What's new

Welcome!

ஹாய் டார்லிங்ஸ்! வெல்கம் டூ எமி தீப்ஸ் நாவல்ஸ் சைட்! இணைந்திடுங்கள் & மகிழ்ந்திடுங்கள்!

SignUp Now!

KD

Administrator
Staff member
Joined
Jul 10, 2024
Messages
414
அத்தியாயம் 59

ஆங்கார வள்ளி கிருத்தியை காதலெனும் கடலில் ஆழ்த்தி, முகிரத்தில் கூடி களித்து, இன்றைக்கோ யாரோ போல் ஔகத் நடந்துக் கொள்வதைத்தான் நேரிழையவளாள் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.

டாக்டர் சாரை, கீத்து எப்படி வேண்டுமென்றாலும் நடத்தியிருக்கலாம். ஆனால், படாஸின் மீது மங்கையவள் கொண்ட காதலோ ரொம்பவே ஆழமானது. அவனின் சிறு விலகலை கூட காரிகையவளால் தாங்கிட முடியாது.

ரேவ்வோடு ஒன்றாக ஆழ்கடல் மாளிகையில் இருந்தப்போது ஒருமுறை ஊஞ்சல் ஆடிட ஆசைக்கொண்டாள் ஆயிழையவள். இளம்பிடியாளின் விருப்பத்தை சில நாட்களிலேயே நிறைவேற்றினான் அசகாய சூரன்.

அவர்களின் படுக்கையறை தளத்தை போதுமான அளவுக்கு தரையிறக்கி, அம்மணியை கையிலேந்தி போனான் படாஸ் நிலத்தடி நீச்சல் குளத்தின் மேற்பரப்பிற்கு.

''இன்னைக்கு என்னே சர்ப்ரைஸ் சார்?!''

என்ற கீத்துவோ கேட்டது கிடைக்கப்போவது தெரியாது காதலனின் கன்னத்தை இடைவெளியற்ற முத்திகளிடையே வினவ,

''இப்போ தெரியும்!''

என்றவனோ தூக்கி வந்தவளை இறக்கி அமர்த்தினான் உடுமீன் ஊஞ்சலில்.

மரித்து போன சிவப்பு நிறத்திலான ராட்சத கடல் விண்மீனையே, விறலி அவளுக்காய் ஊஞ்சலாக்கியிருந்தான் ரேவ்.

நட்சத்திர மீனின் மேனியில் தேவையான இரசாயனங்களை கலந்து அதன் மெத்தென்ற தன்மையை பழையப்படி கொண்டு வந்தவன், பின் அந்நொறுங்கும் மீனின் உடலிலிருக்கும் தேவையற்ற முற்கள் மற்றும் விஷங்களை அப்புறப்படுத்தி அணங்கவளின் பாதுகாப்பை உறுதி செய்தான்.

''படாஸ்..''

என்றவளின் மென்மையான அழைப்பில் அந்திகையின் கால்களோ மெதுவாய் கடல் நீர் பட சிலிர்த்து போயின குளிரில்.

படாஸ் கைக்கடிகாரத்தில் நாரதர் வேலை பார்க்க, ஆணவன் நின்ற தளமோ பளிங்குகள் காணாது போய் ஆழ்கடலின் நேரடியான நீருக்குள் அவனை மிதக்க விட்டது.

அவர்களை சுற்றி பாதுகாப்பு வளையம் மின்சார சக்தி கொண்ட சரடுகளால் ட்ரான்ஸ்பேரண்ட் சாளரம் மூலம் அமைக்கப்பட்டிருந்தது, மிகப்பெரிய பரப்பளவில், மெல்லிய வெளிச்சத்தோடு.

''ஊஞ்சல் புடிச்சிருக்கா கிருத்தி?!''

என்றவனோ பகினியின் காதோரம் கேட்டு, கோதையின் கரங்களை ஊஞ்சலின் ஓரத்து பிடியில் பதித்து இதமாய் இறுக்கினான்.

''என்ன கயிறு இது படாஸ், இவ்ளோ சொப்ஃட்டா இருக்கு?!''

என்றவளோ மகிலையின் செவி மடல்களை உண்டு, வாயு பகவானும் கடுப்பாகும் வண்ணம் ஊஞ்சலை தென்றலாய் முன்னோக்கி நகர்த்தியவனின் கன்னத்தை வருடி கேட்க,

'' அல்சியோனேசியா (Alcyonacea)!''

என்றவனோ சின்னதாய் ஒரு கடி கொண்டான் பனிமொழியின் காதில்.

''அப்படின்னா?''

என்றவளோ மென்காலில் முன்னோக்கி சென்று பின்னோக்கி வந்த ஊஞ்சலாட்டத்தில் லயித்து கேட்க,

''கடல் விசிறி. ஆழ்கடல்லே மட்டுமே வளரும் செடி. ரொம்பவே மிருதுவானது. என் கிருத்தியோட பட்டுக்கையே, மொட்டு பூ மாதிரி, பத்திரமா பார்த்துக்கும்.''

என்றவனோ சனிகையின் உள்ளங்கையில் இதழொத்த,

''கொஞ்சம் முன்னுக்கு வர்றியா படாஸ்.''

என்ற மானினியோ சுரமின்றிய குரல் கொண்டு படாஸிடத்தில் வேண்டுகோள் வைக்க, அரிவையின் முன்னே வந்து நின்றான் ரேவ், நீரில் மிதந்த வாக்கில்.

தொட்டுணர்ந்தவனை, இறுக்கமாய் அணைத்துக் கொண்டாள் வல்வியவள் கொஞ்சமாய் முன்னோக்கி சாய்ந்து.

''டேடி ஞாபகம் வந்துடுச்சு படாஸ்! அவரே ரொம்ப மிஸ் பண்றேன்! நைட் வேலைக்காக டேடி வெளியே போயிடுவாரு, சோ, மோர்னிங் என்கூடதான் வீட்டுலே இருப்பாரு. அடிக்கடி துணியிலே ஊஞ்சல் கட்டி, இப்படித்தான் என்னே ஆட்டி விட்டு, நான் சிரிக்கறதே படம் புடிச்சு வெச்சுப்பாரு!''

என்றவளோ அழுகையில் கண் கட்டினை நனைக்க, அதை முற்றிலும் கழட்டியவனாய்,

''கிருத்தி, கண்ணே திறந்து என் முகத்தே பாரு, உன் கவலையெல்லாம் காணாமே போயிடும்!''

என்றவனோ, முற்றிழையின் கன்னங்களில் வழிந்த கண்ணீரை பெருவிரல்கள் கொண்டு துடைக்க,

''படாஸ், நீ தலைகீழா நின்னு குரளி வித்தை காமிச்சாலும், இந்த கீத்து சொன்ன சொல் மாற மாட்டா! உன்னே இப்போ பார்க்க மாட்டேன்னா, மாட்டேந்தான்!''

என்ற நாயகியோ, அவள் மடியில் முழங்கைகளை படுக்க போட்டிருந்த ரேவ்வின் மூக்கை பிடித்தாட்டி முறுவலிக்க,

''சரி, என்னே பார்க்க வேணாம். உன்னே பார்க்க யார் வந்திருக்காங்கன்னு நீ பார்க்க வேணவா?!''

என்றவனோ அருணியவளுக்காய் வந்திருந்த மஹிஹியை பெயர் சொல்லாது சுட்டிக்காட்டிட,

''என் செல்லக்குட்டி படாஸ், நீங்க என்னே கதை சொன்னாலும், நான் ஏமாற மாட்டேன்! போடா!''

என்றவளோ அவன் நெற்றி பொட்டில் பட்டென அடித்துச் சிரிக்க,

''உன் கண்ணுக்கு நான் தெரிய மாட்டேன் கிருத்தி. ஆனா, என் குரல் கேட்கும். நம்பு.''

என்ற படாஸோ, முகிழ்நகையோடு மெதுவாய் மாயோளை விலகி நீருக்குள் இறங்கினான்.

''படாஸ்..''

என்றவளோ பிரிந்தவனின் கரத்தை எக்கி பிடிக்க முயன்று தோற்று போக,

''என் அகங்கார ஆம்பலே!

இஷ்டமான ஈகையே!

உணர்ச்சியின் ஊடலே!

எறுழ்கின்ற (தீ போல் எரியும் பூ) ஏர்ரே (அழகு)!

ஐதுவான (வியப்பு) ஒண்மையே (மிகுதி)!

ஓர்நாடி (சுழிமுனை) ஔபத்தியமே (புணர்ச்சி)!''

என்ற பேரழகனின் மயக்கும் குரலில், சந்தர்ப்பம் கிடைத்தும் கீத்துவோ, விழிகள் விரித்திடவே இல்லை.

நீருக்குள்ளிருந்து வெளியே தலை தூக்கிய படாஸோ,

''வெண்பாவாய் ஒளி வீசடி

சர்வேஷின் உயிரெழுத்தே!''

என்றுச் சொல்லி, ஊஞ்சலாடிக் கொண்டிருந்த தெரியிழையின் அடிப்பாதம் பற்றி முத்தம் வைத்தான்.

சிணுங்கிய குறுநகையின் ஊடே, அவன் பெயரையே அனத்தினாள் கீத்து. ரேவ்வோ பதில் பேசாதிருக்க முன் யோசனையற்றவளோ பொத்தென சலநிதிக்குள் விழுந்தாள்.

விளையாட்டு வினையாகி போக, பதறியவனோ நீருக்குள் தேவதையாய் குழல் கலைந்தோடிய அழகில் மிதந்த ஏந்திழையை கையில் தாங்கி நீருக்கு மேல் வந்தான்.

நங்கையின் குளிர் கொண்ட சரீரமோ லேசாய் கிடுகிடுக்க, அவன் நெஞ்சின் ருத்ராட்ச மாலையை இறுக்கமாய் பற்றிப்பிடித்துக் கொண்டாள் வதனியவள்.

''என்னே அவ்ளோ புடிக்குமா கிருத்தி?!''

என்றவனோ அந்நொடியிலும் திருசிகள் திறவாதிருந்த தெரிவையின் பூமுகம் ரசிக்க,

''என் டேடிக்கு அப்பறம் நான் அதிகமா நம்பறே ஒரே ஆள் நீதான் படாஸ்!''

என்றவளோ குளிருக்கு இதமாய் தந்தியடித்த இதழ்களை படாஸின் அதரங்களில் கோர்த்தாள்.

படாஸ்...

முந்தைய அத்தியாயங்களை படிக்க:


https://amydeepz.com/forums/படாஸ்.14/
 

Author: KD
Article Title: படாஸ்: 59
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

சுக்கி

New member
Joined
Jul 27, 2024
Messages
17
பண்றதெல்லாம் பண்ணிட்டு யார் அப்பா யார் அம்மா கேள்வி கேட்டு அவனை நோகடிச்சிட்டு இப்ப பாக்க வந்தாளாக்கும் ம்க்கும்
 
Top