What's new

Welcome!

ஹாய் டார்லிங்ஸ்! வெல்கம் டூ எமி தீப்ஸ் நாவல்ஸ் சைட்! இணைந்திடுங்கள் & மகிழ்ந்திடுங்கள்!

SignUp Now!

KD

Administrator
Staff member
Joined
Jul 10, 2024
Messages
382
அத்தியாயம் 84

நிகழ்காலம்


அகம்பாவ சுந்தரியாய் வளம் வந்த கிருத்திகாவை, காதலால் தலை கவிழ வைத்த சாணக்கியன் படாஸ் ஒருவனே.

அவனைத் தவிர வேறொருவனால் அந்திகையவளை நெருங்கிடக்கூட முடியாது. இப்படித்தான் பேடையவள் நம்பிக்கொண்டிருந்தாள்.

ஆனால், அவளின் முட்டாள்தனத்தையே தனக்கு சாதகமாய் பயன்படுத்திக் கொண்ட சாதூர்யன்தான் தியூடிதரா ஔகத் சர்வேஷ் குமார்.

காதல் அழகானது மட்டுமல்ல, ஆபத்தானதும் கூட. கேடி மகனின் காதலும் அப்படியானதுதான். ரொம்பவே சுயநலமானது.

அப்பனை போல் அடுத்தவன் முன் கையேந்தி காதல் பிச்சை கேட்கும் நவீன தேவதாஸ் அவனில்லை.

நேரம் பார்த்து, சூழ்நிலையை அவனுக்கு தோதாக்கி தந்திரமாய் காரியத்தை சாதித்திக் கொள்ளும் கள்ளன் ஔகத்.

ஆனால், உண்மையான அன்பென்பது எப்போதும், யாருக்காகவும் அதற்கானதை விட்டுக் கொடுத்திடாது.

கிருத்தியின் படாஸும் அப்படியே.

தேவதையாய் படுத்துறங்கிக் கொண்டிருந்த காரிகையை இமைக்காது பார்த்திருந்தான் படாஸ், வாய் வெள்ளரி துண்டை பதமாய் கடித்து மென்றிட.

ஊதா வர்ண வெளிச்சத்தில், அறையோ காதலின் வாசம் கொண்டிருக்க, கிறக்கத்தோடு கோமகளின் நாசி உரசினான் ரேவ் அவளின் பேரழகு ஆணவனை என்னவோ செய்ய.

அலையாய் ஆர்ப்பரித்து, ஆயிழையின் நெஞ்சில் கரை ஒதுங்கியிருந்த ஒண்டொடியின் குழல், வைத்த இடம் இல்லாது அக்கம் பக்கமாய் இழுப்பியிருந்த வகிட்டு குங்குமம், கழுத்தோர வளைவில் மீதியாகவும் தலையணைக்கு அடியில் பாதியாகவும் ஒளிந்திருந்த புதுத்தாலியும் மேலும் கவர்ச்சிக் கூட்டியது புது மனைவியாகிய திருமதி ஔகத்திற்கு.

காதல் சீமாட்டிக்காகவே பிரத்தியேகமாக வடிவமைத்திருந்தான் கட்டிட அறிவாளி படாஸ், அவர்களுக்கான மஞ்சமதை செத்து மடிந்த இயற்கையான ராட்சத காளான் ஒன்றைக் கொண்டு.

அதன் மேல் பகுதியோ இதய வடிவம் கொண்டிருக்க, அதிலோ பல வண்ண சொறி மீன்களை தொங்க விட்டிருந்தான் கலாரசிகனவன். மரித்துப் போனவைகளை மீண்டும் உயிர்பித்திருந்தான் வித்தைக்காரனவன், அவனின் வழக்கமான தகிடு தந்தங்கள் கொண்டு.

நங்கையவள் நெஞ்சோடு போர்த்திருந்த போர்வை கூட அதன் சில்னஸை தொலைத்திருந்தது, தெரிவையின் தேகத்தணல் அக்கருப்பு கலர் போர்வையில் ஊடுறுவி, படாஸை சூடாக்க.

மயூர திட்டிகளால் விறலியவளை தின்று செரித்தவன், மெதுவாய் மங்கையின் நுதலில் அவன் நெற்றி உரசினான், ஆணவன் நிடலம் கொண்ட திருநீறு பட்டை தெரியிழையின் நிதலில் கீற்றாய் கோடுகள் கொள்ள.

கடத்தினான் அவன் மேனிக்கனலை
அஃறிணை அழகனவன், கோதையவளுக்குள், இளமையின் தாபம் தாளாது.

இதழ் பிரியா குறுஞ்சிரிப்போடு துயில் கலைந்தாலும் விழிகள் விரிக்கா நாயகியோ, இருக்கரங்களால் தலைவனின் கழுத்தை வளைத்து அவன் நாசியில் இதழொத்த, இச்சென்ற சத்தத்தின் முடிவில்,

''லவ் யூ படாஸ்!''

என்ற அலரின் கன்னத்தை கொஞ்சலோடு முட்டியவனோ,

''சௌரனே (சூரியன்)
ஆரஞ்சாய் முன்னழகு கொள்ள,
வராளியே (நிலா)
மேடு பள்ளமாய் பின்னழகு கொள்ள
ஞாலலே (பூமி)
உன்னெழில் (உன் எழில்) என்போதை அளக்க
மாதம் பனிரெண்டு போதுமா?!''

என்று கவி வடித்து, முகத்தால் படியிறங்கினான் பெதும்பையின் கந்தரத்தில் ஆரம்பித்து இடையில் இடைவெளி விட்டு.

''ஏன், ஔகத் இப்படி பண்றே?! நாளுக்கு நாள் உன் மேலே இருக்கறே கிரேஸ் (craze) அதிகமாகிக்கிட்டே போகுதுடா!''

என்ற மாயோளோ, உதடு கடித்து, நெஞ்சுக்குழி தங்கிய மாங்கல்யத்தை உள்ளங்கையால் இறுக்கினாள், கிறக்கம் கிறுக்கு பிடிக்க வைக்க.

''சிணுங்கும் சித்திரையே
வைர வைகாசியே
அன்பின் ஆனியே
ஆங்கார ஆடியே
அகங்கார ஆவணியே
பேரழகனா புரட்டாசியே
ஐ (அழகு) கொஞ்சும் ஐப்பசியே
காதல் கார்த்திகையே
மோக மார்கழியே
தாப தையே
மயக்கும் மாசியே
பித்தான பங்குனியே!''

என்றவன் முடித்த நொடி, அடவி அந்திரனின் இதழ்கள் பதிந்த பொதிகையோ, ஆறாய் பெருக்கெடுக்க,

''ஔகத்!''

என்றவளின் மோகன அலறலில், யுவதியின் ஏறி இறங்கிய சுருதியோ, சனிகையவளை துவண்டிட வைத்தது கலவி இல்லாமலே‌.

''போதுமாடி என்கிருத்தி?!
மாதம் பனென்டு உனை துதிக்க!''

என்று கவிக்கு முற்றுப்புள்ளி வைத்த கவிஞனோ, முற்றிழையின் அதரங்களை கவ்வி சுவைக்க, ஆணவன் தலை கோதிய தளிரியலோ,

''இரண்டு நதிகள் இணைந்து நடக்கும், புதிய அலைகள் கரையை உடைக்கும்!''

என்ற பாடல் வரிகளை வாக்கியமாய் ஒப்புவித்தாள், கடுக்கண் கண்ணழகனின் முகத்தை தொட்டுரசி, முத்தி முடிய உதடுகள் பிரித்து.

''தலையைக் குனியும் தாமரையே
தலையைக் குனியும் தாமரையே
என்னை எதிர்பார்த்து வந்த பின்பு வேர்த்து
என்னை எதிர்பார்த்து வந்த பின்பு வேர்த்து
தலையைக் குனியும் தாமரையே!''

என்ற படாஸோ பாடகனாய் மாற, அவன் பிடியில் மழலையாய் தஞ்சங்கொண்ட ஏந்திழையோ,

''இது ஒன்னு போதாதா, இந்த ஔகத்தான் என் படாஸ்னு சொல்ல!''

என்றுச் சொல்லி, வெற்று மார்புக்காரனின் வாய்த்தாடையை பிடித்தாட்டினாள் மென்புன்னகையோடு.

பெண்ணவள் கூற்றை கேட்ட படாஸோ, ரசிக்கும் படி சத்தமாய் சிரித்து, சுரிகுழலை நெஞ்சோடு இறுக்கிக் கொண்டான் காதலோடு.

ஔகத்தின் குரலில் ரேவ் பாடக் கேட்ட கீத்துவோ, இருவரும் ஒன்றே என்று இம்முறையும் உறுதிப்படுத்திக் கொண்டாள்.

இருப்பினும், காதலான கணவன் என்றவள் நம்பிக் கொண்டிருக்கும் சூத்திரனின் முகத்தை இன்றளவும் பார்த்திடவே இல்லை பேதையவள்.

காரணம், கிருத்திக்கு ரேவ்வோடான ரகசிய காதல் ரொம்பவே பிடித்திருந்தது.

ஆகவே, ஔகத்துடன் திருமணம் முடிந்து இரண்டு மாதங்கள் கடந்திருந்தாலும், பகலெல்லாம் கேடி மவனோடும், இரவெல்லாம் இளம்பிடியாளின் காதலனோடும் வாழ்க்கையை கொண்டாடி தீர்த்தாள் கீத்து.

ஒளியிழை அவளை பொறுத்தமட்டில் காலையோ, மாலையோ எங்கும், எப்போதும் அரிவையின் இல்லறத்தை அழகாக்குவது படாஸாகிய, தியூடிதரா ஔகத் சர்வேஷ் குமார் என்ற ஒருவனே.

ஆழ்கடல் கோட்டையில் நடக்கின்ற கூத்தேதும் அறியா டாக்டரோ, குப்பிற கிடந்த நல்தூக்கம் கலைய, சட்டென எழுந்தமர்ந்தான் மஞ்சத்தில்.

கட்டியவளோ கட்டிலில் இல்லாதிருக்க, அவள் இடத்தையோ 'படாஸ்' என்ற பெயர் அலங்கரித்திருந்தது தாழம்பூக்களால்.

மலர்களை கைகளால் கசக்கிய ஔகத்தின் அம்பகங்களோ சினத்தில் மரகத பச்சையாகி போனது, கழுத்தோர நரம்புகளோ விம்மி புடைக்க.

படாஸ்...

முந்தைய அத்தியாயங்களை படிக்க:


https://amydeepz.com/forums/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D.14/
 

Author: KD
Article Title: படாஸ்: 84
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top