தியூடிதரா ஔகத் சர்வேஷ் குமாரா நிக்குதுமா!''
என்ற கெய்டனின் ஆக்ரோஷமான அகம்பாவ சிரிப்பில், அறிவியலும் தலை வணங்கியது கஜேந்திரன் மற்றும் கார்த்திக்கின் அன்றைய சர்ஜரியை நினைத்து.
நிர்மலனின் பாதியும், நிமலனின் மீதியுமாய், பிறப்பெடுத்த கேடிக்கெல்லாம் கேடியின் காதல், கயல் தீராவின் கருப்பையில், கேடியின் விந்தணுவில் உயிர் கொண்டது.
எமனுக்கே விபூதி அடித்து, வாழ பிறந்தவனாய் ஞாலம் பார்த்த ஔகத், சாவன்ட் சிண்ட்ரோம் (Savant syndrome) என்றழைக்கப்படும் ஒரு அரிய நிலையால் பாதிக்கப்பட்டிருந்தான்.
உண்மையில், பழக ஆளில்லை, படுத்து தூங்க பாயில்லை, என்றவனுக்கு அனைத்தும் நல்லப்படியாகவே கிடைத்தது மடத்தில். ஆனால், யாரோடும் உறவை வளர்த்துக் கொள்ளாது, தனியொருவனாகவே வளர்ந்தது ஔகத்தான்.
உண்ணும் நேரத்தை தவிர்த்து சிறு கல்லில் கூட சிற்பம் செதுக்கும் ஆற்றலைக் கொண்டிருந்தான் ஆறு வயதிலேயே ஔகத். மணலில் படம் வரைந்தவன், பலகையில் ஓவியம் தீட்டினான்.
மதகுருக்களை காண வரும் வெளிநாட்டவர்களை தூரத்திலிருந்து இமைக்காது பார்த்திடுவான் சின்னவன் அவன். சுற்றுலா பயணிகள் அவனின் அருகில் வர, புது மாப்பிள்ளை போல் தலை குனிந்துக் கொள்வான் ஔகத், அந்த ஐந்து வயதிலும் கூச்சங்கொண்டு.
சாக்லட், மிட்டாய் என்று உணவு பதார்த்தங்களை கரிசனத்தோட வழங்குபவர்களை கண்டு ஓடி போய் ஒளிந்திடுவான் தூணுக்கு பின்னால். கையை மட்டும் நீட்டி, அவர்களின் பயண சஞ்சிகைகள் அல்லது புத்தகங்களையே வேண்டுமென்று கேட்டிடுவான்.
பன்மொழிகளின் அடிப்படை மொழியை மட்டும் பேசிட கற்றுக்கொண்டவன், பின்னாளில் மிக சரளமாகவே, அம்மொழிகளில் கதைத்திட ஆரம்பித்தான்.
தமிழ் மீது தீராக்காதல் கொண்டவன், இலக்கியத்தில் போதைக் கொண்டு இலக்கணத்தில் தெளிந்தான். சகட்டு மேனிக்கு கவி புனைந்தான் யாருக்கும் புரியாத போதும், பத்து வயதில்.
பல குரல்களில் நன்றாக பாடியவன், கேடியிடம் கித்தார் கேட்க, மடத்திற்கு வயலின் முதல் வீணை வரை அத்தனை இசை வாத்தியங்களையும் அன்பளிப்பாய் கொடுத்தான் கேடிக்கெல்லாம் கேடி.
எல்லாவற்றையும் கைதேர்த்தவனாய் வாசித்த ஔகத், அவைகள் ஏதுமின்றி கூட பாடலுக்கு சுருதியையும் ராகத்தையும் சேர்த்தான், கையிலிருக்கும் பொருட்களை கொண்டு, ஒன்பது வயதில்.
எட்டு வயதுக்கூட நிரம்பிடாத நிலையில், இடியாப்ப சிக்கலான பல கணக்குகளை சர்வ சாதாரணமாய் செய்து முடித்தான் ஔகத், சொடக்கிடும் நொடியில்.
படித்தறிந்த நிஜ சம்பவங்களின், நேரம், இடம் மற்றும் நிகழ்வு என்று ஒன்றை விடாது, அப்படியே ஒப்புவித்தான் ஔகத், ஏழு வயது சிறுவனாக இருந்த போதிலும், அசாதாரணமான நினைவாற்றல் கொண்டு.
பொறியியல் படிக்காதே, பதினோரு வயதில் கட்டிடக்கலை மற்றும் வடிவமைப்புகளை பற்றியெல்லாம் மிகத்துள்ளிதமாய் வாதம் செய்தான் ஔகத் பெரியவர்களோடு.
கூடவே, விண்வெளி கொண்டிருக்கும் பல அற்புதங்களையும் கண்கள் மூடி மனக்கண்ணால் கிரகித்து, அவைகளை தத்ரூபமாக்கினான் ஔகத், தூரிகைக் கொண்டு கான்வாசில் பனிரெண்டு வயதில்.
இப்படி பல திறமைகள் மற்றும் அசாத்தியமான ஆற்றல்களை கொண்ட ஔகத்தை அனைவரும் கடவுளின் குழந்தையென ஆராதித்தனர்.
புத்தரின் அருள் பெற்றவன் என்று மடம் சொல்ல, பிஞ்சவன் வரலாறு அறிந்த மூத்த பிக்குவோ, அயவந்தீஸ்வரரால் (சிவன்) ஆசிர்வதிக்கப்பட்டவன் என்றார் ஔகத்தை.
சுஜி என்ன நினைப்பில், கருவாகிய மகனுக்கு, தியூடிதரா ஔகத் சர்வேஷ் குமார் என்று பெயர் வைக்க முடிவெடுத்தாளோ தெரியாது. ஆனால், ஆணவனுக்கு தப்பாது பெயர் வைத்த ஆத்தாக்காரியின் வாயில் சீனியைத்தான் போட்டிட வேண்டும்.
விவரிக்க முடியா பல பெரும் திறமைகளின் கடவுளையே தியூடிதரா என்பர். கிடைப்பதில் திருப்தி கொள்பவனுக்கே ஔகத் என்று பொருள். ஈஸ்வரனின் பல பெயர்களில் சர்வேஷ் என்பதும் ஒன்றாகும். குமார், சொல்லவா வேண்டும், அழகன் முருகனின் பெயர்.
இப்படி பார்த்து, பார்த்து சுஜி தேடி வைத்த பெயர்தான், ஊனாகி உயிராகி, மெத்த படித்த பேரழகனாய் உருக்கொண்டு நிற்கிறது, இன்றைக்கு கிருத்திகாவின் புருஷனாய்.
சாவன்ட் சிண்ட்ரோம் ஏற்படுவதற்கான உண்மையான காரணத்தை மருத்துவர்கள் இன்னும் கண்டறியவில்லை.
இருப்பினும், இந்நிலை கொண்டவர்கள் பெரும்பாலும் ஏதாவதொரு வகையில் ஆட்டிசம் குறைப்பாடு (Autism spectrum disorder @ ASD) கொண்டவர்களாகவே இருக்கின்றனர்.
ஆனால், அதே வேளையில் சாவன்ட் சிண்ட்ரோம் கொண்ட அறிவாளிகள் அத்தனை பேரும் ஆட்டிசம் நோய் கொண்டவர்கள் என்று முத்திரைக் குத்திடவும் முடியாது.
ஆகவே, ஔகத்தை பொறுத்த மட்டில் அவனை ஆட்டிசம் பர்சன் (autism person) என்று பொத்தம் பொதுவாய் சொல்லிடவும் முடியாது, அப்படி இல்லை என்றிடவும் முடியாது.
கலைத்து போட்டவைகளை திரும்ப அடிக்கி, கலைக்கும் குணம் அவனுக்கில்லை.
ஆனால், புறக்கண்ணால் பார்க்காதே, மனக்கண்ணால் பார் என்ற வார்த்தையை திரும்ப திரும்ப சொல்லி, சந்தோஷப்பட்டுக் கொள்வான் ஆணவன், மழலை பருவம் முதற்கொண்டே.
கேடிக்கெல்லாம் கேடி சொன்ன வார்த்தைகள்தான் இது, சுஜியின் வயிற்றில் துளிர்த்திருந்த உயிரிடத்தில்.
நிமலனை பார்க்காதே, அவனுக்குள்ளிருக்கும் நிர்மலனை பார், என்பதே அன்றைய கேடிக்கெல்லாம் கேடியின் இவ்வாக்கியத்தின் உள்ளர்த்தமாகும்.
கவி கொள்ளும் தமிழில் தனித்துவம் வேண்டுமென்று விரும்பிய ஔகத், அதைப்பற்றி யாரிடமும் கலந்தாலோசிக்க மறுத்தான். காரணம் அவன் போல் சங்ககாலத்து கொங்கை தமிழ் இலக்கியம் அறிந்த பட்சிகள் யாரும் அவனுடன் இல்லை என்பதால்.
ஆகவே, அவன் விருப்பு வெறுப்புகளை அவனோடு மறைத்துக் கொண்டான் ஔகத், மற்றவர்களின் பார்வையும் அவன் பார்வையும் அவன் பிடித்தங்களில் வெவ்வேறு கோணங்களை கொண்டிருக்க.
அழுகை, கெஞ்சல், கதறல் போன்ற அலறல் சத்தமெல்லாம் ஔகத்திற்கு சுத்தமாய் பிடிக்காது. எரிச்சலில் கோபங்கொண்டிடுவான்.
இருப்பினும், என்ன செய்ய, அவன் விதி. வாய்ச்ச கீத்துவிற்கோ, வாய் தெற்கிலிருந்து மேற்கு வரை நீண்டு கிடக்கிறது.
சாவன்ட் சிண்ட்ரோம் நோயும் அல்ல, கோளாறும் அல்ல. ஆகவே, இந்நிலைக்கு சிகிச்சையும் தேவையில்லை.
மூளையிலிருக்கும் சரடுகள் ஏகத்துக்கு பொறுப்பற்று எசக்கு பிசக்காய் பின்னி கொள்வதால் இந்நிலை ஏற்படுகிறது என்று மருத்துவம் சொல்கிறது.
இப்படி நிர்மலன் மற்றும் நிமலனின் கலவையில் வளர்ந்து நிற்கும் மகனுக்கு இருக்கின்ற அதே அசாத்திய கூறுதான், மகன் சுரஜேஷ்ட ஏகஷ்ருங்காவிற்கும் இருப்பதை புரிந்துக் கொண்டான் கெய்டன்.
கேடியின் விந்தில் உருவாகி மரித்த, குழந்தையின் ஸ்டெம் செல்களைதான் (stem cells) ஹைபிரிட் கருவான சுரஜேஷுக்குள் செலுத்தியிருந்தான் கெய்டன். ஆகவே, கெய்டனின் மகன் அறிவாளியாக இருப்பதில் ஒன்றும் ஆச்சரியமில்லையே.
இருப்பினும், இப்படியான நற்செய்திகளை ஓரந்தள்ளிய கெய்டனோ, பரம்பரை வியாதியிடமிருந்து எப்படி ஔகத் தப்பித்தான் என்று ஆராய்ச்சிகளை மேற்கொண்டான்.
மியா பாட்டியோ, மூத்த பேரனிடம் அவனுக்கு இருக்கின்ற சிண்ட்ரோம் பற்றி சொல்ல, தெரியாததை தெரிந்துக் கொண்ட பூரிப்பில் மிதந்தான் ஔகத்.
இருந் போதும், அப்பன் அந்தப்பக்கம் வேலையை ஓட்டிட, மகன் ஔகத்தோ, தம்பி சுரஜேஷின் உயிரணுக்களை ரகசியமாய் பரிசோதித்திட திட்டம் தீட்டினான், இந்தப்பக்கம்.
தம்பிக்கு நடந்த ஸ்டெம் செல்கள் பரிமாற்றத்தினை பற்றி சொல்லிய கெய்டன், அதன் டோனர் (donor) யாரென்று சொல்லிடவில்லை ஔகத்திடம்.
அது தார்மீகமற்றது என்பதை ஆணவனும் அறிவான். ஆகவே, அவனும் அதை பற்றி பெரிதாய் அலட்டிக் கொள்ளவில்லை.
இருப்பினும், சுரஜேஷின் பல நடவடிக்கைகள் ஔகத்திற்கு சந்தேகத்தை வர வைத்தது கெய்டனின் சர்ஜரியில்.
சுரஜேஷ் அழகாய் படங்கள் வரைந்தான். கித்தார் இசைத்தான். ஆனால், எல்லாவற்றையும் இடது கையால் செய்தான்.
தமிழ் என்றால் உயிரென்றான். கவிதைகள் பல, பன்மொழிகளில் புனைந்தான். குரல் மாற்றி பாடல்களும் பாடினான்.
சொடக்கிடும் நொடியில் அரை டஜன் புத்தகங்களை படித்து முடித்தான். கணக்கையெல்லாம் பிச்சி உதறினான்.
சரி இதுவெல்லாம் சாவன்ட் சிண்ட்ரோமின் வேலையாக இருக்குமென்று மனதை தேத்தினால், அப்போதும் நிம்மதியற்றே தவித்தான் ஔகத் மனம், மனக்கண்ணால் பார்க்க சொல்லி நச்சரிக்க.
சுரஜேஷோ சாந்த சொரூபனாக காட்சியளித்தான். அதீத சிவபக்தி கொண்டான். சைவமே அவன் சாய்ஸ் என்றான். படிக்கையில் மூக்கு கண்ணாடி கொண்டான்.
கோலார் கொண்ட லோங் ஸ்லீவ் சட்டையின் கையை முழங்கை வரைக்கும் மடக்கி விட்டான். வெள்ளை மற்றும் கருப்பு வர்ணங்களை விருப்ப வர்ணங்களாக கொண்டான்.
இடக்கையால் உண்பவன், விழிகளால் புன்னகைக்கும் வித்தையைக் கொண்டான். கழுத்தில் எப்பொழுதும் ருத்ராச்சம் கொண்டான். பைக்கை விட, காரையே தேர்வாக கொண்டான்.
காதில் கடுக்கன் கொண்டான். கழுத்தில் தங்க செயின் கொண்டான். பார்க்க ஸ்மார்ட் லுக் ஜீனியஸாக தெரிந்தான்.
ஔகத்திற்கோ, தம்பி சுரஜேஷின் செயல்களை காண்கையில் அவன் தந்தை கேடிக்கெல்லாம் கேடியையே பார்ப்பதை போலிருந்தது.
அதுவும் அடிக்கடி அவன் அண்ணனின் தலை கோதி, ஔகத்தின் மயூர மிழிகளை இமைக்காது பார்த்திடுவான் சுரஜேஷ், எப்படி கேடிக்கெல்லாம் கேடி காதல் மணவாட்டி சுஜியை பார்த்திடுவானோ அப்படியே.
ஔகத்தால் சர்வ நிச்சயமாய் உணர முடிந்தது அப்பார்வைகளின் தாக்கத்தை அவன் உள்ளத்தில்.
ஔகத்தின் கால்களை தூக்கி அவன் மடியில் வைத்துக் கொள்வதென்ன, அவனுக்கு சாப்பாடு ஊட்டி விடுவதென்ன, தலை கசக்கி விடுவதென்ன, துணிமணிகளை அயர்ன் செய்து வைப்பதென்ன, என்று ஒட்டி பிறந்தவன் கணக்காய் அண்ணனின் மீது பாசத்தை கொட்டினான் சின்னவனவன்.
சமையலில் நாட்டங்கொண்டவன், யாரும் சொல்லிக் கொடுக்காமலே பல நாட்டு உணவுகளை சமைத்து பரிமாறினான் ஔகத்திற்கு. பிஸ்கட், கேக் என்று அசத்தியவன், கிளாஸ் போகும் அண்ணனுக்கு ஆகாரங்கள் கூட பார்சல் செய்து கொடுத்தான்.
எதை மறந்தாலும், சூரியன் உதிக்கையில் ஔகத்தின் நுதலில் முத்தம் வைப்பவன், இரவு அவன் உறங்குவதை ரசித்து, பின், நெற்றியில் இதழொத்தி அவன் பக்கத்திலேயே படுத்துக் கொண்டான்.
ஔகத்திற்கோ, முன்பு கருவாய் ஐம்புலன்கள் மூலம், ஆணவன் உணர்ந்த அவனின் பெற்றோர்களான கேடிக்கெல்லாம் கேடியையும் சுஜியையும், தம்பி சுரஜேஷ் கண் முன் கொண்டு வருவது போலிருந்தது.
மாதங்கள் கடக்க, அப்பா பாசமில்லை, அம்மா கூட இல்லை என்று புலம்பிய ஔகத், தம்பியின் செயல்களில் அதீத மன அழுத்தமே கொண்டான், அலாதியான அன்பில் திளைத்து.
இதற்கெல்லாம் கண்டிப்பாய் ஒரு முடிவு கட்டியே ஆகவேண்டுமென்று நினைத்தவன், முன்னாளில் யோசித்து பின் கைவிட்ட, சுரஜேஷின் டி.என்.ஏ. பரிசோதனையை மீண்டும் தொடங்கினான்.
பதில் எதுவாகினும், சுரஜேஷ்ட ஏகஷ்ருங்காதான் அவன் தம்பி என்பதில் எவ்வித மாற்றமுமில்லை என்பதை ஆணித்தரமாக மனசுக்குள் பதித்துக் கொண்டான் ஔகத்.
நியூரோசர்ஜன் கெய்டன்தான் ஹைபிரிட் கருவான சுரஜேஷுக்கு ஆப்ரேஷன் செய்தவன் என்பதால் தேவையான தகவல்களை ஒரு கட்டத்துக்கு மேற்பட்டு ஔகத்தால் கறந்திட முடியவில்லை அப்பனிடமிருந்து.
அவனோ, மகன் தெரிந்துக் கொள்ள வேண்டியவைகளை மட்டுமே சொல்லி ஔகத்தின் தேடலுக்கு முற்று புள்ளி வைத்தான்.
ஆகவே, வேறு வழியில்லாத ஔகத்தோ, தம்பியிடமே நேரடியாய் வேண்டியதை கேட்க, அவனோ அண்ணனுக்கு இல்லாததா என்றுக்கூறி, மொத்த உடலையும் காண்பித்தான், எங்கு வேண்டுமென்றாலும் குத்தி எடுத்துக்கொள் குருதியை என்று.
நிம்மதி பெருமூச்சு கொண்ட ஔகத்தோ, தம்பிக்கு தெரிந்தே எல்லாவற்றையும் செய்தான், கெய்டன் மற்றும் மியா மட்டும் அறியாது.
மிரண்டு போனான் கேடி மவன், பரிசோதனையின் முடிவை கண்ட நொடி.
கயலின் வயிற்றுக்குள் ஜீவித்து, பின் மரணத்தை தழுவிய கேடி குடும்பத்து வாரிசின் ஸ்டெம் செல்கள், சுரஜேஷின் வாழ்க்கையையே புரட்டி போட்டிருந்தது.
ப்ளூரிபோடென்ட் செல்கள் (pluripotent cells) என்பவைகள் வேறுபடுத்தப்படாத செல்கள் (undifferentiated cells) ஆகும். இது உடலில் எவ்வகையான உயிரணுவாகவும் உருவாகிடும் வரம் பெற்றதாகும்.
பொதுவாக, இவை ஆரம்பகால கரு ஸ்டெம் செல்கள், எலும்பு மஜ்ஜை மற்றும் குடலின் புறணியிலும் காணப்படும்.
சேதமான அல்லது நோயுற்ற செல்களை மாற்றிடவும், புதிய செல்கள் அல்லது திசுக்களை உருவாக்கிடவும் இந்த ப்ளூரிபோடென்ட் செல்கள் பயன்படுத்தப்படும்.
கெய்டன் ஹைபிரிட் மகனை காப்பாற்ற, கேடியின் செத்த மகனின் கரு ஸ்டெம் செல்களை அஃறிணையானவனுக்குள் வைக்க, மரித்தவனின் டி.என்.ஏ.வோ சுரஜேஷின் உயிரணுக்களோடு (DNA) ஒருங்கிணைந்து போயின.
அதுவே, ஏகஷ்ருங்காவின் தன்மையையும் மாற்றியுள்ளது.
நிர்மலனின் பாதியை உள்ளடக்கமாய் கொண்ட கேடியின் விந்தணு, கயல் தீராவின் கருமுட்டையோடு கலந்து, ஒட்டிடா இரட்டையர்களை உருவாக்க, குழந்தைகளின் டி.என்.ஏ.வோ மூவரின் கலவையை கொண்டிருந்தது.
காரணம், எப்போது கேடி உடம்பளவில் நிர்மலனின் பாகம் கொண்டானோ, அப்போதே அவனின் டி.என்.ஏ.வில் அவனோடு ஒட்டி பிறந்தவனின் உயிரணுக்கள் கலந்து மாற்றத்தினை ஏற்படுத்திட தொடங்கி விட்டன.
இருப்பினும், டி.என்.ஏ. மாற்றங்கள் எந்தளவுக்கு ஒருவரின் குணாதிசயங்களை மாற்றிடும் என்ற கேள்விக்கான ஆராய்ச்சிகள் இன்னும் நடந்துக் கொண்டுதான் இருக்கின்றன.
இப்படியான பல விடயங்களை முன்னிறுத்தியே, சுரஜேஷ்ட ஏகஷ்ருங்கா, ஆஸ்தான மூளைக்காரனான கேடிக்கெல்லாம் கேடியின் குணாதிசயங்களை கொண்டவனாக ஔகத்தின் முன் வளம் வருகிறான்.
படாஸ்...
முந்தைய அத்தியாயங்களை படிக்க:
https://amydeepz.com/forums/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D.14/

Author: KD
Article Title: படாஸ்: 110
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.