What's new

Welcome!

ஹாய் டார்லிங்ஸ்! வெல்கம் டூ எமி தீப்ஸ் நாவல்ஸ் சைட்! இணைந்திடுங்கள் & மகிழ்ந்திடுங்கள்!

SignUp Now!

KD

Administrator
Staff member
Joined
Jul 10, 2024
Messages
382
அத்தியாயம் 86

இறந்த காலம்

திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படும், படாது என்ற பஞ்சாயத்தையெல்லாம் தாண்டி, கீத்துவிற்கும் டாக்டருக்கும், குஞ்சரி வீட்டு ஹோலில் கல்யாண பேச்சு பேசி முடிக்கப்பட்டது.

காதலர்கள் இருவரும் மிழிகளால் கதைத்த நேரம், பெரியவர்களோ சிறியவர்களின் விவாகத்தை அடுத்த மாதமே வைத்திட நல்ல நாள் பார்த்தனர்.

டாப்பிக்கின் ஊடே எல்லோரும் உணவில் மும்முரம் காட்ட, அளவாய் உண்ட கீத்துவோ மேல் மாடி நோக்கினாள், விழியால் டாக்டரை கொக்கி போட்டிழுத்து.

அதில் விழுந்த ஔகத்தோ, சீக்கிரமாய் சாப்பிட்டு ஓடினான், மற்றவர்களின் கண்ணில் மண்ணை தூவி, காதலியின் அறை நோக்கி.

அகம்பாவ சுந்தரியோ பால்கனி ஊஞ்சலில் அமர்ந்தாட,

''என்னே நீ, இப்படி பட்டுன்னு ஓகே சொல்லிட்டே?!''

என்ற ஔகத்தோ, அறைக்குள் நுழைந்த வண்ணம் கேட்டான், மேடமின் பொசுக்கென்ற பல்டியடிக்கா சம்மதத்தில் நெகிழ்ந்து.

ஊஞ்சலாடிய பேசா மடந்தையோ, டாக்டரவனுக்கு புன்னகையை மட்டுமே பதிலாக்கினாள்.

''நான் கூட, நீ வேணா, முடியாதுன்னு சொல்லி சண்டையெல்லாம் போடுவியோன்னு நினைச்சேன். ஆனா, பரவாலே டக்கின்னு ஓகே சொல்லி, கையே காலே புடிச்சு கெஞ்சறே வேலையெல்லாம் மிச்சம் பண்ணிட்டே!''

என்று சிரித்தப்படி தெரிவையின் பின்னால் போய் நின்றவாக்கில், ஊஞ்சலின் விளிம்பில் கரம் பதித்து அதோடு சேர்ந்தாட,

''எப்போதுமே பார்க்க விருப்பப்படறே முகத்தே, தினமும் பார்க்க இதைவிட ஈஸியான வேறே வழியேதும் இருக்கா, என்னே?!''

என்றவளோ முன்னோக்கி கையை நீட்டி, பால்கனி விளிம்பின் கம்பிகளை எக்கித் தொட்டு, ஊஞ்சலோடு பின்னோக்கினாள் குறும்பாய் சிரித்து.

''அதுக்கு எதுக்கு அடுத்த மாசம் வரைக்கும் வெயிட் பண்ணணும்! இப்பவே, பார்க்கலாமே?!''

என்றவனோ ஊஞ்சலின் முன் பக்கமாய் வந்து கீத்துவின் வதனம் நேராய் நோக்கி ஊஞ்சலோடு சேர்ந்து முன்னோக்கியும் பின்னோக்கியும் பயணித்தான்.

இமைக்காது பார்த்த ஔகத்தின் பார்வைகளில், பாவையின் தேகமோ செல்லரித்து போக,

''ஷட் ஆப் ஔகத்!''

என்றவளோ நாணிய புன்னகையோடு ஆணவனை எச்சரித்தாள்.

''ஹேய், நான் என்ன பண்ணேன்?!''

என்றவனோ கிண்டல் தொனியோடு சிரிக்க,

''நீ பாக்கறதே விட, பேசறதே மேல்!''

என்றவளோ குறுஞ்சிரிப்போடு, நங்கையின் வதனம் நெருங்கிய ஔகத்தின் நெஞ்சில் கரம் பதித்து அவனை பின்னோக்கி தள்ள,

''எனக்கு கண்ணாலே பேசத்தானே புடிச்சிருக்கு.''

என்ற டாக்டரோ, தளிரியளவளை அம்பகங்களால் சொக்கிட வைக்க, அவனில் உருகியவளோ, ஆணவன் மார்பில் பதித்த கரத்தை மேல்நோக்கி அவன் கந்தரம் உரசி காதோடு சேர்த்து தலையை கதகதப்பான உள்ளங்கையால் அணைத்தாள்.

ஔகத்தின் மேனியோ புல்லரித்து போனது, மங்கையின் அனலான தீண்டல் அவனுக்குள் கலகத்தை மூட்டிட.

''ஸ்டோப், கீத்து!''

என்ற டாக்டரோ, விலோசனங்கள் மூடித்திறந்தான், சில நொடிகள் அச்சீண்டலில் சிலாகித்து.

அவன் செயலை ரசித்து சிரித்த சிங்காரியோ,

''நம்ப ட்ரீட்மெண்ட் எப்படி டாக்டர்?!''

என்ற நக்கலோடு அவளின் கரங்களை ஔகத்தின் தலையிலிருந்து பிரித்தெடுத்துக் கொண்டாள்.

ஏதும் பேசாத ஔகத்தோ, கொஞ்சமாய் வெட்கப்பட்டு, குனிந்த தலை நிமிராது, அருணியின் பக்கமாய் சென்றமர்ந்தான் ஊஞ்சலில், பைந்தொடி அவளை பார்க்கும் விதமாய், ஒருகால் மடக்கி, மறுகால் தரை தொட.

''என்ன பண்ணே போறே?''

என்றவளோ மெதுவாய் பின்னோக்க, முன்னோக்கிய டாக்டரோ, இளம்பிடியாளின் இடையை அவன் நோக்கி இழுத்துக் கொண்டவனாய், இதழோரம் முறுவல் கொண்டு,

''சரி, சொல்லு எதுக்காக என்னே கட்டிக்க ஓகே சொன்னே?''

என்றுக் கேட்டான்.

''நீதான் படாஸ்னு நிரூபிக்க வேணாவா?!''

என்ற நேரிழையோ, நயனங்கள் மூடியப்படி அவன் முகம் உரசி கிறக்கமான குரல் கொண்டாள், டாக்டரோ பகல் கனவுக்காரியை எண்ணி மௌன சிரிப்பு கொள்ள.

ஔகத்தின் அமைதியில் நேத்திரங்கள் திறந்த தெரியிழையோ,

''ஆமா, நீ ஏன் ஓகே சொன்னே?!

என்று குறும்பு பார்வை கொள்ள,

''நான் படாஸ் இல்லன்னு, நிரூபிக்க வேணவா?!

என்ற ஔகத்தோ, இடைவெளிக்கொண்ட அவர்களின் இதழ்களை இணைசேர்த்தான்.

உதடுகளின் எச்சில் கும்பாபிஷேகம் ஒரு முடிவுக்கு வர, வஞ்சியின் கழுத்தோரம் புதைந்தான் ஔகத்.

''வேணா, ஔகத்! ஆள் இருக்காங்க வீட்டுலே!''

என்றாள் பெதும்பையவள், அவன் பின்னந்தலையை இறுக்கிய வண்ணம்.

''இருக்கட்டும் பரவாலே!''

என்றவனோ முற்றிழையின் செவிமடல்களை நாவல் வருட,

''மம்மி அடிப்பாங்கடா!''

என்ற கொற்றொடியின் உடலோ தளர்ந்தது.

''உனக்கும் சேர்த்து நானே வாங்கிக்கறேன்!''

என்றவனோ பட்டென ஏறெடுத்து, ஏந்திழையவளை கையிலேந்தி கொண்டு போய் கிடத்தினான் மஞ்சத்தில்.

''வேண்டாம் ஔகத்! யாராவது வந்துட்டா, பாதியிலே ஸ்டோப் பண்ணணும்! கஷ்டமா போயிரும்!''

என்றாள், வாலிபனின் தொடுகையில் அறுவடைக்கு தயாராகியிருந்த நெல்குத்து அரிசியவள், தாபத்தை அடக்கிக் கொண்டு.

''ஹாங்கிரி கோஸ்ட் மூமெண்ட் உனக்கு வேணவா கிருத்தி!''

என்றவனோ வாஞ்சையாய் வதனியின் கன்னம் வருட,

''படாஸ்!''

என்ற அம்மணிக்கோ, கண்ணெல்லாம் கலங்கிப்போய் விட்டது, ஔகத் சொன்ன வார்த்தையில்.

இருக்காதா பின்னே, இது அவளும் படாஸும் கலவி கொள்கையில் பயன்படுத்திடும் கோர்ட் வெர்ட் ஆகும்.

காதலோடு அவன் முகத்தை இருக்கரங்களுக்குள் அடக்கிய கீத்துவோ,

''ஐ மிஸ் யூ படாஸ்!''

என்று விழிகள் சொருகி அனத்திட ஆரம்பித்தாள், மனம் பறித்த கள்வனின் பெயரை, கண்ணோரம் அழுகை நதியாக, ஆணவன் விரல்களோ விறலியின் தேகத்தில் புகுந்து விளையாட.

சுந்தரியின் முனகலை முகிழ்நகையோடு ரசித்தவனோ,

''ஐ லவ் யூ கிருத்தி!''

என்றுச் சொல்லி, படாஸின் கிருத்தியோடு சங்கமித்தான், முதல் முறை பேரழகனின் மயூர விழிகள் ரெண்டும் மரகத பச்சையாகி போக.

படாஸ்...

முந்தைய அத்தியாயங்களை படிக்க:

https://amydeepz.com/forums/படாஸ்.14/
 

Author: KD
Article Title: படாஸ்: 86
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top