- Joined
- Jul 10, 2024
- Messages
- 412
அத்தியாயம் 126 (இறுதி அத்தியாயம்)
மழைக்கு பின்னான மாலியின் கதகதப்பில், இதமாய் தோன்றும் வானவில் போல், அகம்பாவ கள்ளியான கிருத்திகாவின் திமிரில், வாலிபம் பூத்திடும் முன்னரே, காதலை அள்ளித் தெளித்து, தெரியிழையின் மனம் வென்ற பேரழகன், தியூடிதரா ஔகத் சர்வேஷ் குமார் என்ற ஒருவனே.
தடைகள் பலத்தாண்டி காதல் சீமாட்டியவளை கரம் பிடித்த ஜீனியஸோ, அவனை காத்துக்கொள்ள மறந்த கதைதான் புரியவில்லை பொஞ்சாதி அவளுக்கு.
இன்றளவும் வாய் திறவாது இருந்தவன் மூச்சை நிறுத்துகையில் கூட ஒரு வார்த்தை தவறாய் சொல்லிடவில்லை கல்நெஞ்சுக்காரன் படாஸை பற்றி.
போகையில் கூட முறுவல் கொண்ட கன்னக்குழி அழகனாகவே போய் சேர்ந்திருந்தான் ஔகத், இம்மியளவு கவலையைக் கூட கண்ணில் காட்டிடாது.
எல்லாவற்றிக்கும் பொண்டாட்டியின் மீது அவன் கொண்ட அளவுகடந்த காதலே காரணம்.
எங்கே அவன் அச்சத்தில் பிடிக்கொண்டப்படியே உயிர் நீத்தால், வாழப்போகும் வதனியோ, இனி வாழ்நாள் முழுக்க அதையேக் கட்டிக்கொண்டு கிடப்பாளென்ற சஞ்சலமே அவனுக்கு.
இருந்தாலும் சரி, இறந்தாலும் சரி, அன்பை மட்டுமே பிரதானமாய் கொண்டு வருங்காலத்தைக் கடத்திட சொல்லித் தந்து போயிருந்தான் காதல் மணாளன் அவன், சீமாட்டியவளுக்கு.
கண்கள் ரெண்டும் கீத்துவையே வெறித்திருக்க, உயிர் துறந்திருந்த ஔகத்தையே இமைக்காது பார்த்தாள் பரவையவள் பேயறைந்தவள் போல்.
தலைவிரிக்கோலம் கொண்ட கோதையின் கன்னத்திலோ, மெல்லிய குருதி கோடுகள். செத்து கிடப்பவனின் விரலால் விளைந்த காதலின் கடைசி வருடல்கள் அவை.
மென் நடுக்கத்தோடு கன்னத்தில் வீற்றிருந்த உதிரத்தைத் தொட்ட தெரியிழையோ, மீண்டும் அவ்விரல்கள் கொண்ட உள்ளங்கையைப் பார்க்க, அதிலோ ஔகத்தின் சிரித்த முகமே தெரிந்தது.
விட்டுப் போனவன் என்னவோ அவன்தான். ஆனால், பிரிந்திருந்தவளின் தேகம்தான் குளிர்ந்துக் கிடந்தது.
பொட்டல் காடாய் உணர்ந்தாள் டாக்டரிடன் திருமதியவள், அவனின்றிய தனிமை அதற்குள் பேடையின் நெஞ்சுக்குள் வெருமையைத் தர.
நானிருக்க மாட்டேன், அவனிருப்பான் என்றவன், சொன்னவன் இல்லாது போனால், கேட்பவள் இருந்திடவே மாட்டாள், என்ற நிதர்சனத்தை அறியாது போனதுதான், சிவனின் சதியே.
தரை கொண்ட சக்குகளை மெதுவாய் மேலேற்றினாள் கீத்து.
''ஔகத்! ஔகத்!''
என்றவளோ செத்துக் கிடப்பவனை அழைத்தாள் பெயர் சொல்லி.
''லோங் ட்ரைவ் போகணும் போலிருக்கு ஔகத்! வா, போகலாம்!''
என்றவளின் உதடுகளோ மழலையை போல் பிதுங்கியது, கண்ணீரோ நாசியைக் கடந்து தரையில் மொட்டு விட.
''பைக்லே போகலாம் ஔகத்! வா! வா ஔகத்!''
என்றவளோ தரையில் கிடந்தவன் கை விரல்களை பிடித்து இழுத்தாள் அவன் உள்ளங்கை உரிமையானவளின் கண்ணீரில் ஈரமாகி போக.
தாரமவள் கண்ணை கசக்கினாலே தாளமாட்டாத ஔகத், இப்போது இளம்பிடியாளவள் நாதியற்றவளாய் மிழிகளில் அருவிக் கடல் கொள்ள, விதியின் தலையெழுத்தால் அசையாமலே கிடந்தான்.
''வர மாட்டியா ஔகத்?! வர மாட்டியா?! வா, ஔகத்!''
என்றவளோ அவன் கையை பிடித்து உலுக்கி ஆட்டினாள்.
கண்ணீர் தானாய் பெருக்கெடுக்க, பாவையின் மூடாத கருவிழிகளுக்கு முன்னோ, ஔகத் முதன் முதலாய் முற்றிழையைப் பார்த்த நிமிடங்கள் கருப்பு வெள்ளை படமாய் விரிந்தது.
இருவரின் நேத்திரங்களும் நேரடியாய் பார்த்த அந்நொடியை நினைவுக்கூர்ந்த காரிகையோ, நீண்டதொரு மூச்செடுப்பு கொண்டாள்.
ஔகத்தின் மரித்த முகத்தை சத்தமில்லா அழுகையோடு பார்த்த மங்கையோ, கிடுகிடுத்த கரங்கொண்டு அவன் கன்ன ஓரத்தை மென்மையாய் வருடினாள்.
'என்னடி பொண்டாட்டி டின்னர் வேணுமா?!'
என்றவன் குரலோ செவிக்குள் கேட்க, கண்ணீரில் பாரமாகி போயிருந்த இமைகளை இறுக்கமாய் மூடிக்கொண்டாள் வல்வியவள்.
கரத்தை பட்டென பின்னிழுத்து, வாய் பொத்தி, குலுங்கி கதறிய காந்தாரியின் மனமோ, வதூவளின் கையை ஔகத் பிடித்திழுத்திட மாட்டானா என்று வெம்பியது.
''பசிக்குது ஔகத்! பர்கர் வேணும்! வா, வந்து வாங்கிக்கொடு! வா, ஔகத்!''
என்ற ஒளியிளையின் மூக்குச் சளியோ இதழ் கடந்து ஓரம் போனது.
ஏதாவதொரு அதிசயம் நிகழ்ந்திடாத என்று ஏங்கியது ஏந்திழையின் காதல் கொண்ட மனது.
யாருமற்ற அனாதையைப் போலுணர்ந்தாள் பேதையவள்.
விழிகளை அங்கும் இங்கும் உருட்டிய ஊடையவள், எப்போதுமே விடாது இழுத்தணைத்துக் கொள்ளும் காஜி மன்னன், இப்போது ஜடமாய் வேடிக்கைக் கொண்டு நிற்கும் அவலத்தை ஏற்க விரும்பாதவளாய் ஔகத்தின் மீது செல்லக்கோபங் கொண்டாள்.
அவன் முகம் பார்க்காது, தரை பார்த்து குனித்துக் கொண்டாள் ஊடல் கொண்ட பைத்தியக்கார அபலையவள் காதல் மூளையை மழுங்கடித்திருக்க.
முட்டாள் அவளுக்குத் தெரியும், தெரிவையின் இச்செயல் யுகங்கள் கடந்தாலும், உயிரற்றவனை மீண்டும் உயிர்ப்பித்திடாது என்று.
இருந்தாலும், அந்திகை அவளால் ஔகத் இல்லாததை ஒருக்காலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. முடியாது மாயோள் அவளால்.
சண்டை போட்டிடவாவது வேண்டும் அவளுக்கு, காஜி மன்னன் அவன்.
பெதும்பையின் உள்ளங்கையில் மென்தாடியிலான கோலங்கொள்ள ஔகத் வேண்டும். நாச்சியவளின் விரல்களை வெறுமனே சப்பி சுவைத்திட ஔகத் வேண்டும்.
நெற்றி அடி வைத்திட ஔகத் வேண்டும். மூக்கை கடித்திட ஔகத் வேண்டும். காதோரக்குழலை பல்லால் இழுக்க ஔகத் வேண்டும். குளியலறையில் இடை வளைக்க ஔகத் வேண்டும்.
மஞ்சத்தில் பல ரவுண்டுகள் போக ஔகத் வேண்டும். நடுராத்திரி கொஞ்சிட ஔகத் வேண்டும். நெஞ்சில் கால் பதிக்க ஔகத் வேண்டும். தொடையில் படம் வரைய ஔகத் வேண்டும். கிள்ளி விளையாட ஔகத் வேண்டும்.
போர்வையாய் ஔகத் வேண்டும். ஆடையாய் ஔகத் வேண்டும். கதமாய் ஔகத் வேண்டும். அழுகையாய் ஔகத் வேண்டும்.
காதலிக்க ஔகத் வேண்டும். லிட்டில் பிரின்சஸுக்கு அப்பா வேண்டும். இப்படி அடுக்கிக் கொண்டே போனது ஆணவனை தொலைத்த பேரிளம்பெண்ணின் மனது.
வீம்பாய் முறுக்கிக் கொண்டு நின்ற அகம்பாவ வள்ளியை, ஒற்றை பார்வையால் அடக்கி மொத்த ஆவியையும் இதழ் வழி கடத்திய விகடகவியவன், இனி வரவே மாட்டானா என்றவள் உள்ளமோ, பாறையை அரிக்கும் உப்பு நீரை போல் ஆயிழை அவளைத் துண்டாடியது.
அகந்தையில் ஆட்டம் போட்ட ஆடவளின் அகங்காரம், ஔகத்தால் தூளாகி போன பழைய சம்பவங்கள் போலான புதுசேதும் இனி நடந்திட வாய்ப்பில்லையே என்றவள் நெஞ்சமோ குமுறியது.
வஞ்சியின் வரட்டு பிடிவாதமெல்லாம் ஔகத்தின் வாஞ்சையான பிடி வேண்டுமென்றிட, எக்கி அவனைக் கட்டிக்கொண்டு கதறினாள் கிருத்திகா உயிரே போகு படியான ஓலங்கொண்டு.
''என் டேடி மாதிரியே நீயும் என்னே விட்டுட்டு போயிட்டியே ஔகத்! போக மாட்டேன்னு சொன்னியே! ஔகத்!''
என்றவளோ அழுகையில் தரையில் கிடந்தவனின் கைகளை, அவளகாவே இழுத்து கோதையவளைக் கட்டிக்கொள்வது போல் முதுகுக்கு பின்னாடி சேர்த்து வைத்துக் கொண்டாள்.
ஏறெடுத்த வண்ணம் உயிரற்றவனின் மரகத பச்சையிலான சாக்குகளைப் பார்த்தவளோ அவன் மார்பில் முகத்தைப் புதைத்துக் கொண்டாள்.
''என்னையும் உன்கூட கூட்டிக்கிட்டு போயிடு ஔகத்! என்னாலே நீ இல்லாமே இருக்க முடியாது! கூட்டிக்கிட்டு போயிடு ஔகத்!''
என்றவளின் உதடுகளோ செத்தவனின் இதயக்கூடு கொண்ட குருதில் உழன்று ஒப்புவித்தன.
அரத்தத்தின் சூடு இன்னும் குறைவில்லை. அதில் ஒன்றிக் கிடந்தவனின் தங்கச் சங்கிலியை விரல்களால் பற்றிக் கொண்ட கீத்துவோ கண்ணீர் வழிந்திறங்க மெதுவாய் விலோசனங்கள் மூடினாள்.
அவர்களின் கூடலின் போது ஔகத் நித்தமும் சொல்லும், 'ஐ லவ் யூ கீத்து' என்ற காதல் மொழியே, சுந்தரியவள் செவியை நிறைத்தது.
வல்லபியின் கழுத்தோரம் கள்ளெடுக்கும் கள்வனின் ஸ்பரிசம், பாரியாளை அப்போதும் கூசிட வைத்தது.
அவனிதழ்கள் கொடுத்து பேரும், போதையில் அமிர்தம் தோற்றுப்போய் நிற்கும் எப்போதுமே, கீத்துவிற்கு.
அல்பாயிசில் போகப்போகும் உண்மை தெரிந்ததாலோ என்னவோ, இறுதி முயங்கலில் மோகத்தை ஒதுக்கியவனாய் கீத்துக்குள் திளைத்து, அவள் ஆளா அடங்கிப் போனான் ஔகத் தலையாட்டி பொம்பையாய், அரக்கியிடம் சிக்கிய சேவகன் போல்.
நாணிட வேண்டிய பைந்தொடியோ மஞ்சத்தில் மல்லாக்க கிடந்தவனை காதலோடு நோக்க, பேரலையின் ஆட்சியில் சிறு சிற்பியாய் தள்ளாடிய ஔகத்தோ, அவன் இடை இறுக்கத்தில், இதழ் சுளித்து சுகம் கொண்ட கற்பாளை, கண்ணோரம் கண்ணீர் கொண்டு முகிழ்நகை குறையாது ரசித்தான், அதுவே அவர்களின் கடைசி இணைசேர்க்கை என்பதால்.
காதல் கணவனின் பார்வைகள் ஓராயிரம் அர்த்தங்கொள்ள, அரிமாவை கொஞ்சங் கொஞ்சமாய் வேட்டையாடி ருசித்த பெண் சிங்கம் அவளோ, முன் சரிந்த குழல் அழகனின் விரலில் சிக்கிய தருணத்தில் சிணுங்கி சிலிர்த்தாள் அரக்கன் வேகமெடுத்த புரவியாய் அவளைக் கவிழ்த்து போட்டு ஆட்டத்தைத் தொடங்க.
இப்படி அணு அணுவாய் ரசித்து, ருசித்து உச்சம் தொட்ட வதூ அவள், கனவிலும் நினைக்கவில்லை அதுவே அவளின் கடைசி முகிரமாகி போகுமென்று.
தவறெல்லாம் கீத்துவுடையதுதான்.
அவள்தான் இன்று ஔகத்தின் உயிர் போக காரணம்.
ஒருவனல்ல இருவர் என்றறிந்த பெண்டுவோ அடக்க முடியா ஆத்திரம் கொண்டாள்.
ஏமாற்றமும் விரக்தியும் விறலியை மொத்தமாய் ஆட்கொண்டிருக்க, ரத்த வாந்தி எடுத்த ஔகத்தை தனியே விட்டு கிளம்பியவளோ, நேராய் படாசை நோக்கி நடைப்போட்டாள்.
கீத்துவின் ஓவியத்தோடு காதல் செய்துக் கொண்டிருந்த படாஸோ, நங்கையவளை எதிர்பார்த்தே காத்திருந்தான்.
வருபவள் கண்டிப்பாய் அவனை வெறுத்திட முடியாது, ஒப்பாரியின் முடிவில் அவனிடத்திலேயே சரணடைந்திடுவாள் என்று ரொம்பவே நம்பிக்கைக் கொண்டான் படாஸ்.
ஆனால், கீத்துவோ அவனை நெருங்கிடும் முன்னரே கையில் கன் கொண்டு பழைய போலீஸ்காரியாய் உருமாறியிருந்தாள்.
''டேய், ஃண்டாமவனே! வெட்கங்கெட்ட பரதேசியே! அவனுக்குத்தான் அறிவில்லே! உனக்கெங்கடா போச்சு புத்தி?! அசிங்கமா இல்லே?! ஒருத்தியவே ரெண்டு பேர் மாத்தி மாத்தி! ச்சை! கருமம் புடுச்சவனுங்களா!''
என்றவளின் வக்கிரமான துதி, தூரிகைக் கொண்டிருந்த படாஸின் முகத்தை இறுக்கியது.
''ஐயோ, படாஸ் சார் மன்னிச்சிடுங்க! உங்க குடும்பமே இப்படித்தானே?! அப்பறம் நீங்க ரெண்டு பேர் மட்டும் எப்படி இருப்பீங்க?! குடும்பத்துக்குள்ளையே பார்ட்னர் ஸ்விட்சிங் பன்றிங்களாடா பண்ணாடைங்களா?! ஒருத்திய ஒருத்தனுக்கு மட்டும் புள்ளே பெத்துக்க விட மாட்டிங்க போலே?!''
என்றவளோ அடிகளை முன்னோக்கி வைத்தவாறு தேளாய் வார்த்தைகளைப் பாரபட்சமின்றி தெறிக்க விட, பாடஸின் மண்டையோ சூடேறி போனது.
நடந்திருக்கும் கூத்தறியாது மெல்லியாள் அவளோ கேடி குடும்பத்தையேக் கூறுபோட, பொறுக்க மாட்டாதவனாய் உரும்பிட ஆரம்பித்தான் பாடஸ்.
''ஏய், இந்த உரும்பல் இரும்பலெல்லாம் என்கிட்ட வேணாம்! ஏமாந்த வலியும் வேதனையும் கொடுத்திருக்கறே கோபம் உன்னே விட கோடி மடங்கு அதிகம் எனக்கு படாஸ்! அவனே போடாமே விட்டு வெச்சிட்டு வந்திருக்கறதே உன்னே முதல்லே போடணுங்கறதுக்காகத்தான்!''
என்றவளின் விளக்கத்தில் தூரிகையை உடைத்தெறிந்த படாஸின் உரும்பலில் ஆக்ரோஷம் கூடிப்போனது.
அழகனின் மேனி ரோமமோ கருகருவென அடர்ந்து பெருகியது.
''உன் முகத்தே பார்க்க, நான் துடிக்காதே நாளே இல்லே! ஆனா, இப்போ!''
என்று நிறுத்தியவாளோ காரி உமிழ்ந்து தொடர்ந்தாள் வசையை.
''அம்மா ஸ்தானத்துலே வைக்க வேண்டிய அண்ணன் பொண்டாட்டியே, எப்போ நீ படுக்க போட்டு குடும்பம் நடத்தினியோ, அப்போவே எச்சக்களே நாய் உன் முகத்தே நான் சிதைக்காமே பார்க்க கூடாதுன்னு முடிவு பண்ணிட்டேன்!''
என்றவளோ எட்டடியில் படாஸை நெருங்க, அஃறிணையாய் மாறியிருந்த படாஸோ பேரிரைச்சலான உரும்பலோடு திரும்பிய வேகத்தில் கீத்துவை நோக்கி பாய்ந்தான்.
அதிர்ச்சியில் விக்கித்த சேயிழையின் திட்டிகள் ரெண்டும் அகல விரிந்த நிலையில் மிரண்டு நிற்க, குருதியிலான கரங்கொண்டு அதிர்ந்தவளை இழுத்து ஓரந்தள்ளிய ஔகத்தின் மறு கரத்தின் முழங்கையோ, பாய்ச்சல் கொண்டு வந்த வயமாவாய் படாஸின் கழுத்தில் பலமாய் இடித்தும் கீழிறங்காது அப்படியே நின்றது.
பேரழகனின் மரகத பச்சையிலான நேத்திரங்களோ எச்சரிக்கை விடுத்தன, அவனிருக்கும் வரை படாசால், ஒருக்காலும் திருமதி ஔகத்தை நெருங்கிட முடியாதென்று.
ஔகத்தின் முழங்கை எலும்பு தந்த வலிமையான இடி தாளாது பலமாய் வாய் தாடையில் அடி வாங்கிய புலியான படாஸோ, பறந்து போய் விழுந்தான் தூரத்தில்.
புருஷன் இழுத்து தள்ளிய வேகத்தில் அவன் பின்னால் போய் மீண்டும் முன்னோக்கி திரும்பி வந்த சனிகையோ, மூச்சிரைக்க நின்ற கணவனை கண்டு அதிர்ந்தாள்.
ஔகத்தோ ரத்தக்கோலத்தில் அவன் மூக்கிலிருந்து வழிந்த உதிரத்தை புறங்கையால் துடைத்தப்படி உக்கிரமாய் படாஸையே வெறித்திருந்தான்.
தரையில் விழுந்த கொடுவரியான (புலி) படாஸோ,விழுந்த தடம் தெரியாது, ஏதோ ஒரு மூலையில் சொருகிக் கொண்டு வலியில் கூச்சல் கொண்டான் தற்சமயத்திற்கு.
''என்னங்கடா, பூச்சி காட்டறிங்களா ரெண்டு பேரும்?! இதுக்கெல்லாம் அசர்ரே ஆள் நான் இல்லே! ஒழுங்கு மரியாதையா ரெண்டு பேரும் ஏன் என்னே நம்ப வெச்சு ஏமாத்தனிங்கன்னு சொல்லறீங்க?! இல்லே, காரணமே தெரியாமே போனாலும் பரவாலன்னு ரெண்டு பேரையும் குருவி சுடரே மாதிரி சுட்டுத்தள்ளிட்டு போயிக்கிட்டே இருப்பேன் இந்த கிருத்திகா தீனரீசன்!''
என்றவளோ ஒருகையால் இடையை இறுக்கி மறுகையால் கன்னை அசைத்து ஆர்டர் பிறப்பிக்க, அவளைத் துச்சம் செய்யாத ஔகத்தோ, அவன் முன் வசனம் பேசிய தாரத்தை மீண்டும் தோள் தொட்டு ஓரம் நகர்த்தினான்.
''டேய்!''
என்றவள் சீறவும், அவ்விடத்தின் விளக்குகள் அத்தனையும் அணைந்து போகவும் சரியாக இருந்தது.
சிறு மெல்லிய வெளிச்சம் மட்டும் கும்மிருட்டில் விட்டில் பூச்சியாய் ஒளியேற்ற,
''யாக்கை வென்று
சித்தி தின்று
மூர்த்தி செரித்திடுவேன்!''
என்ற கவியை உரும்பலோடு சொன்ன படாஸோ, விரலை சொடக்கிட்டவாறே நடந்து வந்தான் ஔகத்தை நோக்கி மனித உருக்கொண்டு.
சடீரென்ற உரும்பலில் திடுக்கிட்ட கீத்துவோ, தவற விட்டாள் கையிலிருந்த கன்னை.
அவ்விடத்தின் ஒரு பொட்டு வெளிச்சத்தில், தரையில் துழாவி தொலைத்த கன்னையும் கண்டெடுக்க முடியவில்லை, படாஸின் முகத்தையும் பார்த்திட முடியவில்லை மதங்கியவளாள்.
செவிகளிலிருந்தோ குருதி வழிய, அதைத் தோளால் துடைத்துக் கொண்ட டாக்டரோ சரிவரக்கூட நிற்க முடியாது தள்ளாடினான், நிமிடங்கள் கடக்க.
பரிதாபமான உச்சுக் கொட்டலுடன் ஏளன சிரிப்பொன்றை உதிர்த்தான் படாஸ் வைர மாளிகை அதிர.
இருவரும் ஒரே கூட்டணி என்று நினைத்திருந்த கோற்றொடிக்கோ அப்போதுதான் அங்கு ஏதோ தவறாய் இருப்பது புரிந்தது.
''உடல்..''
என்ற படாஸோ அவனின் வலக்கரத்தை நீட்டி காண்பித்தான் உள்ளங்கையிலிருந்த ஊதா வர்ண திரவ போத்தலை ஔகத் நோக்கி.
வஞ்சகனின் இலவச வழங்கலை பற்றி சிறிதும் கவலைக் கொள்ளா டாக்டரோ, முறைப்போடு அவனை வெறிக்க, கீத்துவோ கையை நீட்டி நின்றவனையும் வெறுமனே இருந்தவனையும் தலையை லெஃப்ட் ரைட் என்று இருப்பக்கமும் திருப்பிப் பார்த்தாள்.
எந்தப்பக்கம் எவன் நிற்கிறான் என்றே தெரியவில்லை தெரியிழை அவளுக்கு. அவர்களின் குரலை வைத்தே யார் எங்கே, என்று அறிந்துக் கொண்டாள் கீத்து.
''ஔகத்..''
என்று கணவனை ஏதோ கேட்க வாயெடுத்த நாச்சியை மிகச்சரியாய் அவளின் வாயை ரத்தம் படிந்த உள்ளங்கையால் மூடி நிறுத்தினான் டாக்டர்.
படாஸோ காலியான அவனின் மறுக்கரத்தை நீட்டி,
''உயிர்..''
என்றுச் சொல்ல, முழுசாய் புரிந்தது ஔகத்திற்கு, முன்னிருப்பவனின் குள்ளநரி புத்தி.
சூட்சமக்காரனான படாஸோ, டாக்டருக்கு தேவையான மருந்தை உடல் என்ற வேள்வியில் முன்னிறுத்தி, உயிரென்ற வார்த்தையில் கீத்துவை பொருள்படுத்தி, ரெண்டில் ஒன்றை தேர்தெடுக்க சொல்லி, ஆடவனவனை இருதலைக்கொள்ளி எறும்பாக்கினான்.
ஆனால், டாக்டரோ உதட்டு கோடுகள் வெடிப்பு கொண்டு செம்பால் கக்கிய நிலையில், இதழோரம் முறுவல் குறையாத போதிலும், இடையில் ஒரு கரம் இறுக்கி, மறுகையால் உதிரங்கொண்டு வலித்த செவியைத் தேய்த்து நின்றான் ஒரு வார்த்தைக் கூட பேசிடாது.
போலீஸ்காரிக்கோ படாஸின் கோர்ட் வெர்டும் (code word) புரியவில்லை, அதற்கு டாக்டரின் பதிலற்ற செயலும் விளங்கவில்லை.
''புறக்கண்ணால் பார்க்காதே தியூடிதரா ஔகத் சர்வேஷ் குமார்! அகக்கண் கொண்டு பார்! அவசியம் அறிவாய்!''
என்ற படாஸோ மீண்டும் குரூரமாய் சிரித்து உள்ளங்கை கொண்ட திரவ போத்தலை விசில் சத்தத்தோடு தாலாட்டினான் டாக்டர் முன்.
ஔகத்தின் முதுகிலோ ரத்தகொப்பளங்கள் பழுத்த மாங்காய் போல் கன்றி காத்திருந்தன வெடித்து சிதற.
உள்ளுக்குள்ளோ ரத்த நாளங்கள் ஆங்காங்கே வீங்கிட ஆரம்பித்தன. டாக்டரின் கைகாலெல்லாம் வெலவெலக்க தொடங்கின.
''தாமதமான வருத்தம் இழப்புகளை ஈடுக்கட்டிடாது தியூடிதரா ஔகத் சர்வேஷ் குமார்!''
என்ற படாஸோ, ஒற்றை விரலால் எச்சரித்தான் டாக்டரை.
இருள் சூழ்ந்த அவ்விடத்தில் ரேவ்வின் கரம் மட்டுமே தெரிந்தது.
மயக்கங்கொண்ட டாக்டரோ ரத்த வாந்தி எடுக்க, தன்னிச்சையாய் கீத்துவின் கால்கள் அவன் பக்கம் போனது.
ஒற்றை முட்டிகால் பட்டென பலமின்றி தரையில் விழுந்து அழுத்தி நிற்க, தடுமாறிய போதும் மறுகால் முட்டியின் மீது கரத்தை பதித்து நெற்றி கேசத்தை கோதி படாஸின் முன் கம்பீரம் குறையாதே இருந்தான் ஔகத்.
''ஔகத், என்ன பண்ணுது உனக்கு?! ஔகத்!''
என்ற பொஞ்சாதிக்கோ, கோபம் காணாது போய் பரிவு வந்து ஒட்டிக்கொண்டது கணவனிடத்தில்.
பெருங்குகைக்குள் ஒரே ஒரு விளக்கிருந்தால் எப்படி இருக்குமோ அப்படித்தான் இருந்தது அவ்விடம் அகல் விளக்கின் துளி வெளிச்சத்தை மட்டுமே கொண்டு.
அவன் முகம் தொட்டு பதறியவளை கண்ட படாஸுக்கோ தேகம் அனலாய் கொதித்தது. காட்சியைக் கண்ணால் பார்த்தவனுக்கோ, ஒரே போடாய் அப்போதே ஔகத்தை போட்டுத்தள்ளிட தோன்றியது.
எதிரியிடம் காதலி கொண்ட பதைப்பு எரிச்சலூட்டியது படாஸுக்கு. பழிவாங்கும் எண்ணம் மென்மேலும் வேரூன்றியது ஆணவனுக்குள்.
''ஔகத்! உன் உடம்ப காப்பாத்த போறே மருந்தா? இல்லே, உன் உயிரே எடுக்க போறே என் கிருத்தியா?!''
என்று ஆவேசங்கொள்ள, படாஸின் டீலிங்கில் கீத்துவிற்கோ தூக்கி வாரிப்போட்டது. யாரை கேட்டு அவளை அவன் பகடைக்காயாக்கினான் என்பதே மிகப்பெரிய கேள்விக்குறியாய் இருந்தது யுவதியவளுக்கு.
''படாஸ் உனக்கென்னே பைத்தியமா?! முதல்லே ஔகத்துக்கிட்ட அந்த மருந்தே கொடு!''
என்ற கீத்துவின் வீரியமான கட்டளையில், உடல் மட்டுமே தெரிந்த படாஸின் முகம் அப்போதும் கீத்துவின் பார்வைகளில் சிக்கிடவே இல்லை.
''மருந்தே கொடு படாஸ்!''
என்றவளோ அவன் உள்ளங்கையிலிருந்த திரவத்தை கைக்கொண்டு எடுக்க முனைய, கையை மடக்கிக் கொண்ட படாஸோ அசையாமலே நின்றான்.
அதிர்ச்சிக் கொண்டவளோ முஷ்டி மடக்கியவனின் கையைத் திறக்க பார்க்க, அப்போதும் படாஸின் ஆக்ஷனில் ரியாக்ஷனே இல்லை.
''படாஸ், என்ன பண்றே நீ?! கையே திற! கையே திற படாஸ்! இப்போ திறக்க போறியா இல்லையா?!''
என்றவளோ காதலனிடம் மல்லுக்கட்ட, டாக்டரோ லொக்கு லொக்கென்று இரும்பல் கொண்டு தவித்தான்.
''படாஸ், மருந்தே கொடு படாஸ்!''
என்றவளோ மீண்டும் பதைக்க, கோபம் தலைக்கேறியது படாஸுக்கு. கையை பட்டென இருட்டுக்குள் இழுத்துக் கொண்டவனோ வாய் பேசாது அமைதியே காத்தான்.
ஏமாற்றிய இருவரையும் ஒருசேர பாடையேற்றிட நினைத்த கீத்துவிற்கோ, இருவரும் பெருசாய் எதையோ மறைக்கின்றனர் என்பது மட்டும் நன்றாக தெரிந்தது.
ஆகவே, ஏமாற்றத்தை உள்ளுக்குள் பதுக்கி, ஆண்கள் இருவரிடத்திலும் பேச்சை வளர்த்தாள் கீத்து, இருவரில் ஒருவனாவது எதையாவதை கக்கிடுவான் என்று.
''சரி, இந்த மருந்தே நீயே வெச்சிக்கோ! ஆனா, உன் முகத்தே காட்டு எனக்கு!''
என்றவளோ பல்லை கடித்தப்படி, ஆணவனை அவள் நோக்கி இழுக்க முயற்சித்து இருட்டில் துழாவ, மயூர கண்ணழகனோ,
''நீ வா கிருத்தி!''
என்று குரலில் இதங்கூட்டி நீட்டினான் அவளிடத்தில், கருப்பு வர்ண துணி ஒன்றை.
குழப்பமாயினும், ரேவ் கொடுத்த கண்கட்டினை கை நீட்டி வாங்க போன மணவாட்டியின் கையை டக்கென குறுக்கே புகுந்தவனாய் பற்றிய ஔகத்தோ, அவளை அங்கிருந்து இழுத்துக் கொண்டு நகர,
''ஔகத் என்ன பண்றே?! விடு! விடு ஔகத்! கையே விடு!''
என்றவளோ அவன் பிடியிலிருந்து தப்பிக்க புருஷனின் கையை விலக்க முயற்சித்தாள்.
''பேசாமே வா கீத்து!''
என்றவனோ இரும்பலின் ஊடே, வாயிலிருந்து ரத்தம் வெளியேற வல்லபியவளை தரதரவென இழுத்துக் கொண்டு நடையில் வேகங்கூட்டினான்.
''ஔகத் என்ன நடக்குது இங்கே?! கேட்கறந்தானே?! ஏன், படாஸ் அவன் முகத்தே காட்டே மாட்டறான்?! சொல்லித் தொலையேன்?! ஔகத் உன்னத்தான் கேட்கறேன்! சொல்லு ஔகத்?! சரி, எதுக்கு இப்போ என்னே இங்கிருந்து இழுத்துக்கிட்டு போறே?! அதையாவது சொல்லேன்?! எதுக்காக படாஸ், உன் உயிரே, எனக்காக பேரம் பேசறான்?! இதுக்காகவாவது பதில் சொல்லேன் ஔகத்?!''
என்றவள் வரிசையாய் கேள்விகளை அடுக்க, ஔகத்தின் சிகையோ கொட்டிட ஆரம்பித்தது.
ஔகத்திற்கு நன்றாக தெரியும் அவனால் கண்டிப்பாய் இப்போரில் ஜெயித்திட முடியாதென்று. ஆனால், அவனுக்கு வேண்டியதெல்லாம் வெற்றியல்ல. படாஸின் வீழ்ச்சியும் கீத்துவின் நலனும்தான்.
அதற்காக அவன் உயிரையே படாஸ் பணையமாக்கினாலும், அதைப் பற்றியெல்லாம் துளியும் சட்டை செய்திடாது கீத்துவை காப்பாற்றுவதிலேயே குறியாய் இருந்தான் ஔகத்.
உயர்திணையாய் இருந்தவன் கோபிதங்கொண்டு (கோபம்) அஃறிணையாய் மாற்றங்கொண்டதே அவன் காதலி கிருத்தியால்தான்.
அடித்தாலும் பிடித்தாலும் படாஸ் அடுத்தவர்களிடம் ஔகத்தை விட்டுக்கொடுத்திட மாட்டான். கீத்து எல்லை மீறி போய் அவன் கதையை முடிக்காமல் விட்டு வைத்து வந்திருக்கிறேன் என்றதே, படாஸை முனிவு (கோபம்) கொள்ள வைத்தது.
சினத்தால் கீத்துவிடம் பாய்ச்சல் கொண்டாலும் படாஸ் ஒன்றும் அவ்வளவு நல்லவனெல்லாம் கிடையாது ஔகத்தின் விஷயத்தில்.
முட்டிக்கொண்டு செத்தாலும், அது படாஸ் கொன்று ஔகத் மரித்ததாகவே இருந்திட வேண்டும் அவனுக்கு.
அதன் முன்னெடுப்பாகத்தான் ஔகத்தின் இன்ஜெக்ஷனில் அவனின் கைவரிசையைக் காட்டிருந்தான் படாஸ்.
இமயமலை மூலிகைகள் கொண்டு ஔகத்திற்காக நண்பன் மமாடி கண்டுப்பிடித்திருந்த திரவத்தில்தான், படாஸ் அவனது வெறுப்பை கலந்திருந்தான்.
காதலியை ஔகத் திருமணம் செய்துக் கொண்ட விடயமே அறியா படாஸோ, சம்பவம் தெரிய வர டாக்டர் மீது கடுங்கோம்பல் (கோபம்) கொண்டான்.
நியாயம் கேட்டிட விரும்பவில்லை படாஸ். காரணம், அவனை பொறுத்த மட்டில் ஔகத்தின் செயலானது விளக்கமற்ற துரோகமே. அவனால் டாக்டரை மன்னித்திடவே முடியாது.
ஔகத்தைக் காயப்படுத்தியவர்களுக்காக படாஸ் எப்படி வஞ்சம் தீர்த்து அத்தனை பேரையும் இல்லா பிணமாய் ஆக்கினானோ, அதேப்போல் அவன் முதுகில் குத்திய ஔகத்துக்கும் தக்க தண்டனை கொடுத்திட வெறிக்கொண்டான்.
ஆனால், ஒரே நாளில் டாக்டரின் உயிரை பறித்திட படாஸ் விரும்பவில்லை.
எப்படி காதலி கிருத்தியின்றி விகடகவியவன் அனுதினமும் நொந்து வேகிறானோ, அதை விட பன்மடங்கான ரணத்தை ஔகத் அனுபவித்திட வேண்டுமென்று நினைத்தான் படாஸ்.
டாக்டர் ஒவ்வொரு நொடியும் படாஸின் காதலி கிருத்தியைக் கரம் பிடித்ததற்காக வருந்தி சாக வேண்டுமென்று, எண்ணங்கொண்டான் படாஸ்.
முடிவெடுத்தான் ரேவ், டாக்டரை நாள் கணக்கில் வலியில் துடிக்க வைத்து, பின், மொத்தமாய் சித்ரவதையின் உச்சத்தில் கொன்றிட வேண்டுமென்று.
அதுவும் அவன் இறப்பை கண்ணால் பார்த்திட வேட்கை கொண்டான் படாஸ்.
மமாடி கண்டுப்பிடித்த திரவத்தின் முதன்மை கலவை கொண்ட அளவீடுகளின் கோப்பை ஔகத் மிக மிக பத்திரமாய் ஓரிடத்தில் வைத்திருந்தான்.
அதுதான் கவா இஜென் எரிமலைக்கு அடியிலிருக்கும் வைர மாளிகை ஆகும்.
ஒருமுறை கேடியின் ஸ்டடி அறையில் சீல் வைக்கப்பட்ட கோப்பொன்றைக் கண்டான் ஔகத். அதில் 'கவா இஜென்' எரிமலைக்கு அடியில் கோட்டை கட்டுவதற்கான பல வரைப்படங்கள் இருக்கக் கண்டான்.
அதைப்பற்றி யாரிடம் கேட்பதென்று அறியா ஔகத்தோ, முதல் முறை தாத்தா கஜேனை சந்தித்தான் அது விடயமாய்.
மகனை பற்றி நன்கறிந்த அப்பாவோ, நம்பி வந்த பேரனை வெறுமையோடு அனுப்பாது, திட்டமிடப்பட்ட செயல்கள் பாதியிலேயே நின்றுப்போன தகவலைச் சொன்னார்.
சங்கதியை அறிந்த ஔகத்தோ, தாத்தாவின் ஆசி பெற்று முடிவெடுத்தான், கேடி மிச்சம் வைத்து போன படக்காட்சிகளைக் கொண்டு அப்பனின் எண்ணத்தை நிறைவேற்றிட.
சுரஜேஷ் மற்றும் படாஸ் மட்டும் அறிய, கவா இஜென் எரிமலைக்கு கீழ் பல்லாயிர அடிகளுக்கு கீழ்நோக்கிய பாதாள நிலத்தில் வைரங்கள் கொண்ட மாளிகையை உயிர்பித்தான் ஔகத்.
அவ்விடத்தில் பதுக்கினான் டாக்டர் அவன் வியாதிக்கான திரவ கலவைகளின் அளவீடுகள் கொண்ட கோப்பையை.
இவ்விஷயம் அறிந்த படாஸோ, வஞ்சம் தீர்த்திட அதில் கையை வைத்தான்.
ஒவ்வொரு முறையும் அவன்தான் ஔகத்திற்கான இன்ஜெக்ஷன் கலவைகளைக் கலந்து குளிர் பெட்டிகளில் அடுக்கிடுவான்.
அப்படியான சமயத்தில்தான் அத்திரவத்திற்குள் நேர்மாறான பல மூலிகைகளைக் கலந்து, டாக்டரின் இன்ஜெக்ஷனை விஷமாக்கினான் படாஸ்.
முதலில் இதை உணரா ஔகத்தோ, சில மாதங்கள் கடக்க வேதியல் மாற்றங்களின் கோளாறை உணர்ந்தான் உடம்புக்குள்.
சுரஜேஷ் மூலம் மூத்தவன் அவனுக்கான பரிசோதனை ஒன்றை மேற்கொள்ள, எல்லாம் கையை விட்டு ரொம்ப தூரம் போயாச்சு என்ற நிலையே ரிசால்ட்டாய் வந்தது.
ஆத்திரம் பொங்கி வர, படாஸை போட்டுத்தள்ள கிளம்பிய சின்னவனை தடுத்தான் மூத்தவன். காரணம், அவனுக்குத் தெரியும் படாஸின் அடி உதைகளை சுரஜேஷால் தாங்கிட முடியாதென்று.
அதேப்போல், வஞ்சங்கொண்டு பழிதீர்த்தவனின் காரணமும் அவனறிவான். ஆகவே, எல்லாம் தெரிந்த பின்னும் படாஸிடத்தில் போய் காரண காரியங்களை விவாதிப்பதில் பலனில்லை என்றெண்ணிய டாக்டரோ, சின்னவனிடமும் இதையே சொல்லி அவனை அடக்கி வைத்தான்.
ஔகத் தனியாளாய் முயற்சித்தான் அவன் பிரச்சனைக்கான மருந்தைக் கண்டுப்பிடித்திட. பல தேடல்களின் முடிவினில் தெரிந்துக் கொண்டான் டாக்டர், அவனுக்கான மருந்து கைலாய மலையில் மட்டுமே கிடைக்குமென்று.
ஆனால், துரதிஷ்டம் யாதெனில், சாமானியர்கள் எவரும் அங்கு சென்றிட முடியாதென்பதுதான். அதனால், ஔகத் உயிர் பிழைத்திட வேறு வழியே இல்லை, படாஸிடம் போய் நிற்பதை தவிர.
அதே சமயம், டாக்டருக்கு முன்னதாகவே தெரியும் படாஸ் நிச்சயம் ஔகத்துக்கான மருந்தை எப்போதோ கண்டுப்பிடித்திருப்பான் என்று.
ஆனால், அதை அவன் டாக்டருக்கு அவ்வளவு சுலபத்தில் கொடுத்திட மாட்டானென்றும் ஔகத்திற்கு தெரியும்.
எப்படியாகினும், கீத்துதான் பகடைக்காயாக மாறிடுவாள் என்றறிந்த டாக்டரோ, ஒரே ஒரு விஷயத்தில் மட்டும் ரொம்பவே உறுதியாய் இருந்தான்.
அதுதான், அளகவளிடம் உண்மையைச் சொல்லி, படாஸை ஏற்றுக்கொள்ள வைத்திடும் கடமையாகும்.
காதல் மனைவியிடம் சிக்கலுக்கான முடிவாய், கோமகளவள் படாஸை ஏற்றுக் கொள்ள வேண்டிய நிர்பந்தத்தை எடுத்துரைத்து, எப்படியாவது நங்கையவளை அதற்கு சம்மதிக்க வைத்திட வேண்டுமென்பதில் குறியாய் இருந்தான் டாக்டர்.
அதனால்தான், துணைவியவளை விலகிப்போன ஔகத், பொஞ்சாதியை படாஸோடு நெருங்கிட விட்டான்.
ஆனால், நடந்ததோ வேறு. கீத்துவோ டாக்டரில் படாஸை தேடியலைந்து, இறுதியில் ஔகத்தை அப்படியே ஏற்றுக்கொள்ளும் நிலைக்கு வந்திருந்தாள்.
ஔகத்தோ மெய்யுரைக்க முடியாது தவிக்க, அவன் உடலோ நாளுக்கு நாள் மோசமடைந்துக் கொண்டே வந்தது.
சுரஜேஷ் கூட அண்ணியிடம் ஒருமுறை நிஜத்தை சொல்ல வேண்டி மூத்தவனை கெஞ்ச, தற்போதைக்கு வேண்டாமென்று சொல்லி சின்னவனை நிறுத்தி வைத்தான் டாக்டர்.
எமன் குறித்த தேதிக்கு இன்னும் ஒரு வாரமிருக்க, விரும்பி கரம் பிடித்த ஏந்திழையிடம் எல்லாவற்றையும் சொல்லிட நினைத்தான் ஔகத்.
கீத்துவை மனதளவில் பக்குவப்படுத்திட நினைத்த டாக்டரோ, ஜெர்மனிலிருந்து வந்தவனை கட்டியணைக்க வந்த வல்லபியை நோஸ் கட் செய்தான்.
உடைந்த காரிகையோ, முதல் முறை வாய் திறவாது மஞ்சத்தில் போய் சரிந்தாள் கண்ணீரோடு.
தாரத்தின் வேதனையைக் கண்கூடாய் கண்டவனுக்கோ, அவளை விட்டு போயே தீரணுமா, என்ற குழப்பம் திடிரென்று நெஞ்சுக்குள் சலனத்தை ஏற்படுத்தியது.
ஒரே நாளில், அன்பெனும் போதை, குழப்பமெனும் விஷத்தை, தடயமின்று விழுங்கிட, எப்படியாவது படாஸிடம் பேசி , அனுபவிக்கும் நரகத்திற்கான மாற்று மருந்தை பெற்றிட வேண்டுமென்று முடிவெடுத்தான் ஔகத்.
அன்புதான் உலகில் விலை மதிக்க முடியா சொத்தென்பது, ஔகத்தின் தாரகமான நம்பிக்கையாகும். ஆகவே, பாசத்தால் முடியாதது எதுவுமில்லை என்ற எண்ணங்கொண்டே, அவன் பேசினால் படாஸ் மனம் மாறிடுவான் என்று நினைத்தான்.
பிறந்தநாளன்று போய் நின்றான் டாக்டர், படாஸின் முன்னிலையில். வாய் பேச்சில் ஆரம்பித்த வாக்குவாதம் இறுதியில் கைகலப்பாகி போனது.
ஔகத் நினைத்ததோ வேறு, படாஸ் புரிந்துக் கொண்டு ஒப்புக்கொள்ள மறுத்தது வேறு. ஆகவே, முதல் முறை நேசம் தோற்றுப்போய் நிற்க கண்டான் ஔகத்.
கோபமும் விரக்தியும் ஒருசேர வீடு திரும்பியவனிடம், தாலி கட்டிய நாச்சியோ மனசிலிருந்த அத்தனையையும் கொட்டிட, டிவோர்ஸ் என்ற வார்த்தையில் அவளை மொத்தமாய் விலகி படாஸுக்கு வழிவிட நினைத்தான் ஔகத்.
ஆனால், அதற்குள்ளோ பொண்டாட்டி கர்ப்பம் என்று சொல்ல, போகப்போகும் உசுரை முதல் முறையாக பிடித்து வைத்துக்கொள்ள ஆசை வந்தது ஔகத்திற்கு.
எப்படியாவது மிச்சமிருக்கும் ஓரிரு நாட்களில் மருந்தை கைப்பற்றிட நினைத்தான் ஔகத். ஆனால், அதே சமயம் ஒருவேளை விதி சதி செய்தால், வீட்டாளை படாஸோடு சேர்த்திட வேண்டுமென்றும் திண்ணங்கொண்டான்.
ஆனால், டாக்டரவன் உண்மையை சொல்லும் முன்னரே எல்லாம் நடந்து முடிந்திருந்தது.
கீத்துவே, ஒருவரல்ல இருவர் என்ற மெய்யைக் கண்ணால் கண்டு அதிர்ச்சிக் கொண்டு வாய்க்கு வந்ததையெல்லாம் வாந்தியெடுத்தாள் நஞ்சாய்.
ஆனால், இப்போதும் அவளுக்கு நிஜம் தெரியவில்லை. அதைச் சொல்லி புரிய வைத்திடும் நிலையிலும் ஔகத் இல்லை.
எமன் அடிவாசலில் நிற்க, கீத்துவை அங்கிருந்து கூட்டிப்போகவே எத்தனித்தான் ஔகத்.
''கையே விடு ஔகத்! விடு! என்னே பார்த்தா என்னே மடச்சி மாதிரி இருக்கா?! நானும் போனா போகுது, பேசி என்னதான் பிரச்சனைன்னு தெரிஞ்சிக்கலான்னு பார்த்தா, ரொம்பத்தான் பண்றிங்க ரெண்டு பேரும்!''
என்ற அகம்பாவ கள்ளியோ கையை உதறிடவும், டாக்டரை பின்னாலிருந்து ஜாகுவாரான படாஸ் பாய்ந்து வந்து தாக்கிடவும் சரியாக இருந்தது.
இப்போது தீவிக்கு (புலி) லீவு விட்டவன், ஜாகுவாராய் காட்சிக் கொண்டான்.
அஃறிணையின் வேகமான வீச்சில் ஔகத்தோ முன்னோக்கி போய் தரையில் குப்பிற விழுந்தான்.
அதே வேளையில், கீத்துவோ விருகத்தின் வால் வீச்சு கொண்ட வீரியத்தில் பொருட்களின் மீது போய் மோதி விழுந்தாள் இருட்டில் கண் தெரியாது.
கரங்கள் ரெண்டும் அகல விரிந்து பரப்பிக் கிடக்க, உயிரோ இழுத்துக் கொண்டிருக்க, எலும்புகள் அனைத்தும் உள்ளுக்குள் உடைய உணர்ந்தான் ஔகத்.
தலையில் காயங்கொண்ட டாக்டரின் திருமதியோ கேபினெட்டின் ஓரத்திலேயே மயங்கி சரிந்தாள்.
மிருகமாய் மாறியிருந்த படாஸோ, முன்னங்கால்களில் ஒன்றை தரையில் அழுத்தி, மற்றொன்றை ஓடி வந்த வேகத்தில் ஔகத்தின் முதுகில் பதித்தான்.
டாக்டரின் புறமுதுகுக் கொண்ட சட்டையைக் கால் நகத்தால் கீறி கிழித்தான் படாஸ் ஆக்ரோஷமான கர்ஜனைக் கொண்டு.
வாய் திறந்து அலறக்கூட தெம்பில்லா ஔகத்தோ காற்றிலாடிய கொடியாய் அசைவுகள் கொண்டான் படாஸ் இழுத்த இழுப்பிற்கு.
டாக்டரின் கொப்பளங்கள் கொண்ட முதுகுச் சதையோ பீய்த்துக் கொண்டு வந்தது படாஸின் கூரிய கால் நகங்களோடு சேர்ந்து.
கண்ணோரம் கண்ணீர் வழிந்திறங்க, படாஸ் புரட்டியெடுக்க, பிஞ்சி நஞ்சி போன டாக்டரின் ஆரகம் (ரத்தம்) கொண்ட உடற்சதைகளோ வைரத்தரையில் சிதறிப்போயின.
சாவின் விளிம்பில் கடைசி மூச்சை இழுத்து விட்ட எதிரியின் கதையை ஒரேடியாய் முடித்திட, அவன் நோக்கி வெறியோடு பாய்ந்து வந்தான் படாஸ்.
தாயின் கருவறைக்குள் சுருண்டுக் கிடக்கும் குழந்தையைப் போல் உடல் குறுகிக் கிடந்தான் ஔகத்.
ஆணவனின் மரகத விழிகள் ரெண்டும் மயங்கிக் கிடந்த கீத்துவையே வெறித்தது காதலோடு.
பாரமான இமைகளை மூடித்திறந்தான் பேரழகனவன், மணவாட்டியவளை காப்பாற்ற முடியாது போன குற்ற உணர்ச்சியில்.
ஔகத்தின் கன்னமிருந்த குருதியோ கரைந்தோடியது உயிர் துறக்க போகின்றவனின் கடைசி துளியாய்.
வெற்றியின் களிப்பில் கொக்களிப்பு கொண்ட படாஸோ, கர்ஜனையோடு சுற்றி வந்தான் தரையில் கிடந்த கேடி மகனை.
மீண்டுமொரு கர்வமான உரும்பல் கொண்ட ஜாகுவாரோ, வாயை அகல திறந்து கோர பற்களோடு ஔகத்தின் கழுத்தை நோக்கி குனிய, சூராவளி கணக்காய் ஒரே வீச்சில் அவனை பத்தடிக்கும் பின்னால் போய் பறந்து விழ வைத்தது ஹேனா ஒன்று.
மூத்தவனை காப்பாற்ற மனித உருவத்தை துறந்து, வந்திருந்தான் சின்னவனவன் மிருகமாய் உருமாறி.
சாதாரண மனிதனாய் படாஸை வெற்றிக்கொண்டிட முடியாது சுரஜேஷால்.
ஆகவே, வேறு வழியே இல்லை தம்பியவனுக்கு, கோபத்தின் உச்சத்தில் ஹேனாவாய் மாறிய தேகத்தை தக்க வைத்துக் கொள்வதை தவிர, 'துர்லபத்தை' எடுத்துக் கொள்ளாது.
அண்ணனை காப்பாற்றி, அண்ணியை மீட்டிட வேண்டுமென்ற எண்ணத்தோடே உள்ளம் கொண்ட கொலை வெறிக்குறையாது வந்துச் சேர்ந்திருந்தான் சின்னவனவன் படாஸை மேலோகம் அனுப்பிட.
ஹேனாவின் உருவங்கொண்டவன், பொருட்களுக்கு இடையில் சிக்கிக்கிடந்த வேங்கையின் கழுத்தை குறிவைக்க, படாஸோ அவனின் முன்னங்கால்களால் எட்டி உதைத்தான் சுரஜேஷின் முகத்தை.
ஜாகுவாரின் உருவத்திற்கு விடைக்கொடுத்து, இப்போது வேங்கையாகியிருந்தான் படாஸ்.
அந்தப்பக்கம் சில்லாய் சிதறி, சுக்கு நூறாய் கிடந்த ஔகத்தின் உடலோ, மின்சார தாக்குதல் கொண்டவன் போல் தூக்கி போட்டு வெட்டியிழுத்தது.
வாய் தாடை உடைப்பட்ட சுரஜேஷோ, அடங்காது தலையைச் சிலிர்ப்பிக் கொண்டு மீண்டும் படாஸின் முன் போய் நின்றான் சண்டைக்கு.
டாக்டரோ ஒரு புறமாய் ஒருக்களித்து கிடந்தான் அசைவற்றவனாய் பேச்சு மூச்சின்றி, ஆள் காலி என்பது போல்.
கோர பற்களில் முதலில் விலாசிய ஔகத்தின் ரத்தம் எச்சிலாய் ஊற்ற, வேங்கையான படாஸோ, ஈவு இரக்கங்கொள்ளது ஹேனாவின் காதை கடித்திழுத்து சுற்றி வீசினான் பலங்கொண்டு.
பளபளக்கும் தரையில் ஒட்டிக்கிடந்த ஔகத்தின் முகத்தின் ஒருப்பாதி நாசியோ, சப்பையாகி பின், தலைகீழான முக்கோணத்தின் வடிவங்கொண்டது.
அங்கங்களில் காயங்கொண்ட ஹேனாவோ துடியாய் துடிக்க, அதன் தொடை மீதேறி நின்ற வேங்கையோ, நகங்களால் சுரஜேஷின் மிருக தேகத்தில் துளைகள் போட்டது.
நடப்பதேதும் அறியாமல் மயங்கியிருந்த டாக்டரின் ஒருபக்கத்து புருவம் மட்டும் பாதி உதிர்ந்து மீதி காணாது போக, திறந்தாற்படி இருந்தவனின் மயூர வர்ணங்கொண்ட ஒற்றை நேத்திரமோ, மேல்நோக்கி ஏறுமுகமாய் வைரத்தரையைப் பார்த்தது.
ஊளையிட்டான் சுரஜேஷ்ட ஏகஷ்ருங்கா, வலி உயிர் போக. படாஸோ, சின்னவனின் அழுகையில் இதங்கொண்டவனாய் உரும்பினான்.
குப்பிற கிடந்த ஔகத்தின் நசுங்கிய தோற்றங்கொண்ட மூக்குக்கு கீழான இதழ்கள் கொண்ட மேவாயின் மீதோ, பூனை முடிகள் போலான ஐந்தாறு மீசை முடிகள் நீட்டி நின்றன.
ரோதனையில் நொந்த சின்னவனிடம் துளியும் கரிசனம் கொள்ளாது, ஹேனா அவன் அங்கங்களைக் கடித்து குதறினான் படாஸ்.
சுரஜேஷுக்கு நன்றாக தெரியும் படாஸோடு மோதுவது என்பது ஔகத்தோடு சண்டையிடுவதற்கு சமமென்று.
இருப்பினும், மூத்தவனை காப்பாற்ற, அவனுயிரை பணையம் வைப்பது மட்டுமே அவனால் செய்ய முடிந்த ஒன்றென கருதினான் சின்னவன் அவன்.
மயிரில்லாது போன டாக்டரின் ஒருபக்கத்தலையிலோ அடர் வர்ண பழுப்பு நிற சிகை அசுர வேகத்தில் வளர்ந்து, அழகனின் முன் நெற்றியை மறைத்தது பழையப்படி.
சுரஜேஷோ அதீதமாய் படாஸிடம் அடிவாங்கி உயிர் ஊசலாடிடும் நிலையில், ஹேனாவின் உருவத்தின் பாதியையும் உயர்திணையின் மீதியையும் கொண்டு கடைசி வார்த்தையாய் உதிர்த்தான் அண்ணா என்று.
சின்னாப்பின்னமாகியிருந்த ஔகத்தின் சிதைந்த மேனியோ, ஓட்டைகள் மூடி தோல்கள் கூட, மெல்லிய மஞ்சள் வர்ண முடிகளால் நிறைந்து போனது.
ஹேனாவான சின்னவனோ மிடல் தாளாது சுணங்கிய தொனியில் அவனின் தோல்வியிலான ஊளையை விட, விருகமாய் உருக்கொண்டிருந்த படாஸோ, ரணத்தில் உழன்றவனின் தலையை மொத்தமாய் கவ்வி உடைக்க தயாராகினான்.
செத்தவன் போல் தரையில் கிடந்த ஔகத்தின் இமையோ மூடித்திறந்தது.
படாஸை பொறுத்த மட்டில், சுரஜேஷை அடித்து சாத்த வேங்கையிலான உருவமே போதும். சிம்பிளாக சொல்ல வேண்டுமென்றால், சுரஜேஷுக்கு அவ்வளவு பெரிய சீனெல்லாம் இல்லை, அவ்வளவே.
மயூர வர்ணம் மரகதமாய் மாற, கந்தலாகிய சரீரம் மீண்டும் கட்டுடலாய் பலங்கொள்ள, புஜங்கள் ரெண்டும் திமிறி புடைக்க, கழுத்தோர பச்சை நரம்புகள் அத்தனையும் அப்பட்டமாய் தெரிய, வைர மாளிகை அதிர கேட்டது ஆக்ரோஷமான கர்ஜனை ஒன்று.
அதிர்ச்சியுடன் வேங்கையாகிய படாஸ், சத்தங்கேட்ட திசை நோக்கி தலையைத் திருப்ப,
''குட்பாய் படாஸ்!''
என்ற சுரஜேஷோ நிம்மதியாய் விழிகள் சொருக மயக்கமடைந்தான், விழியோரம் கண்ணீர் வழிந்திறங்க.
புலியோ நொடியில் சின்னவனின் பக்கம் பார்வைகளை நகர்த்தி, மீண்டும் அடங்காத கர்ஜனையின் எதிரொலிகள் கேட்ட இடம் பார்த்து சிரசை திருப்பினான்.
அதே வேகத்தோடு வேங்கையை நோக்கி பாய்ந்து வந்த கானக கிங்கோ, மிருகமான படாஸின் கன்னத்தை முஷ்டி மடக்கி குத்தி, மறுக்கரத்தால் அவன் கழுத்தை இறுக்கி பற்றி தூக்கி தொடர்ந்து பல குத்துகளை நிறுத்தாது வைத்தான்.
இப்படியான ஒரு சீனை எதிர்பார்த்திடா வேங்கையோ, திமிறிய உரும்பலோடு பேந்தராய் உருமாறியது.
தத்தளித்து தவித்தாலும், குறையாத வீரியத்தோடு மீண்டும் அதை தரை நோக்கி ஓங்கி அடித்தான் ஔகத்.
பின்னந்தலை பலமாய் அடிவாங்கியது பேந்தருக்கு வைரத்தரையில்.
இவ்வளவு வலிமையை படாஸ் இதுவரைக்கும் ஔகத்திடம் கண்டதில்லை. அவனுக்கு நிகழ்ந்திருக்கும் அதிசயம் புரியவில்லை. அதன் சாத்தியமும் விளங்கவில்லை.
கதத்தோடு பொறாமையும் சேர்ந்துக்கொள்ள, வெறுப்பை உமிழ எப்படியும் அவனோடு மோதிட வேண்டி எழுந்திட நினைத்தான் படாஸ் தரையிலிருந்து.
ஆனால், அவனால் நினைக்க மட்டுமே முடிந்தது. காரணம், ஔகத்தின் அடி அப்படி. ஒரே அடி வானவெடியாகியிருந்தது படாஸின் மிருக தேகத்துக்குள்.
சித்தம் கலங்கிய மாயையில் படாஸுக்கு குமட்டியது. திட்டிகளைத் திறக்காதே புத்திக்குள் திட்டங்கொண்டான் ரேவ் கிறுக்கனாட்டம்.
குப்பிற கிடந்தவனின் தலையை பின்னாலிருந்து இழுத்த ஔகத்தோ, சற்று முன் வேங்கையான படாஸ் சின்னவனின் காதை எப்படி கடித்திழுத்தானோ, அதேப்போல் ரேவ்வின் செவியை ஒரே கடியில் பீய்த்து வீசினான்.
உரும்பலோடு ஊளைக்கொண்ட படாஸ் தப்பித்திடும் வேட்கையில் முண்டியடித்துக் கொண்டு முன்னோக்கி போனாலும், ஔகத்தை வீழ்த்திடும் அவன் முயற்சியை கைவிடுவதாய் இல்லை.
ஆகவே, அம்பகங்களை எப்படியோ சமாளித்து திறந்த பேந்தராய், கோபங்கொண்டு உரும்பினான் வலியில் நரக வேதனையைக் கொண்டாலும், படாஸ்.
டாக்டரோ விடாது அவனை இழுத்து மல்லாக்க திருப்பி, இருகன்னங்களிலும் நச்சு நச்சென்று குத்துகள் வைத்தான். அவன் தலையை வேறு இறுக பற்றி முட்டியே, படாஸின் மண்டையைக் கிறுகிறுக்க வைத்தான்.
மல்லாக்க கிடந்த ரேவ்வோ, நீரற்ற தாடகத்தில் சிக்கிய மீனாய் அங்கும் இங்கும் புரண்டினான் தரையில், பேந்தரின் நிலையில் இருந்தப்படியே.
கர்ஜித்த ஔகத்தோ, முதலில் படாஸ் அடித்த மொத்த கொட்டத்துக்கும் சேர்த்து அவனை தயவு தாட்சனையின்றி துவைத்தெடுத்திட ஆரம்பித்தான்.
ஆடலுடன் கூடிய பாடலாய், படாஸுக்கான உதைகளுக்கு இடையே விசில் சத்தம் கொண்டான் ஔகத்.
அதோடு நில்லாது, ரேவ் தீட்டியிருந்த கிருத்திகாவின் ஓவியத்தினை அழித்தான் ஔகத், கைகளிலிருந்த படாஸின் சுடுவலையைக் (ரத்தம்) கொண்டு.
ஔகத்தின் ஒவ்வொரு அடியும் நெருப்பில்லாமலேயே பற்றி எரிந்தது படாஸின் மீது விழுந்து ரணங்கொள்ள.
ரேவின் காலை இழுத்து கடித்த டாக்டரோ, பேந்தரானவனின் நகங்களைக் கையாலேயே உடைத்தான். துடிதுடித்து உரும்பினான் படாஸ், கரண்ட் ஷாக் கொண்டவன் போல்.
கூரிய அந்நகங்களையே தூரிகையாக்கினான் ஔகத், புனைந்த ஓவியத்துக்கு வர்ணம் தீட்டிட.
கலர் போத்தல்களின் மூடியைக் கழட்டி வீசிய டாக்டர், முதன்மை வர்ணங்களான நீலம் மற்றும் மஞ்சளை தூக்கி ஊற்றினான் வைரத்திலான கண்ணாடி சுவற்றில்.
சிவப்பு வர்ணத்திற்கு பதிலாய் படாஸின் ஆர்க்கத்தை (ரத்தம்) பயன்படுத்திக் கொண்டான் ஔகத்.
படாஸோ, அஃறிணை மற்றும் உயர்திணை என்ற ரெண்டுங்கெட்டான் நிலையை ஓரந்தள்ளி, மொத்த பலத்தையும் ஒன்றுத் திரட்டி எழுந்து நின்றான் அவன் முன் மனிதனாய்.
ஔகத்தோ வைர சுவற்றை அலங்கரித்திருந்தான், கீத்துவோடு அவன் சிரித்திருக்கும் படியான பழைய சம்பவம் ஒன்றையே ஓவியமாய் வரைந்து.
கிருத்தியைக் காணாது ஆக்கி, ஔகத் அவன் கீத்துவை வரைந்திருந்த காட்சியைக் கண்ட படாஸோ, கதங்கொண்டவனாய் உரும்பி, அவ்வோவியத்தை வெறுத்து, அதை அழிக்க நினைத்து சுவர் நோக்கி பாய்ச்சல் கொண்டான் பேந்தராய்.
ஆனால், பின்பக்கத்திலிருந்து வந்த படாஸின் சீரிடத்தை ஒற்றை கையால் கொத்தாய் பற்றிய டாக்டரோ, பேந்தர் அவனை தூக்கி ஒரே அடி, முன்னிருந்த வைர சுவற்றில்.
முரட்டு அடி வாங்கிய படாஸோ, வைர சுவற்றில் ஒட்டியப்படியே சரிந்து கீழிறங்க, பேந்தரின் உக்குரல் கொண்ட படாஸை காலால் உதைத்து ஒதுக்கினான் ஔகத்.
அதற்கு முன்னதாகவே, சுரஜேஷின் அழுக்குரல் கொண்ட வலியை அப்படியே திருப்பிக் கொடுத்திருந்தான் ஔகத், பேந்தரின் வாய் தாடையைப் பிளந்து கோர பற்களை பிடிங்கி வீசி.
படாஸின் வலியான கர்ஜனையில் இம்மியும் மனம் இறங்கா டாக்டரோ, பெயிண்டிங் மேஜையின் மீதேறி அமர்ந்தான் இனி ஆணவன் ராஜ்ஜியம் மட்டுமே என்ற தோரணையில்.
இடங்கொண்ட அதிர்வில் மேஜையிலிருந்த வர்ணதூரிகைகள் எல்லாம் கீழே விழுந்து ஆளுக்கு ஒரு பக்கமாய் உருண்டோட, ஆடையற்ற தேகத்தோடு கெத்தாய் இடை இறுக்கியிருந்த ஔகத்தோ, வாயோரம் வைத்திருந்த பேந்தரின் கோர பல்லை வெள்ளை மக்காடெமியா சாக்லேட் போல கடித்துண்ண ஆரம்பித்தான்.
மயூர விழிகள் ரெண்டும் ஔகத்தை வெறிக்கொண்டு நோக்க, உரும்பினான் படாஸ், அதிர்ச்சிக்கொண்ட வன்மத்தில், பார்வைகள் பார்த்த அகோரம் அவனை மிரட்சியில் ஆழ்த்த.
இதுவரைக்கும் அடி வாங்கிய ரேவ் பார்க்கவேயில்லை ஒருமுறைக்கூட ஔகத்தின் முகத்தை. இப்போதுதான் காண்கிறான்.
துரோகத்திற்கு மேல் துரோகம் என்றவன் உள்ளமோ விக்கித்து குமுறியது.
மேஜையின் மீது அவனுக்கே உரிய ஸ்டைலில் இதழோரம் முகிழ்நகை தவழ, கோர பல்லின் கடைசி எச்சத்தை மென்று விழுங்கியவனாய் அமர்ந்திருந்த ஔகத்தோ, ஏறெடுத்தான் படாஸை நேருக்கு நேர்.
கழுகு பார்வைகளால் படாஸை கொத்தி தின்ற ஔகத்தின் முகமோ, ஒருப்பக்கம் மிருகமாகவும் மறுப்பக்கம் மனிதனாகவும் சிரித்திருந்தது.
இடமுகம் ஆளியாகவும் (சிங்கம்) வலமுகம் மனிதனாகவும் இருக்க, நடமாடும் மனித மிருகமாய் இருந்தான் தியூடிதரா ஔகத் சர்வேஷ் குமார்.
சுரஜேஷ் செய்த கடைசி நிமிட செயலால்தான் இப்போதைக்கு ஔகத் இப்படியான நிலையில் கம்பீரங்கொண்டு நிற்கிறான்.
மூத்தவனை போட்டுத் தள்ளப்பார்த்த படாஸை நோக்கி பாய்ந்து வந்த சின்னவனோ, வெறுங்கையோடு அவர்கள் இருவரையும் நெருங்கிடவில்லை.
மாறாய், ஔகத் வேண்டாமென்று எட்டி நிக்கும் இன்ஜெக்ஷனைத்தான் கொண்டு வந்து சொருகியிருந்தான் சுரஜேஷ், அண்ணனின் நாடியில்.
மூன்று தலைமுறை பார்த்த சந்ததியின் மிகப்பெரிய ஒற்றுமை கஜேன் தொடங்கி கேடி வரைக்கும், ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு விதமான பிரச்சனை என்பதாகும்.
அதுப்போல ஔகத் சந்தித்த சங்கடம் அவன் பதின்ம வயதை அடைந்த உடனேயே, அடுத்தவனின் மூளையை தின்றிட போனதுதான்.
புத்த பிட்சு தகவல் சொல்ல, மகனை அழைத்துக் கொண்டு கைலாசம் போன கேடியோ, வேறு வழியில்லாது துறவறத்தை கொஞ்ச நாட்களுக்கு துறந்திட முடிவெடுத்தான்.
அதேப்போல், கேடியாகிய அவன், ரைட் சைட் மூளையை டீலில் விட்டு, சாணக்கியனை வெளிக்கொணர்ந்து, மகனுக்கான ஆராய்ச்சியில் ஈடுப்பட்டான், நிர்மலன் சர்வேஷ் குமாராய்.
ஔகத்தின் டி.என்.ஏ.வை பரிசோதித்த அப்பனோ அதிர்ச்சிக் கொண்டான் ரிசால்ட் பீதியைக் கிளப்ப.
மகனவன் உயிரணுக்களில், கொள்ளு பாட்டியான சுபிக்ஷவின் காட்டுவாசியான முதல் கணவனின் செல்களே அதிகமாய் இடம் பிடித்திருந்தன.
மனித மாமிசம் உண்ணும் பழக்கத்தைக் கொண்ட அப்பழங்குடியினர் செல்களை இப்படியே ஔகத்திற்குள் வளர விட்டால், அவனும் வருங்காலத்தில் நரமாமிசம் உண்டு செத்தொழிந்திடுவான் என்பதை உணர்ந்தான் கேடி.
அதுமட்டுமல்லாது, மகனவனுக்கு சிறு வயதிலேயே, சில தீர்க்க முடியா குறிப்பிட்ட நோய்கள் மட்டுமே வருவதற்கான அறிகுறிகள் தென்பட, பதறிப்போனான் பெத்தவன்.
அதாவது, ஒருவருக்கு முதுமையில் வரக்கூடிய அல்சைமர் மற்றும் பார்கின்சன் (Alzheimer's and Parkinson's) நோய்கள் இளவயதிலேயே ஔகத்திற்கு வருவதற்கான அத்தனை விடயங்களையும் அவனின் செல்கள் கொண்டிருப்பதைக் கண்டறிந்தான் கேடி.
ஆகவே, மகனைக் காப்பாற்றும் பொருட்டு, லெஃப்ட் மூளைக்காரனான சாணக்கியனோ, யாருமே அதுவரை முயற்சித்திடாத புதுவகை ஆய்வொன்றை சத்தமில்லாது மேற்கொண்டான்.
ஔகத்தை குகைக்குள் கட்டிப்போட்டு தனிமைப்படுத்திய கேடி, மகனுக்கான தேடலின் முடிவை, எலி தொடங்கி குரங்கு வரைக்கும் பரிட்சித்து பார்த்தான்.
ஒரு வழியாய் பத்துக்கும் மேற்பட்ட பிராணிகளைக் கொண்டு ஆராய்ச்சியில் வெற்றி கொண்ட கேடியோ, ஆழ்ந்த தவத்திலிருந்த மகனின் முதுகில் அவனறியா வண்ணம் செலுத்தினான் கண்டுப்பிடித்த இன்ஜெக்ஷனை.
எறும்பு கடித்த வலியை உணர்ந்த ஔகத்தோ, எதையும் பெரிசாய் கருதிடவில்லை.
சுரஜேஷ் அழைக்க ஜப்பான் சென்ற மூத்தவன், சித்தப்பன் மீகன் மூலம் அவர்களின் பரம்பரைக் கொண்ட சாபத்தை பற்றி தெரிந்துக் கொண்டான்.
ஆகவே, மீகன் கொடுத்த இன்ஜெக்ஷன்களை எடுத்துக் கொள்ள ஆரம்பித்தான் ஔகத். நரமாமிசம் உண்ணும் ஆர்வங்குறைவதைக் கண்டான் டாக்டர்.
கேடியோ தம்பியின் மூலம் மகனிடத்தில் இன்ஜெக்ஷனை சேர்த்த நிம்மதியில் மீண்டும் லெஃப்ட் மூளைக்கு டாட்டா காண்பித்து, உறக்கங்கொண்ட ரைட் சைட் மூளையோடு திரும்பியும் துறவறம் பூண்டான்.
வயது ஏற இன்ஜெக்ஷன் ஔகத்தின் உடலுக்குள் சில மாற்றங்களைக் கொண்டு வந்தது. கோபம் வந்தால் அவன் அவனாகவே இல்லையென்பதை முதல் முறை ஔகத் உணருகையில் ஹோலியின் மம்மி டோலி டம்மியாகி போனது.
அடித்து, கடித்து, பீய்த்தெடுத்து விட்டான் ஔகத் சின்னவனுக்கான மருந்து கண்டுப்பிடித்திடும் ஆராய்ச்சி ஒன்றின் போது டோலி தவறான அளவீடுகளை அவனிடத்தில் எடுத்துக் கொடுக்க.
ஹோலியோ ஆடிப்போனாள், ஔகத்தை பாதியிலான சிம்ம முகங்கொண்ட மனிதனாய் கண்ட நொடி. அப்போதுதான் கண்ணாடியில் அவனுருவம் கண்ட டாக்டரோ, ஆணவனின் அலறல் கூட கர்ஜனையாய் மாறிப்போக கண்டான்.
எங்கே இப்படியே நிலைத்திடுமோ என்று பயந்தவனின் உள்ளம் நிம்மதிக் கொண்டது, ஆணவன் சாந்தமாகிட, திரராசியின் (சிங்கம்) அரை முகம் சமாதானத்தின் அடிப்படையில் மீண்டும் மனித முகமாய் மாற.
அன்றைக்குத்தான் தெரிந்துக் கொண்டான் டாக்டரவன், பேரழகனின் டி.என்.ஏ. சிங்கத்தின் டி.என்.ஏ. வோடு கலக்கப்பட்டிருக்கும் நிஜத்தை.
ஹைபிரிட் குழந்தையாய் சுரஜேஷ் இருக்க, ஔகத்தை பற்றி யாரும் அறிந்திடாத வேளையில். கேடியின் லெஃப்ட் மூளை செய்த கேப்மாரித்தனத்தை பின்னாளில், கெய்டன் கண்டறிந்துக் கொண்டான்.
எல்லாம் கட்டுக்குள் இருக்க, மகனிடத்தில் அவன் இதைப்பற்றி கேட்டிடவும் இல்லை, யாரிடமும் இந்த ரகசியத்தை பகிர்ந்திடவும் இல்லை.
டேடி செய்த கோல்மால் தணத்திற்கான காரணத்தையோ, ஔகத் பின்னாளில் தெரிந்துக் கொண்டான், ஆராய்ச்சிகளின் ஊடே.
தம்பிக்கு ஒருபுறம் மருந்து கண்டுப்பிடித்திட அரும்பாடு பட்ட ஔகத், அவனுக்குமே புதியதொரு இன்ஜெக்ஷனை தயாரித்திட முனைந்தான்.
சின்னவனுக்காவது முதல் முறை சொதப்பி, ரெண்டாவது முறை எல்லாம் சரியாய் அமைந்தது. ஆனால், அவன் சொந்தத்திற்கோ ஒன்றுமே கைக்கூடிடவில்லை.
மனம் தளர்ந்தவன் முடிந்தவரை தியானத்தில் மூழ்கி, எப்போதுமே அவனை அன்பாகவும் பண்பாகவும், குணமானவனாகவும் வைத்துக் கொண்டான்.
அனாவசியமான சண்டை சச்சரவுகள் மற்றும் வாக்குவாதங்களில் கூட கலந்துக்காது கழண்டிக் கொண்டான்.
எல்லாம், எங்கே இவன் குரல் ஓங்கி ஒலித்தால் மக்களெல்லாம் ஆட்டங்கண்டு போயிடுவார்களோ என்ற நிம்மதியற்ற அச்சமே.
ஒருவழியாய் மமாடியிடம் அவன் நிலையை சொல்லாமல் ஔகத் சொல்ல, நண்பனுக்காய் மருந்து கண்டுப்பிடித்து வந்தான் தோழனவன்.
அதுவே, இத்தனை நாள் ஔகத்தை சாதாரண மனுஷனாய் வாழ வைத்துக் கொண்டிருக்கிறது.
எதற்காக ஔகத் இத்தனை நாளும் அவன் பரம்பரை இன்ஜெக்ஷனை விடுத்து, மமாடியின் தயாரிப்பை எடுத்துக் கொண்டானோ, அதுவாகவே இன்றைக்கு உருக்கொண்டு நிற்பது எங்கே போய் முடியுமென்று தெரியவில்லை டாக்டருக்கு.
ஆண்கள் இருவர் அடித்துக் கொண்டு சாக காரணமான கீத்துவோ மயக்கம் தெளிந்து எழுந்தாள். ஒரு மண்ணும் தெரியவில்லை அவளுக்கு அங்கும்மிருட்டில்.
முதலில் இருந்த ஒரு பருக்கை வெளிச்சங்கூட இப்போதில்லை. தட்டு தடுமாறி எழுந்தவள் வழக்கம் போல் கண்களை இறுக்கமாய் மூடிக்கொண்டு நடந்திட ஆரம்பித்தாள்.
டாக்டரை வீழ்த்தும் எண்ணங்கொண்ட படாஸோ, திரும்பவும் வந்து நின்றான் ஔகத்தை சாகடித்தே தீர வேண்டுமென்ற வெறியில், எவ்வளவு அடித்தாலும் அடங்காது.
வைர மாளிகை அதிரும்படியான உரும்பலான கர்ஜனையில், போலீஸ்காரியின் இதயமோ ரெண்டாய் பிளந்தது.
சிந்தைக்குள்ளோ, அஃறிணையான படாஸ், சாமானியனான ஔகத்தை கடித்து குதறும்படியான எண்ணங்கள் பீதியடைய வைத்தது தளிரியல் அவளை.
''ஔகத்! ஔகத்!''
என்றவளோ புருஷனின் பெயரை ஏலம் போட்டப்படி இருட்டில் ஓடிட ஆரம்பித்தாள் கர்ஜனை கேட்ட திசை நோக்கி.
அவனை எதிர்க்க இனி எவனும் இல்லை என்ற தோரணைக் கொண்ட ஔகத்தோ, வன்மங்கொண்டு அவனோடு மோதிட உத்தேசித்த படாஸை, காக்க வைத்திடாது களத்தில் இறங்கினான்.
உரும்பலும் கர்ஜனையும் தொடர்ந்து கேட்க பதறியது பெண்ணவள் உள்ளம்.
கோபம்தான், வெறுத்து ஒதுக்கும்படியான சினம்தான். ஆனால், இப்போது இல்லை. காரணம், ஆத்திரத்தை விட ஔகத்தின் மீது கீத்து வைத்திருக்கும் அன்பானது சொல்லில் அடங்காதது.
அவனை பிரிந்து வலிக்கான பாடத்தைப் புகட்டிட நினைத்தாலும் நினைப்பாளே ஒழிய, ஒருக்காலும் அவன் இறப்பில் குளிர்காய்ந்திட நினைத்திட மாட்டாள் ஆங்கார வள்ளியவள்.
''படாஸ் வேணாம் படாஸ்! வேணாம்! ஔகத்தே விட்ரு படாஸ்!''
என்ற காவல்காரியோ கதை தெரியாமல் கதறினாள் எந்தப்பக்கம் பாதங்களை கொண்டு போய் நிறுத்துவதென்று தெரியாமல், நாலாபக்கமும் ஓடி.
காதில் விழுந்த கர்ஜனையில் சிலிர்த்தாடங்கியது அரிவையின் தேகம்.
''படாஸ் பிளீஸ்! ஔகத்தே எதுவும் பண்ணிடாதே! பிளீஸ்! ஔகத்!''
என்றவளோ வயிற்றிலிருக்கும் குழந்தையின் துயில் கலைய அலறினாள்.
காதலுக்குத்தான் எத்துணை வலிமை.
எவனை காரசாரமாய் திட்டி தீர்த்தாளோ, அவனையே இப்போது வேண்டுமென்று உள்ளம் பதற, அதோடு சேர்ந்து சுந்தரி அவளும் கதறினாள் கட்டியவனை படாஸ் கொன்றிடுவானோ என்ற பயத்தில்.
கையில் துப்பாக்கி மட்டும் இருந்திருந்தால், கண்டிப்பாய் படாஸை சுட்டு ஔகத்தை காப்பாற்றியிருப்பாள் கீத்து.
அவ்வளவே காதல் டாக்டர் மீது போலீஸ்காரிக்கு. நேற்றைக்கு சொன்னது போல், அவனை விடவும் கீத்துவிற்கே பைத்தியக்காரத்தனமான காதல் டாக்டரின் மேல்.
உள்ளம் கருக, கண்ணீர் பெறுக,
''கிருத்தி!''
என்றான் அடித்து பிழியப்பட்ட பேந்தராகிய படாஸ், மனித உருவங்கொண்டு.
''ஔகத்!''
என்றலறிய பொற்றொடியோ அவ்வளவு நேரம் கேட்டிடாதவனின் குரல் கேட்க ஒரு நொடி நின்று, சுற்றத்தையே வட்டமடித்தாள் சிறகுடைந்த பட்டாம் பூச்சியாய்.
''கிருத்தி!''
என்ற படாஸின் குரலோ இம்முறை ஔகத்தின் குரலாகவே ஒலித்தது. காரணம், அவனால் குரலை மாற்றிட முடியவில்லை.
சொந்தக் குரல் இரவல் குரலாகி போக, டாக்டரின் குரல் கொண்டவனின் அழைப்பு மட்டும் மாறிடவேயில்லை, கீத்துவிற்கு.
ஆனால், அதையெல்லாம் யோசித்திடும் நிலையில் தெரிவை அவளில்லை. காரணம், ஔகத் அவளோடு மஞ்சத்தில் சந்தோஷமாய் இருக்கையில், கிருத்தி என்றழைப்பது வழக்கமாகும்.
ஆகவே, சம்பவத்தை காண முடியாதவளுக்கு கிருத்தி என்று சுருதியற்று அழைப்பது ஔகத்தேதான்.
''ஔகத்! ஐம் சோரி ஔகத்! ஐம் சோரி! நான் இங்க வந்திருக்க கூடாது! தப்பு பண்ணிட்டேன் ஔகத்! தப்பு பண்ணிட்டேன்!''
என்ற அலரோ, நொடிக்கு ஒரு தரம் ஆணவனின் வலி கொண்ட குரல் திசை மாற திக்கு தெரியா காட்டில் சிக்குண்டவள் போல் கண் மண் தெரியாமல் ஓடினாள் அங்கும் இங்கும், அப்பெரிய இடத்தில்.
''கிருத்தி!''
என்ற படாஸோ கண்ணோரம் கண்ணீர் வழிந்திறங்க வலியோடு மீண்டும் அவள் பெயர் உச்சரித்தான், அவளுக்காகவாவது ஔகத்தை வீழ்த்திட வேண்டுமென்று எண்ணி.
பேந்தரின் உருவத்தை துறந்து மனித உருவில் படாஸ் கொள்ளும் குரல் நாடகத்தில் கீத்து ஏமாந்து போவதை தாங்கிக்கொள்ள முடியா ஔகத்தே கர்ஜனை கொண்டான் ஆக்ரோஷமாய் அவன் தொண்டையிலேயே மிதித்து.
''நோ! படாஸ்! நோ! ஔகத்!''
என்று கதறிய பூமகளோ,
''விட்ரு படாஸ்! என் ஔகத்தே விட்ரு!''
என்றவளோ அடி வாங்குவது படாஸ் என்று தெரியாது, அவனை போட்டு பொளந்து கொண்டிருப்பவனின் பெயரையே உயிர் போகும் படியான அழுகையோடு ஒப்புவித்தாள்.
தொடர் கர்ஜனையில் கீத்துவின் ஈரக்குலையோ நடுநடுங்கி போனது.
''You fucking asshole Badass! leave him! leave him idiot! leave him!''
என்ற கீத்துவின் அர்ச்சனையான குரலில், அனல் புழுவாய் தவித்த பேந்தாரோ விருகத்தின் சாயலை துறந்து மனிதனாகியது.
அஃறிணை உயர்திணை என்று இருமாறியாக சொடக்கிடும் நொடிகளில் உருவ மாற்றங்கள் கொண்டான் படாஸ்.
''படாஸ், ஔகத்தே விட்ரு படாஸ்! உன்னே கெஞ்சி கேட்கறேன் படாஸ்! ஔகத்தே விட்ரு படாஸ்! நான் சொன்னா கேட்பத்தானே?! பிளீஸ் படாஸ்! பிளீஸ்!''
என்றவளோ குலுங்கி கதறினாள் தரையில் தலை முட்டி, இருள் சூழ்ந்த போர்வைக்குள் யார் எங்கே என்று தெரியா அபலையாய்.
தும்சமாகிய நிலையில் ஔகத்திற்கு ஈடுக்கொடுத்திட முடியாது தள்ளாடிய படாஸோ, இருட்டில் கண் நன்றாய் தெரிய, கைக்கு எட்டிடும் தூரத்தில் அவன் கிருத்தியைக் கண்டான் கண்ணாடிக்கு அப்பால்.
''ஏராளம் ஆசை
என் நெஞ்சில் தோன்றும்
அதை யாவும் பேச
பல ஜென்மம் வேண்டும்!''
என்றவனோ பாட,
''ஔகத்!''
என்று கதறிய கீத்துவோ எழுந்தோடினாள் அமர்ந்திருந்த இடத்திலிருந்து மனம் இழுத்துப்போன திசை நோக்கி.
படாஸின் குரலில் கதங்கொண்ட டாக்டரோ, அவன் தலையிலேயே ஒன்று வைத்தான் வலிமையான கரங்கொண்டு.
சுருண்டு போய் விழுந்தாலும்,
''ஓ ஏழேழு ஜென்மம்
ஒன்றாக சோ்ந்து
உன்னோடு இன்றே
நான் வாழ வேண்டும்!''
என்ற படாஸ் பாட, அவன் வரிகளில் ஓடோடி வந்த சனிதமோ, டமாரென்று இடித்தாள் கண்ணாடி போலான சுவர் ஒன்றில். அதை கைகளால் தொட்டுத் தடவிய மடந்தையோ உணர்ந்துக் கொண்டாள் அத்தடுப்பு சுவரை.
கீத்து எக்காரணத்தைக் கொண்டும், அந்தப்பக்கம் வந்திடக்கூடாதென்று ஔகத்தான் அதிரடியாய் உருவாகியிருந்தான் அக்கண்ணாடியிலான சுவரை.
''ஔகத்! ஔகத்! நீ எங்க இருக்கே ஔகத்?! எங்கே இருக்கே?!
என்ற அந்திகையோ அடி அடியென்று அடித்தாள் முன்னிருந்த தடுப்பை.
''காலம் முடியலாம்
நம் காதல் முடியுமா
நீ பாா்க்க பாா்க்க
காதல் கூடுதே!''
என்றுப் பாடிய படாஸோ, அவனை தெரியாமலேயே பார்த்துக் கொண்டிருக்கும் கிருத்தியின் விழிகளை நோக்கி பாடினான், இதுதான் அவனின் கடைசி பாடல் என்றுணர்ந்து.
பெண்ணவளோ இருட்டில் எதுவுமே தெரியாது கண்ணாடி சுவற்றில் தலை முட்டி கதறினாள்.
''படாஸ் இதை திற படாஸ்! திற! திறன்னு சொல்றன்ளே! திறடா!''
என்றவளோ சுவற்றோடு சண்டைக்கொள்ள, கர்ஜித்த ஔகத்தோ விடாது விலசினான் படாஸை.
அவன் வலி கொண்ட அலறல்களை கேட்ட கீத்துவோ,
''ஐயோ, கடவுளே! ஔகத்! அடிக்காதடா படாஸ்! டேய்! பாவம்டா என் ஔகத்! அடிக்காதடா! விட்ருடா அவனே! ஔகத்தே விட்ருடா!''
என்றவளின் வாய் ஒவ்வொரு முறையும் அடிப்பவன் பெயரையே சொல்ல, இதழோரம் சிறு முறுவல் கொண்ட படாஸோ உள்ளத்தால் மரித்தே போனான்.
பேந்தராகிய படாஸை குருதி தெறிக்க, கொத்து புரட்டா போட்ட டாக்டரோ, அதன் நெஞ்சில் ஏறி அமர்ந்தான் மூச்சிரைக்க இறுகிய முகத்தோடு.
''படாஸ் உனக்கு நான்தானே வேணும்! வா, வந்ததென்னே எடுத்துக்கோ! ஔகத்தே விடு படாஸ்! ஔகத்தே விடு!''
என்ற கிருத்தியோ கண்ணாடி சுவருக்கு அந்தப் பக்கத்திலிருந்து எதையும் காண முடியாத போதிலும் உரும்பல் மற்றும் கர்ஜனைகளின் ஊடே, ஆவேசமாய் கத்தினாள்.
மல்லாக்க கிடந்த படாஸின் மேல், நடராஜரின் தோரணைக் கொண்டு, இடக்காலால் வலப்பக்கத்தரையைத் தொட்டிருந்த ஔகத்தோ, இடக்கையை அதே தொடையில் முஷ்டி மடக்கி அழுத்தியிருந்தான்.
டாக்டரின் வலக்காலோ, இடது பக்கம் பார்க்கும் படி செங்குத்தாய் சாய்ந்து, படாஸின் கழுத்தை பலங்கொண்டு நெறிக்க, அழகனின் வலக்கையோ வலக்காலின் முட்டியின் மீது குந்தியிருந்தது ஜம்மென்று.
இதற்கு முன்னடியான நேரம் ஆட்டமாய் ஆடிய படாஸோ, மண்டை மூளையெல்லாம் சுற்றல் கொள்ள, கண்களை நிலைக்கொள்ளாது உருட்டிட, முன்னோக்கி சென்றான் ஔகத், ரேவின் வதனம் நெருங்கி.
படாஸின் பின்னந்தலையை ஒற்றை கரத்தால் ஏந்தியவனோ, அவனை வெறிக்க பார்த்து பின் விட்டம் பார்த்து கர்ஜித்தான்.
ஔகத்தின் கர்ஜனையில் மாளிகையே அதிர்ந்து போனது. கண்ணாடி சுவற்றில் உள்ளங்கை சிவந்து கன்றி போக அடித்தவளோ மூக்குச் சளி அதிலொட்டி ஒழுக, கிடிகிடுத்தாள் பேதையின் சிந்தைக்குள்ளோ ஔகத்தின் மரணம் காட்சியாய் விரிய.
''ஔகத்! ஔகத்! நோ! நோ! நான் உன்னே சாக விட மாட்டேன் ஔகத்! சாக விட மாட்டேன்!''
என்ற கீத்துவோ கண்ணாடி சுவற்றை உதைத்தாள் ஆக்ரோஷங் கொண்டவளாய் உருமாறி.
அதுவரையிலும் பாதி முகம் சீயமாகவும் (சிங்கம்) மீதி முகம் பேரழகனாகவும் இருந்த ஔகத்தின் வதனமோ மொத்தமாய் உருமாறி போனது.
நுதல் தொட்ட டார்க் பிரவுன் (dark brown) சிகை, புருவங்கொண்ட நடு நெற்றியில் தோன்றிய அழுத்தமான கோடு, செவிகள் மூடிய மெல்லிய குழல், மரகத பச்சையிலான கூரிய பார்வைகள், படர்ந்த நாசி, மீசைக் கொண்ட மேவாய், பிரமிட் (pyramid) வடிவான வாய் என இதழ்கள் மறைந்து கோர பற்கள் வாயோரம் வெளியில் நீட்டியிருக்க, பிங்கதிருட்டியாய் (சிங்கம்) மாறிப்போனது தியூடிதரா ஔகத் சர்வேஷ் குமாரின் முழு முகமும்.
டோலியிடம் வெறும் பாதி சினத்தை மட்டுமே அன்றைக்கு காட்டிய ஔகத், இன்றைக்கு கொலை வெறியில் இருக்க, கேடியின் கைவண்ணம் மகனை விக்கிரமியின் (சிங்கம்) முழுமையான தோற்றத்தை முகத்தில் கொண்டிட வைத்திருந்தது.
''புறக்கண் பார்த்த தியூடிதரா ஔகத் சர்வேஷ் குமாரே, அகக்கண் காண மறந்தாயோ!''
என்ற வசனத்தை ஆக்ரோஷமும் ஆவேசமும் கூட்டி கர்ஜனையோடு சொன்ன டாக்டரோ, முஷ்டி மடக்கிய கையை ஓங்கி ஒரே குத்து, படாஸின் நெஞ்சில்.
''ஔகத்!''
என்றலறிய கீத்துவோ, காதல் கணவனின் சாவுக்கு சாட்சியாகி போனதன் கொடூரம் தாளாது கண்ணாடி சுவற்றிலேயே தலை முட்டி ஒப்பாரிக் கொண்டாள்.
பேடை அவள் அழுகையில் கண்ணாடி தடுப்பிற்கும் கருணை பிறந்ததோ என்னவோ, கதவது தானாய் திறந்துக் கொள்ள, ஓடினாள் கீத்து பின்னங்கால் பிடரியில் பட கால் போன போக்கில் திரை கொண்டு தனித்திருந்த இடத்துக்குள்.
டாக்டர் உதைத்த வேகத்தில் பின்னோக்கி சறுக்கி போன படாஸோ, இடித்தான் அசுர வேகத்தில் ஓடி வந்துக் கொண்டிருந்த கீத்துவின் கால்களில்.
''ஔகத்!''
என்ற கோற்றொடியோ துடித்து போய் தன்னவனை மடியில் ஏந்தினாள்.
''ஔகத்! ஔகத்!''
என்றவனின் பெயரை தவிர வேறேதும் அவளுக்கு வரவேயில்லை வாயில்.
உதிரத்தில் குளித்திருந்தவன் முகத்தை கைகளால் வருடியவளின் கண்களுக்கு அப்போதும் அவன் முகம் பார்த்திடும் பாக்கியம் கிடைக்கவேயில்லை.
லப் டப், லப் டப் என்று வேகமாய் துடித்த படாஸின் இதயமோ, அதன் செயலை மெதுவாக்கியது.
''உனக்கு ஒன்னுமில்லே ஔகத்! ஒன்னுமில்லே! நான் இருக்கேன் ஔகத்! கீத்து நான் இருக்கேன்! உன்னே நான் சாக விட மாட்டேன்! விட மாட்டேன்!''
என்றவளோ படாஸை, ஔகத் என்ற நினைப்பில் தூக்க முனைய, ஆணவனின் முதுகிலிருந்த சதையோ கொத்தாய் கோதையின் கைச்சேர்ந்தது.
''ஐயோ, கடவுளே! ஔகத்!''
என்றவளோ, அலறலான ஒப்பாரியோடு படாஸை கைத்தாங்கலாய் தீவிரமாய் மேல் தூக்க முயற்சிக்க,
''கிருத்தி!''
என்ற படாஸோ, சாவின் விளிம்போடு போராடியப்படி சுந்தரியவளின் நெஞ்சில் முகம் புதைத்தான்.
''ஔகத்! இப்படி பண்ணாதே ஔகத்! வா, ஔகத்! வா!''
என்றவளோ அவனை காப்பாற்றிட துடித்தாள்.
''கிருத்தி!''
என்ற படாஸோ இறுக்கமாய் பற்றிக் கொண்டான் கீத்துவின் விரல்களை கோர்த்து. அவன் மூச்சு ரணத்தில் கனல் கொண்ட காந்தாரியின் நெஞ்சுக்குழியை மேலும் சூடாக்கியது.
''ஔகத், ஐ லவ் யூ ஔகத்! ஐ லவ் யூ! நான், நீ, நம்ப பாப்பான்னு ரொம்ப ஹேப்பியா இருப்போம்! உனக்கு ஒன்னும் இல்லே! நான் விட மாட்டேன்! எதுவும் நடக்க உனக்கு!''
என்றவளோ அவனை காற்று புகா வண்ணம் கட்டிக்கொள்ள, படாஸின் குருதியெல்லாம் முற்றிழையின் நெஞ்சில் படர்ந்தது.
ஔகத்தோ அக்காட்சியை காண முடியாது அங்கிருந்து நகர்ந்திருந்தான் தற்சமயத்திற்கு, கலங்கிய கண்களோடு.
உயிர் பிரிய போவதை உணர்ந்த படாஸோ, இழுத்துக்கிடந்த வலியோடு பாடிட ஆரம்பித்தான்.
''உன்னாலே எந்நாளும்
என் ஜீவன் வாழுதே
சொல்லாமல் உன் சுவாசம்
என் மூச்சில் சே..''
என்ற வரிகளோடு நின்றுப்போனது படாஸின் இதயத்துடிப்பு.
அவனைக் கட்டிக்கொண்டு நுதலோடு நெற்றியொட்டி, அவன் முகத்தோடு ஒன்றிக் கிடந்த கிருத்தியோ, ஒரு நொடி அப்படியே அதிர்ச்சியில் உறைந்து போனாள்.
காதெல்லாம் அடைத்துக் கொள்ள, தலை சுத்தியது கர்ப்பிணி அவளுக்கு. மூச்சடைப்பதை போலுணர்ந்த காவல்காரியோ, ஒரு சத்தமின்றி அப்படியே படாஸின் மீதே மயங்கி சரிந்தாள்.
கிருத்திகா தீனரீசன் என்ற ஒருத்தியை கிருத்தியாக்கி அழகு பார்த்த பேரழகன் படாஸ்.
சொன்னதை போலவே, காதலி கிருத்தியின் மடியிலேயே உயிர் துறந்திருந்தான் படாஸ்.
இதில் கொடுமை யாதெனில், கீத்துவை பொறுத்த மட்டில், மரித்தது ஔகத். அவனைக் கொன்றது படாஸ். காரணம், கீத்து.
எந்த படாஸை உருகி மருகி காதலித்தாளோ, இப்போது அவனையே வெறுத்து ஒதுக்கினாள் பாவ மன்னிப்பே கிடையாதென்ற நிலையில் கீத்து, செத்தவன் புருஷன் என்ற எண்ணத்தில்.
மனித உருவத்தில் உருகுலைந்திருந்த படாஸை தூக்கி போய் கிடத்தினான் டாக்டர் அவனுக்கான பிரித்தியேக பெட்டி ஒன்றில்.
என்றாவது ஒருநாள் இப்படியான நாள் வரும் என்று எப்போதோ கணித்து வைத்திருந்தான் ஔகத்.
ஆனால், அது இவ்வளவு சீக்கிரத்தில், அதுவும் கீத்துவால் வந்திடுமென்று அவன் கனவிலும் நினைக்கவில்லை.
வடிவங்கொள்ளா, வர்ணமற்ற நியூட்ரான் கதிர்வீச்சு (Neutron radiation) கண்ணுக்குத் தெரியாமலேயே ஒருவரின் உயிரை சத்தமின்றி பறித்திடும்.
இது நியூட்ரான்களால் ஆன ஒரு வகை அயனியாக்கும் கதிர்வீச்சு (ionizing radiation) ஆகும். ஒளியைப் போல் அலைகளில் பயணிக்கக் கூடிய ஆற்றல் பெற்றது இது.
இந்நியூட்ரான் கதிர்வீச்சுகள் உடலுக்குள் ஆழமாய் ஊடுருவி, மனிதனின் செல்கள் மற்றும் டி.என்.ஏ.வை சேதப்படுத்தி இறப்பை ஏற்படுத்திடும்.
அப்படியான கதிர்வீச்சு கொண்டே இப்போது ஔகத், இதுநாள் வரை அவனோடு பயணித்து வந்த படாஸின் சரீரத்திற்கு மரண சாசனம் எழுதிட முடிவெடுத்தான்.
கலங்கிய கண்களோடு படாஸுக்கு விடைக் கொடுத்த ஔகத்தோ, டைட்டாக மூடினான் அப்பெட்டியை.
சொல்ல முடியா வேதனை அவன் கண்ணில் தெப்பக்குளங் கொண்டது.
நேற்றுவரை, விதி சதி செய்ததால் மனைவியை படாஸுக்கு தாரை வார்த்துக் கொடுக்க முடிவெடுத்திருந்த ஔகத், திடிரென்று அவனை இப்படி கொன்றிடுவானென்று நினைக்கவில்லை.
அதே வேளையில், படாஸ் உயிரோடு இருந்திருந்தாலும், கண்டிப்பாய் அவனால் கீத்துவோடு நிம்மதியானதெரு வாழ்க்கையை வாழ்ந்திருக்கவும் முடியாது.
காரணம், இப்போதைய படாஸ் வன்மம், குரூரம், கோபம், எரிச்சல், பொறாமை, பேராசை, வக்கிரம் போன்ற தீயவைகளால் சூழ்ந்திருக்கிறான்.
அதையும் தாண்டி, ஔகத் சொன்னால் மட்டுமே கீத்து நம்பிடுவாள், உண்மையை.
அதனால், மனதைக் கல்லாக்கி கொண்ட டாக்டரோ, அதற்கு மேலும் படாஸின் ஒட்டு மொத்தமான அழிவுக்கு சாட்சியாக இருக்க மனமில்லாது, நேராய் சின்னவன் சுரஜேஷை நோக்கி ஓடினான்.
மயங்கியவன் மனித உருவத்தில் பார்க்க சகிக்கா கோலத்திலிருந்தான். அவன் நெற்றி கேசத்தை கையால் கோதிய மூத்தவனோ, சின்னவனை தூக்கி தோளில் போட்டு நடையைக் கட்டினான் கீத்துவை நோக்கி.
கர்ப்பிணி அவளோ சிறு சலனமும் இன்றி அரை மணி நேரத்துக்கு மேலாக மயங்கிக் கிடக்க, பொஞ்சாதியவளை கையிலேந்தினான் ஔகத்.
இரு உயிர்களையும் எப்படியாவது பத்திரமாய் காப்பாத்திட வேண்டி இறைவனை பிராத்தித்துக் கொண்டவன் தோளில் தனையனையும், கையில் துணைவியையும் கொண்டிருந்தான்.
இருவரையும் ஒருசேர சுமந்தப்படி வேகவேகமாய் ஔகத் நடைப்போட, பட்ட பகல் போல் வெளிச்சங்கொண்டிருந்த அவ்விடமோ ஒவ்வொரு விளக்குகளாய் அணைய இருட்டிக் கொண்டு வந்தது.
எப்போது கீத்து மயங்கி சரிந்தாளோ, அப்போதே மொத்த இடமும் பிரகாசித்து போனது வெளிச்சத்தில்.
அவசர அவசரமாய் நடந்த ஔகத்தின் கால்களோ டக்கென வலுவிழந்து தரையில் குன்றியது. தடுமாறியவன் உடலோ சொல்லா முடியதொரு வலியை உணர, வாயோ முன்னெச்சரிக்கையின்றி வாந்திக் கொண்டது.
சுரஜேஷை தோளிலிருந்து கீழிறக்கி தரையில் கிடத்தினான் ஔகத். தாரத்தையோ நெஞ்சோடு அணைத்துக் கொண்டான். உடம்புக்குள் பெரிய போரொன்று நிகழ்வதை உணர்ந்தான்.
ரத்த வாந்தி எடுத்த நொடி, தலை சுற்றல் கொள்ள, வெட்டியிழுத்த கைகால்களால், ஏந்தியிருந்த ஏந்திழையை கரங்களிலிருந்து தவற விட்டான், ஔகத்.
தலை தரையில் பட்ட நொடி, தெளிந்தாள் கீத்து. சடீரென்று எழுந்தவள் அருகில் ஔகத் துன்பத்தில் சிக்குண்டு கிடப்பதைக் கண்டு செய்வதறியாது பதறினாள்.
அவளை பொறுத்த வரைக்கும் முதலில் அவள் மடியில் மரித்தவன் என்று நினைத்தவன் இப்போதைக்கு மீண்டும் உயிர்த்தெழுந்திருக்கிறான், அவ்வளவே,
சிலருக்கு மாரடைப்பு ஏற்பட்டாலும் இப்படித்தான். அறிகுறிகள் அத்தனையும் இறந்தவர்கள் போலிருக்கும். ஆனால், உண்மையில் அவர்கள் மரித்திருக்கவே மாட்டார்கள். மயங்கி மட்டுமே இருந்திருப்பார்கள்.
அதுப்போல ஏதாவது இருக்குமென்ற பகுத்தறிவோடு ஔகத்தை கண்ட நொடி நிம்மதிக் கொண்டாள் பொஞ்சாதியவள்.
புருஷனுக்கு பக்கத்திலிருந்த கொழுந்தன் கீத்துவின் கண்களுக்கு தெரியவேயில்லை. நேரிழையின் மொத்த கவனமும் கட்டியவன் மீதே இருந்தது.
பேரழகனின் கேசரி முகம் மீண்டும் மனித முகமாய் மாறியிருந்தது, மங்கையவளை கையிலேந்திய பொழுதினில்.
ரத்தம் படிந்த விரல்களால் கதறிய தன்னவளின் கன்னத்தை காதலோடு நோக்கிய ஔகத்தோ சிரித்த முகத்தோடு,
''என் அகம்பாவ கள்ளி!''
என்றுச் சொல்லி அம்பகங்கள் ரெண்டும் அவளையே வெறித்திருக்க உயிர் துறந்தான்.
விலோசனங்கள் விரித்து பத்து நிமிடங்கள் கூட கடந்திடாத வேளையில், கணவன் செத்து தாலியறுப்பாள் கீத்து என்று முற்றிழையவள் நினைக்கவேயில்லை.
சொடக்கிடும் வினாடியில் ஔகத் அவளை விட்டி போயிருக்க, அதிர்ச்சியில் நிலைக்குத்தி கிடந்தாள் கீத்து.
ஔகத்தின் இறப்பில் கிலி பிடித்தவள் கணக்காய் அவனைக் கட்டிக்கொண்டவளோ, செல்லகொஞ்சலில் தொடங்கி கோபங் கொண்டு, இறுதியில் கண்கள் மூடி அவன் நெஞ்சிலே தூங்கிப் போனாள்.
மயான அமைதிக் கொண்ட வைரக் கோட்டையில் தனியொருவனாய் கிடப்பது போலுணர்ந்த சுரஜேஷ் நீரிலிருந்து முங்கியெழுந்தவன் கணக்காய் மூச்சு வாங்க எழுந்தமர்ந்தான் தரையில்.
அருகில் மூத்தவனும், அவன் மார்பில் கீத்துவும் இருக்கக் கண்ட சின்னவனவன் படாஸை தேட, வைரச்சுவரோ சிரித்தது ஔகத் வரைந்த ஓவியத்தின் மூலம் வெற்றிக் கோடியை நாட்டி வெற்றி பெற்றது அண்ணன்தான் என்று.
வெறுமனே நேரத்தைக் கடத்திட விரும்பிடாத சுரஜேஷோ, ஸ்மார்ட் கடிகாரத்தின் மூலம் சதஸை தொடர்புக் கொண்டு அடுத்தடுத்து நடக்க வேண்டிய விடயங்களை செயல்படுத்திட ஆரம்பித்தான்.
அன்றைய பிரளயத்திற்கு பின் பூட்டப்பட்ட, கவா இஜென் வைர மாளிகை இன்றைய நாள் வரைக்கும் திறக்கப்படவே இல்லை.
மூத்தவன் பக்கமில்லாத போதும் அவன் வழியையே தார்மீகமாக கொண்டு வருங்காலத்தை எதிர்கொள்ள ஆரம்பித்தான் சுரஜேஷ்.
மகனில்லா சுஜியோ, இழப்பே தலையெழுத்தாகி போனதன் விரக்தியில் மீண்டுமொரு பயணம் கொண்டாள் தனியொருத்தியாய் கேதார்நாத் கோவிலுக்கே.
கெய்டன் இருக்க, கேடிக்கு எவ்விடத்திலும் வேலையின்றி போனது.
கர்ணா மற்றும் கீரன் இருவரும் உடைந்தவளின் உள்ளத்தை ஒட்ட வைத்திட முயற்சித்தனர்.
எக்காலத்திலும் அன்பானவர்கள் மறக்கப்படுவதில்லை.
ஔகத் மற்றும் படாஸ் கூட அப்படித்தான்.
கீத்துவிற்காக அவளின் தாய் குஞ்சரி வாழ்ந்தது போல, சுமந்திருக்கும் குழந்தைக்காய் இனி அகம்பாவ கள்ளியவளும் வாழ்ந்தாக வேண்டிய சூழ்நிலையில் சாமி கும்பிடுவதையே நிறுத்தியிருந்தாள் கிருத்திகா.
நம்பிக்கைத்தானே வாழ்க்கை. பரமேஸ்வரனை நம்பினாளே காவல்காரியவள். ஆனால், அவனோ திருவிளையாடல் நடத்தி அவளைக் கோபித்து கொள்ள வைத்து விட்டான்.
நடந்தது எல்லாம் நடந்ததாகவே இருக்க, வருங்காலமாவது சுபிட்சம் கொள்ளட்டும்.
சில ரகசியங்கள் யாருக்கும் தெரியாமல் இருப்பதே நல்லது.
படாஸ் யாரென்ற கேள்வியின் பதிலும் அதுவே.
படாஸ்...
முந்தைய அத்தியாயங்களை படிக்க:
https://amydeepz.com/forums/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D.14/

Author: KD
Article Title: படாஸ்: 126
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.