- Joined
- Jul 10, 2024
- Messages
- 414
அத்தியாயம் 77
தியூடிதரா ஔகத் சர்வேஷ் குமார், அப்படி ஒன்றும் தப்பானவனெல்லாம் கிடையாது. வேகமும் விவேகமும் கூடிய சாதூர்யனான சாணக்கியனே.
அவன் அப்படித்தான். அதுதான் அவன் பிரச்சனையே
அன்பாகினும் சரி, வெறுப்பாகினும் சரி, பாராபட்சம் பார்க்காதே அள்ளி கொடுத்திடுவான்.
கிருத்தி அவன் காதலி. அவ்வளவே. அவனுக்குச் சொந்தமானவள். அது மட்டுமே.
இதுதான் அவன் புத்தியில் அப்போதைக்கு ஓடிய எண்ணங்கள். ஆகவே, அகம்பாவ கள்ளியின் அழகில் போதைக் கொண்டு உரிமையானவளை உக்ரமாய் ஆட்கொண்டு விட்டான் ஔகத், சூழ்நிலையை சாதகமாக்கி.
சரியென்று ஒருபோதும் சொல்லிட முடியாது அவனின் செயலை. இருந்தப்போதும். மன்னிப்பென்ற ஒன்றை கேட்டிடுவானா இல்லையா என்பது அவனுக்கு மட்டுமே வெளிச்சம்.
அடுக்களை நுழைந்தவன் ரொம்ப நேரமாய் அங்கேயே நின்றிருந்தான் குற்ற உணர்ச்சிக் கொண்டு. நடந்த சம்பவத்தை எண்ணி அதீதமாய் வருந்தினான் டாக்டர்.
சுஜிக்கு தெரிந்தால் துடித்து போயிடுவாளே என்று பதறினான். குஞ்சரிக்கு தெரிந்தால் காரி முகத்தில் உமிழ்ந்திடுவாளே என்று தலை குனிந்தான்.
மன்னிப்பு நடந்ததை சரி செய்திடாது என்றுணர்ந்தவனோ, அதைத் தாண்டிய வழியேதும் இல்லை என்பதையும் நன்கறிவான்,
ஆகவே, முதலில் எது முடியுமோ அதையே முயற்சித்திட எண்ணங்கொண்டான் ஔகத். தண்ணீர் போத்தலோடு சோபாவை நோக்கி பயணித்தான் டாக்டர்.
சீரழிந்த சுந்தரியே, டவலை நெஞ்சோடு கட்டிக்கொண்டு சோபாவில் முதுகொட்டி அமர்ந்திருந்தாள்.
கழிவறை சென்று உடலை சுத்தப்படுத்திக் கொள்ளும் மனநிலையில் அவளில்லை. ஆதலால், ஔகத் முதலில் கிழித்து வீசிய வஞ்சியின் ஈர டாப்ஸை கொண்டு அவளை துடைத்துக் கொண்டாள் துடியிடையவள்.
சிக்கு பிடித்த குழலை ஒரு ஓரமாய் இழுத்து முன் நெஞ்சில் போட்டுக் கொண்ட வதனியோ, சோபாவில்
தலையை பின்னோக்கி சாய்த்தப்படி, கண்களை மூடியிருந்தாள்.
இப்போது வரை போலீஸ்காரி அவளுக்கு புரியவே இல்லை, ஏன் படாஸ் என்றைக்கும் இல்லாத முரட்டுத்தனத்தை இன்று கொண்டான் என்று.
அவனை தடுத்திடவும் முடியாது, அவனோடு சேர்ந்து கூடி களிக்கவும் முடியாது நரக வேதனைக் கொண்டாள் கீத்து, முதல் முறை அவர்களின் முயங்கல் சாபமாய் போக பேதையவளுக்கு.
படாஸ் என்ற ஒரே காரணத்தால் மட்டுமே அவனோடு மல்லுக்கட்டி பின் ஜல்லிக்கட்டு காளையவன் முட்டி மோத சுகமாய் வலியை உள்வாங்கிக் கொண்டாள் அந்திகையவள்.
இல்லையேல், எப்போது அடி இடியாய் விழ பறந்திருப்பான் டாக்டரவன்.
ஜன்னல் வழி வீட்டுக்குள் ஊடுருவிய தெருவிளக்கின் வெளிச்சமோ அங்கிருந்த இருளை கொஞ்சம் துரத்தியிருந்தது.
கீத்துவின் காலுக்கடியில் அமர்ந்திருந்த ஔகத்தோ, நினைத்துப் பார்த்தான் அவனின் கேவலமான செயல் மட்டும் சித்தப்பன் மீகனுக்கு தெரிந்தால் என்னாகுமென்று.
கண்டிப்பாய், இனி அவன் முகத்தில் ஒருபோதும் முழித்திடவே மாட்டான் மீகன் என்பது நன்றாகவே தெரியும் ஔகத்திற்கு.
கலங்கிய விழிகளோடு மெதுவாய் கீத்துவின் கால்முட்டியில் தலை சாய்த்தான் மயூர கண்ணழகனவன்.
வேண்டாமென்ற பெண்ணை கற்பழிப்பு செய்த பாவத்தை மட்டும் புத்த பிட்சுகள் அறிந்தால், வெட்கி தலை குனிந்திடுவார்களே என்றவனின் மனசாட்சியோ அவன் ஒழுக்கத்தில் கல்லெறிந்த காமத்தை வசைப்பாடி தூற்றியது.
தெய்வ தூதர்களின் வளர்ப்பை கொச்சைப்படுத்திய ஔகத்தின் செயலால் அவமானத்துக்கு ஆளாகி பழிச்சொல்லுக்கு உட்படுத்தப்படுவார்களே, முற்றும் துறந்தவர்கள் என்று மனம் வெம்பியவனின் கண்ணீர் துளிகளோ சொட்டின சுரிகுழலின் புறங்காலில்.
சத்தமின்றி வழிந்திறங்கிய சுந்தரனின் குற்ற உணர்ச்சியோ, விறலியின் காலை ஈரமாக்க, அவன் வேண்டிடும் மன்னிப்பை கொடுப்பதா வேண்டாமா என்ற மனக்குழப்பத்தில் தேம்பினாள் படாஸின் காதலி.
மென்மையாய் பற்றினான் ஔகத் பாவையின் பாதங்களை. நனைந்திருந்த கால்களை இறுக பற்றியவனின் வாயோ ஒரு வார்த்தையைக் கூட உதிர்த்திடவில்லை.
மாறாய், வெறும் மௌனத்திலேயே அவனுக்கான பாவ மன்னிப்பை வேண்டினான் டாக்டரவன், சேதாரமாக்கிய சேயிழையிடம்.
சூடான உள்ளங்கை காலை பதமாய் பற்றியிருக்க, இமைகள் திறந்த தெரியிழையோ கண்ணீர் கன்னங்களை அருவியாய் நனைக்க விசும்பினாள்.
வயிற்றின் மீது பதித்திருந்த கரங்களில் ஒன்றை மென்மையாய் பிரித்தெடுத்தவளோ,
''ஆசை ராஜா ஆரீரோ
கீத்து கண்ணா ஆரீரோ
தோளிலே மாலையாய்
ஆடும் கண்ணா ஆரீரோ
ஆடும் கண்ணா ஆரீரோ!''
என்றுப் பாடியப்படி வாஞ்சையாய் பேரழகனின் தலை வருட, படக்கென்று சோபாவின் மேலேறி கீத்துவின் வயிற்றில் முகம் புதைத்துக் கொண்டான் ஔகத்.
குலுங்கி கதறினான் ஆணவன் ஒரு வார்த்தை கூட ஒப்புவிக்காது. அவன் அழுகையே சொல்லியது டாக்டரவன் படும் பாடு.
அழகனவனை அப்படியே வயிற்றோடு சேர்த்தணைத்துக் கொண்ட கோதையோ, அவன் தலை மீது தலைசாய்த்து கண்ணோர மை கரைந்தோட மீண்டும் பாடினாள் அதே பாடலை.
''ஆசை ராஜா ஆரீரோ
கீத்து கண்ணா ஆரீரோ
தோளிலே மாலையாய்
ஆடும் கண்ணா ஆரீரோ
ஆடும் கண்ணா ஆரீரோ!''
கிருத்திகாவின் முகம் பார்த்திட கூட ஔகத்திற்கு தைரியமில்லை.
அவளின் நம்பிக்கையை உடைத்தது மட்டுமல்லாது அவன் ஒழுக்கத்தையும் இன்று கேள்விக்குறியாக்கிய நிலையை உருவாக்கியவனுக்கு இப்போதைக்கு தேவைப்பட்டதெல்லாம் ஆறுதலான அரவணைப்பு மட்டுமே.
கீத்து பாடிய அப்பாடலை பாடச்சொல்லி ஆயிழைக்கு சொல்லித் தந்தவனோ படாஸ்தான்.
வழக்கம் போல் அவர்களின் காதலான கலவி ஒரு முடிவுக்கு வர, அவன் கைகளுக்குள் பத்திரமாய் துஞ்சிக் கிடந்த கீத்துவின் காதோரம்,
''கிருத்தி, நாமே கல்யாணம் பண்ணிக்க முடியாத பட்சத்துலே, உனக்கின்னு ஒரு குடும்பம் வந்த பிறகு, நீ என்னே மறந்துடுவியா?!''
என்றவனின் கண்ணீர் மகிலையின் கன்னத்தை நனைக்க,
''ரேவ்! நீ, இந்தக்..''
என்றவளோ என்ன சொல்வதென்று தெரியாமல் திரும்பி அவன் நெஞ்சில் முகம் ஒளித்துக் கொண்டாள் கண்ணீர் பொலபொலக்க.
அவன் கேட்டதில் தவறேதும் இல்லையென்பதை உணர்ந்திருந்த போதும், பெண்டுவாள் அவன் வேள்வியை சாதாரணமாய் கடந்திட முடியவில்லை.
''எங்கப்பா, எங்கம்மாவே ரொம்ப லவ் பண்ணாரு கிருத்தி. ஆனா, எப்போதுமே அவருக்குள்ளே ஒரு பயம், என்னைக்காவது ஒரு நாள் அவுங்க, அவரே விட்டுட்டு போயிடுவாங்களோன்னு.''
என்றவனோ அன்றைய நிர்மலனை நினைவுக் கூர்ந்தான்.
''ஏன்?! என்ன பிரச்சனை அவுங்களுக்குள்ளே?''
என்றவளோ மூடிய கண்களோடு மூக்குறுஞ்சிட,
''அதை விடு! இன்னொரு நாளைக்கு சொல்றேன்! இப்போ நீ பாடு எனக்காக ஒரு பாட்டு! ஒருக்கால், உன் மடியிலே என் உயிர் போக முடியாத நிலையிலே, நான் கண்ணே மூட வேண்டிய சூழ்நிலை வந்தா..'''
என்றவனின் வரிகளில் உயிரே போனது யுவதியவளுக்கு,
''படாஸ்!''
என்றவள் தடுத்தும், மாதங்கியின் வாயை பொத்தியவனோ தொடர்ந்தான் சிரித்த முகத்தோடு குளமான திட்டிகள் நிரம்பி வழிய.
''உன் குரல்லே கேட்கிறே இந்த தாலாட்டுதான் என் காதுலே, நான் கேட்கறே கடைசி சத்தமா இருக்கணும் கிருத்தி! பாடு!''
என்றவன் சொல்லி முடிக்க, அவனை பின்னோக்கி தள்ளியவளோ, வேகமாய் கட்டிலிலிருந்து கீழிறங்கி கால் போன போக்கில் தட்டு தடுமாறி நடைப்போட்டாள்.
''கிருத்தி! நில்லு ! நில்லு கிருத்தி! எங்கே போறே?!''
என்றவனோ ஓடி வந்து பட்டென பனிமொழியின் கரம் பற்ற,
''அங்கிருந்து இங்கு ஒரு நாலடி வெச்சிருப்பேனா?! அதையே உன்னாலே தாங்கிக்க முடியலே! உடனே ஓடி வந்து நிறுத்துறே! ஆனா, நீ மட்டும் செத்துப்போறேன்னு அசால்ட்டா சொல்றே?! அப்போ எனக்கு எப்படி இருக்கும்?! சொல்லு படாஸ்?! சொல்லு?!''
என்றவளோ அவன் முகத்தை கைகளில் ஏந்தி மரண வலியை உணர்ந்தவளாய் கதறினாள்.
அந்நொடித்தான் உணர்ந்தாள் ஏந்திழையவள், படாஸின் மீது அவள் கொண்டிருக்கும் காதல் எவ்வளவு ஆழமென்று. அவன் வெறுமனே சொல்லிய வார்த்தைகளை கூட ஏற்றுக்கொள்ள முடியாது தவித்து போய் விட்டாள் முற்றிழையவள்.
ஒப்பாரிக் கொண்ட ஒண்டொடியை, இறுக்கமாய் கட்டிக்கொண்ட ரேவ்வோ ஏதும் பேசிட முடியாதவனாய் வாயடைத்து நின்றான்.
எப்படி சொல்வது, என்ன சொல்வது என்று அவனுக்குத் தெரியவில்லை.
வல்வியவளை கையிலேந்தியவனோ, மீண்டும் மஞ்சம் நோக்கி, கொண்டு போய் கிடத்தினான் அளகவளை பஞ்சணையில்.
சிறு முறுவலோடு அருணியின் மடியில் மல்லாக்க தலை சாய்த்தான் படாஸ். சொல்ல முடியா ரகசியங்கள் கொண்டவனோ கண்ணீர் வழிந்திறங்க வதூ அவளின் மடியை இறுக்கமாய் பற்றிக் கொண்டான், இதழிலோ இன்னமும் குறுஞ்சிறுப்பு அப்படியே இருக்க.
''ஆசை ராஜா ஆரிரோ, பாட்டு பாடுறியா கிருத்தி?!''
''உங்கம்மா அதான் பாடினாங்களா ரேவ்?''
என்றவளோ அவன் முன்நெற்றி கேசம் கோத, தலையை மட்டுமே ஆட்டினான் படாஸ் திருசிகளால் அவன் காதலியின் முகத்தை இமைக்காது பார்த்து.
''இங்கப்பாரு சாம்பார் நான் பாடுறேன். ஆனா, ப்ரோமிஸ் பண்ணு, இனி நீ இப்படியெல்லாம் பேச மாட்டேன்னு!''
என்ற போலீஸ்கரியோ விசும்பி அவன் நிடலத்தின் மீது அவள் நுதலை ஒட்டிக்கொண்டு சொல்ல,
''பாடு கிருத்தி, என் தலைவிதி மாறிப்போக பாடு! சிவனே எமனாகி வந்தாலும், என் உயிரே கொண்டு போகாத மாறி பாடு!''
என்றவனோ பேடையவள் வயிற்றில் முகம் ஒற்றி மொத்தமாய் புதைந்து போனான்.
கீத்துவோ அழுகையோடு அவன் கோரிய பாடலை பாடிட ஆரம்பித்தாள், படாஸின் தலையை நீவியப்படி.
படாஸ்...
முந்தைய அத்தியாயங்களை படிக்க:
https://amydeepz.com/forums/படாஸ்.14/

Author: KD
Article Title: படாஸ்: 77
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.