What's new

Welcome!

ஹாய் டார்லிங்ஸ்! வெல்கம் டூ எமி தீப்ஸ் நாவல்ஸ் சைட்! இணைந்திடுங்கள் & மகிழ்ந்திடுங்கள்!

SignUp Now!

KD

Administrator
Staff member
Joined
Jul 10, 2024
Messages
414
அத்தியாயம் 72

ஆர்கலியில் கம்பீரமாய் கொலு கொண்டிருந்த அப்பிரமாண்ட கட்டிடத்துக்குள் அதிரடியாய் நுழைந்தான் படாஸ்.

புயலாய் அங்கிருப்போரை கடந்து போனவனை தலை வணங்கினார்கள் மூர்த்திகன் குரூப்ஸ் பணியாளர்கள் எல்லோரும் எழுந்து நின்று.

சூரனவனை தடுக்க முயன்ற மாற்றானின் பயில்வான்களை வாள் வீச்சான பார்வையால் முண்டமாக்கி பின்னோக்கி ஓடிட வைத்தான் பேரழகனவன்.

கழுத்தோர பச்சை நரம்புகள் புடைத்துக் கொண்டு திமிர நிற்க, இரும்புக் கதவை இருக்கரங்களால் அகல திறந்தவனாய்,

''சுரஜேஷ்ட ஏகஷ்ருங்கா!''

என்று கர்ஜித்தான் படாஸ், விழிகள் ரெண்டும் எரிமலையின் கனலாய் அனல் கொண்டிருக்க, குரலோ வெட்டி சாய்க்கும் கோரத்தை உணர்த்தி, மோதாதே சூறாவளியோடு என்று எச்சரித்து மூச்சிரைக்க.

ரத்தஞ்சொட்ட இரையை தூக்கி கடலில் வீசி கொண்டிருந்த வில்லனோ, அறை மொத்தமும் சூடு கிளம்ப ஆவேசங்கொண்டு அவன் பெயர் உச்சரித்து நின்ற ரேவ்வை ஒரு பொருட்டாகவே மதிக்காது, பார்வையை சுறாக்களை விட்டு அகலாதே பதித்திருந்தான்.

''இந்த வேங்கைக்கு நீ இறையாகிடுவே சுரஜேஷ்! இனி ஒரு தரம் என் கிருத்தி பக்கம் உன் காத்து எட்டி பார்த்தாக்கூட!''

என்ற படாஸோ கெத்தாய் சொல்லி, புருவங்களை வில்லாய் உயர்த்தி இறக்கினான்.

ஆட்டங்கொண்டு அதிரிய இடமோ, பேய் மழையொன்று அடுத்தூற்றி நின்றது போல் நிசப்த அமைதிக் கொண்டது எவ்வித சலசலப்பும் இன்றி.

''சும்மாத் தொடமாட்டேன்
நான் தொட்டா விட மாட்டேன்
புடிச்சா நான் தான் உடும்பா புடிப்பேன்
அதிலே நான் தான் கில்லாடி!''

என்ற சுரஜேஷோ, வலக்கால் நீரில் ஊஞ்சலாட, பாதமை கோரித்தப்படி, ஏளன சிரிப்பொன்றை கொண்டான் சத்தமாய், படாஸின் முகம் காணாதே.

''ஏகஷ்ருங்கா!''

என்ற அலறலோடு முன்னோக்கி பாய்ந்த படாஸோ ஆடவனிலிருந்து அஃறிணையின் உருவத்துக்கு மாறினான்.

வேங்கையாய் கர்ஜித்து எகிறி பாய்ந்த அடவி நாயகனோ, கண்ணாடியிலான சாளரத்தை உடைத்து, முன்னோக்கிய உரும்பலோடு, சுரஜேஷ் தூக்கி வீசிய இரையை, வாய் பிளந்து எம்பி பிடிக்க வந்த கடல் ராஜாவின் கோர பற்களை பின்னங்கால்களால் அழுத்தி நீருக்குள் தள்ளி, மேலிருந்து கீழ்நோக்கிய முழுக்கோழியை கர்ஜனையோடு கவ்வி கம்பீரமாய் ஒரே பாய்ச்சலில் திரும்பி வேகத்தில், ஏகஷ்ருங்கனின் நெஞ்சில் தடாரென்று முன்னங்காலை பதித்து நின்றான் ஜாகுவாராய்.

கடல் கூட தகதகவென தீப்பிடிக்கும் சூடு கொண்டது உயர்திணையான சிறுத்தையின் உஷ்ண மூச்சிரைப்பில். அவன் கோபத்தணல் தாளாது சுரஜேஷின் விஷ ஜந்துகள் நிரம்பிய சாளர கூடுகளோ வெடித்து சிதறின.

படாஸின் ஒவ்வொரு உரும்பாலான கர்ஜனையிலும் கானக தளபதியின் முகம் ஜாகுவாரிலிருந்து சிறுத்தையாகி பின் வேங்கையாகி இறுதியில் திரிமூர்த்தியாகி காட்சியளித்தான் சுரஜேஷன் முன்.

கலவையான மிருகமாய் வாயில் கவ்வியிருந்த குருதி ஊற்றிய கோழியை, கூரிய பற்களுக்கு இடையில் அழுத்தமாய் கடித்துக் கொண்டு கழுத்தை மட்டுமே அப்படி இப்படியென்று அசைத்து மொத்தத்தையும் காலி செய்தான் விருகமாய் உருக்கொண்டிருந்த படாஸ்.

மனிதனான மிருகத்தின் செய்கை ஒவ்வொன்றும் சுரஜேஷையே குறி வைத்து எச்சரித்தது, குதறியெடுக்கப்பட்டிடுவான் ஆணவன் இனியும் படாஸின் விஷயத்தில் மூக்கை நுழைத்தால் என்று.

இழைந்தோடும் முறுவலோடு கால் மேல் கால் போட்டப்படி அவன் செய்கையை இமைக்காது சூட்சமமான மிழிகளோட பார்த்திருந்தான் சுரஜேஷ் இம்மியும் பயமின்றி.

படாஸின் கோர உரு மாற்றத்தில் பெரிதாய் வியந்து அதிர்ச்சிக் கொள்ளாதவன், அவனின் மிரட்டலான சீனுக்கு கொஞ்சமும் பதறி தடுமாறிடவே இல்லை.

ஜாகுவாரோ எலும்புகளை கடாக், முடாக் என்று கடித்து விழுங்கி, நாக்கால் வாயை ஒரு ரவுண்டு போய், பின் பெரிதாய் பிளந்து உரும்பியது.

''போடா! போய் அவனே வரச்சொல்லு!''

என்றான் சுரஜேஷ்ட ஏகஷ்ருங்கா, மீண்டும் கிண்டல் தொனி கொண்டு.

கடுங்கோபம் கொண்ட படாஸோ, கையாளாக ஆதங்கத்தை சுரஜேஷின் முகத்தை நெருங்கி அவன் வதனம் எச்சிலில் குளிக்க, கர்ஜித்து வெளிப்படுத்தினான் வேறு வழியில்லாது அசிங்கப்பட்டு போய்.

சுரஜேஷ்ட ஏகஷ்ருங்காவோ மீண்டும் சிரித்திட ஆரம்பித்தான் நக்கல் பார்வை பார்த்தப்படி மிருகமாய் மாறி நிற்கும் ரேவ்வை.

ரணங்கொண்ட வீரியத்தில் சுரஜேஷை வெறித்த படாஸோ, நெஞ்சிலிருந்தவனின் முன்னங்காலை மெதுவாய் நகரத்தி அவன் தோளில் அழுத்தினான். சுரஜேஷின் காயங்கொண்ட இடமோ, வன ராஜா அழுத்திட வலியை கூட்டியது.

அம்பகங்களை குறுக்கிய மயூர கண்ணனோ, அவன் பாணியில் கேவலமான இதழ் முறுவலிப்பு ஒன்றுக் கொள்ள, சுரஜேஷின் வதனமோ கோணியது ஆறிப்போன இடத்தை படாஸ் நகங்களால் குத்தி ஆழம் பார்த்து செம்புனலை வழியவிட.

நாசியோ விரிந்தடங்க, திட்டிகள் ரெண்டும் சிவப்பு வர்ணத்தில் மாறிப்போக, முழு உருவத்தில் கர்ஜித்து ஜாகுவாராகிய படாஸின் கந்தரத்தை ஐவிரலில் நெறித்த சுரஜேஷோ, தரையில் படுத்தப்படியே உரும்பலோடு கொண்டான் பெந்தரின் உருவம்.

இருவரும் மாறி மாறி கர்ஜித்து யார் பலமானவர்கள் என்று காட்டிக்கொள்ள, யுத்தமொன்றுக்கு சாட்சியாக தயாரானது அவ்வறையின் சுவர்கள்.

படாஸ்...


முந்தைய அத்தியாயங்களை படிக்க:

https://amydeepz.com/forums/படாஸ்.14/
 

Author: KD
Article Title: படாஸ்: 72
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top