- Joined
- Jul 10, 2024
- Messages
- 414
அத்தியாயம் 75
சோறு கண்ட இடம் சொர்கம் என்பது போல், கீத்துவை பார்த்த நொடி ஔகத் காலி.
பெரிய அளவில் அவனால், ஆயிழையவள் விபூதி அடி வாங்கியிருந்தாலுமே, இன்றைக்கு என்னவோ இருவரும் அப்படியானதொரு சம்பவத்தை ஞாபகப்படுத்திடாமலே இருந்தனர் பயணம் முழுக்கவும்.
முதலில் ஔகத், தெரியிழையவளை பார்த்த அப்பார்வையின் தாக்கத்திலிருந்தே தெரிவையவள் இன்னும் மீளாதிருந்தாள்.
ஹெல்மட் கொண்டு குனிந்த தலையோடு அன்றைய சம்பவ காட்சிகளை நினைத்துப் பார்த்திட ஆரம்பித்தாள் பாவையவள்.
டாக்டரோடு வாக்குவாதம் கொண்டு தவறான காரிலேறிய கோதையை துரத்தி போன ஔகத்தோ, அவன் வாகனத்தை கொண்டு போய் நிறுத்தினான் கயவனின் ஓட்டுனர் அடங்கிய காரின் முன்னே.
சங்கதி தெரியா கீத்துவோ, காரிலிருந்து இறங்கி காச் மூச்சென்று கத்திட, அவளை கண்டுக்காத டாக்டரோ, வந்த வேகத்தில் சட்டென பற்றி பறித்தான், காருக்கு வெளியில் நின்றிருந்த ட்ரைவரின் காதில் சொருகியிருந்த புளூடூத்தை.
''என் முதுகுக்கு பின்னாடி எதையும் செய்யாதன்னு சொல்லிருக்கேனா இல்லையா?!''
என்றவனோ கீத்துவிற்கு முதுகு காண்பித்து நறநறக்கும் பல்லோடு அடிக்குரலில் அழுத்தங்கொடுக்க, ரிசீவருக்கு அப்பாலிருந்த ஏகஷ்ருங்காவிற்கோ, முகம் இறுகிப் போனது.
எப்போது கீத்து கேஸ் விடயமாய் மூர்த்திகன் குரூப்ஸ்க்கு தந்தி போட்டாளோ, அப்போதே அவளுக்கான சாவு தேதியை குறித்து விட்டான் நிறுவனத்தின் முக்கிய புள்ளியான சுரஜேஷ்ட ஏகஷ்ருங்கா.
காரணம், அவள் படாஸ் கொன்று போட்ட பிணங்களை தொண்டி துருவி மூர்த்திகன் குரூப்ஸ் வரைக்கும் மோப்பம் பிடித்த விடயம், நிறுவனத்தின் தலையாய தலைவனான சுரஜேஷ்க்கு மண்டை குடைச்சலாகி போனது.
அதே வேளையில், கீத்து கேட்டது போல் மூர்த்திகன் குரூப்ஸ்சின் சேர்மேனையெல்லாம் அவ்வளவு சுலபத்தில் பார்த்திட முடியாது. அதை அப்பொறுப்பிலிருக்கும் ஜாம்புவானின் மூடே (mood) முடிவு செய்யும்.
ஆகவே, சீனியரம்மாவை போட்டுத் தள்ளிட பிளான் போட்ட சுரஜேஷ் நல்ல நாளொன்றில் மகிலை அவளை கடத்திட முடிவு செய்தான்.
கைக்கூலிகள் மூலம் மாயோள் அவளை தூக்கி வந்து சுறாக்களுக்கு இரையாக்குவதுதான் அவனின் கெடு பிடியில்லா திட்டம்.
ஆனால், அவன் எதிர்பார்த்திடவில்லை, அன்றைக்கு கேப் காரென்று நினைத்து, சுரஜேஷ் செட் செய்த காரிலேறிய காந்தாரியை ஔகத் காப்பாற்றிடுவான் என்று.
டாக்டர் அவன் அமைதியில், அந்தப் பக்கம் இருப்பவனின் இதயத்தை எகிறிட வைக்க,
''என்னே நிம்மதியாவே விட மாட்டியா ஔகத் நீ?! எத்தனை தடவைதான் சொல்றது, எனக்கு உன்னே புடிக்கலே! புடிக்கலே! புடிக்கலே! படிச்ச முட்டாளா நீ?! புரியாதா உனக்கு?!''
என்ற கீத்துவோ, நிலைமை புரியாது ஏகத்துக்கு வசனம் பேச வாய்க்கு வந்தப்படி,
''கீத்து!''
என்று ஆவேசத்தோடு அலறி, கைகூலியின் கார் ஹுட் குழியாகிப்போக ஓங்கி ஒரு அடி அடித்த ஔகத்தோ, தலையை லேசாய் நகரத்தி கட்டளையிட்டான் வல்வியவளுக்கு போய் அவன் காரிலேற சொல்லி.
பதின்ம வயது கொண்டு அவனை அறிந்திருந்த பனிமொழியோ, முதல் முறை ஔகத்தின் கோப முகத்தை கண்டு ஜெர்க்காகி போனாள்.
அவன் விழிகள் கொண்ட அனலில், உடலில் சிறு நடுக்கம் கொண்டவளாய் குனிந்த தலை நிமிராது, நேராய் போய் அமர்ந்தாள் அரிவையவள் டாக்டரின் காரில்.
சீறிய சிங்கம் அவனோ, பார்வையை பேதையிடமிருந்து விலக்கி,
''சிவனா இருக்கறே என்னே, எமனா ஆக்கிடாதே, ஏகஷ்ருங்கா!''
என்றுச் சொல்லி, பிரேட்சணங்கள் ரெண்டும் மயூர வர்ணங்கொண்டு, பின் மரகத பச்சையாக, புளூடூத்தில் இணைந்திருந்த சுரஜேஷை எச்சரித்தவனாய், அச்சாதனத்தை வாயில் போட்டு கடாக், முடாக்கென்று கடித்து துப்பினான் ரோட்டில்.
அன்றைக்கு தோற்று போன அதே மூர்த்திகன் குரூப்ஸ் சுரஜேஷ்தான், துப்பு கொடுக்கும் நாடகம் ஒன்றை நிகழ்த்தி, கீத்துவை மதுக்கூடம் வரவழைத்தான்.
நம்பி வந்தவளை காக்க வைத்து, மகடூ அவள் அசந்த நேரம் பார்த்து, போத்தல் நீரில் போதை மாத்திரையை கலந்திட வைத்தான் அவன் ஆட்களின் மூலம்.
இறுதியாய், போதைக் கொண்டவளை மீண்டுமொருமுறை கடத்திட முனைந்து மறுபடியும் தோல்வியையே தழுவினான் சுரஜேஷ், அம்மணியின் காதல் கண்ணாளன் படாஸ் வந்து பேடையவளை காப்பாற்றிட.
அசிங்கப்பட்டு போனவனோ, வஞ்சங்கொண்ட கழுகாய் காத்திருந்தான் வெற்றி மகுடத்திற்கான நேரத்தை எதிர்பார்த்து.
சடீரென்று ஔகத் வைத்த பிரேக்கில், அவன் முதுகில் இடித்து பின்னோக்கிய ஒண்டொடியோ, இறந்தகாலத்திலிருந்து நிகழ்காலத்திற்கு திரும்பினாள்.
ஹெல்மட் போட்டிடா டாக்டரோ, பைக்கின் சைட் கண்ணாடியை பின்னால் அமர்ந்திருக்கும் காரிகையின் முகம் தெரியும்படி அட்ஜர்ஸ்ட் செய்தான்.
மெல்லிய புன்னகை கொண்ட மெல்லியாளோ, வஞ்சியவளையே இமைக்காது பார்த்த அழகனையே ரசித்திருக்க,
''கண்ணுக்குள் முள்ளை வைத்து
யார் தைத்தது
தண்ணீரில் நிற்கும்போதே
வேர்க்கின்றது!''
என்றுப் பாடியவனின் நேத்திரங்களோ, தன்னிச்சையாக மயூர வர்ணங்கள் கொள்ள, அவன் மிழிகள் கொண்ட மாற்றத்தை எதிர்பார்த்திடா ஏந்திழையின் விலோசனங்களோ நொடியில் கலங்கி போயின அவளறியாது.
படாஸை இதுநாள் வரைக்கும் மனதால் உணர்ந்த சனிகையோ, இன்றைக்கு நேரடியாய் பார்த்துவிட்டதாய் உணர்ச்சிகள் கொண்டாள்.
ஹெல்மட்டை பட்டென ஒரு கையால் கழட்டிய பகினியோ, அவனையே காதலோடு வெறிக்க, கண்ணசைத்தான் ஔகத் மூடி திறந்தப்படி சின்ன தலையாட்டலோடு, அவனை கட்டிக்கொள்ள சொல்லி.
உதட்டோரம் துளிர்த்த வெட்க சிரிப்பை ஒளித்துக் கொண்ட நாயகியே, இருக்கரங்களால் அவன் நெஞ்சை இறுக்கமாய் பற்றி, அவன் தோளில் முகம் புதைத்தாள் அட்சிகள் மூடி, ஆனந்த கண்ணீர் அருவியாய் கொட்ட.
''லவ் யூ கீத்து!''
என்றவனோ ஒளியிழையின் கரங்களை அவன் கையோடு சேர்த்து இறுக்கிக் கொண்டான்.
ஔகத் முறுக்கிய பைக் வேகமெடுக்க, பைந்தொடியின் மனமோ, லவ் யூ படாஸ் என்று குதியோ குதியென்று குதித்தது.
ஆனால், தொலைதூரத்தில் தேவதையவளை பறிகொடுத்த ரேவ்வோ,
''உன்னே நெனைச்சுதான் நான் வாழவா?!
உன் நெனப்புலே நான் சாகவா?!''
சொல் பெண்ணே, பெண்ணே
சொல் கண்ணே, கண்ணே!''
என்ற வரிகளுக்கு கண்ணீரால் உயிர் கொடுத்து, அஃறிணையாய் உருவமெடுத்து, தறிக்கெட்டு ஓடினான் அடவிக்குள், புண்ணாயிருக்கும் நெஞ்சை பாடையேத்தும் பொருட்டு.
படாஸ்...
முந்தைய அத்தியாயங்களை படிக்க:
https://amydeepz.com/forums/படாஸ்.14/

Author: KD
Article Title: படாஸ்: 75
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.