What's new

Welcome!

ஹாய் டார்லிங்ஸ்! வெல்கம் டூ எமி தீப்ஸ் நாவல்ஸ் சைட்! இணைந்திடுங்கள் & மகிழ்ந்திடுங்கள்!

SignUp Now!

லதா நாவல் ரிவ்யூஸ்

KD

Administrator
Staff member
Joined
Jul 10, 2024
Messages
412
#லதா_நாவல்_ரிவ்யூஸ்

கதை – பாம்ஷெல் திரிலோ

ஆசிரியர் – எமி தீப்ஸ்

நாயகன் – கர்ணன் ராதேயன்
நாயகி – திரிலோ

கதைப் பெயரே வித்தியாசமா இருக்குல்ல... (பாம்ஷெல்னா ஒரு பர்பியூம் பேராம்)

இவங்களோட தலைப்பு எல்லாமே வித்தியாசம் தான்.
தொடர்ந்து நடக்கும் பேங்க் கொள்ளையைக் கண்டு பிடிக்கப் போகும் போலீஸ்காரர், நம்ம ஸ்ட்ரெஸ் கிங் கர்ணன் ராதேயன், கொள்ளைக்காரின்னு சந்தேகப்பட்ட திரிலோ கிட்ட அவன் மனசையே கொள்ளை போக விட்டுடறான்.

அதை மீட்டானா..? கொள்ளைக்காரி யாருன்னு கண்டு பிடிச்சானா...?

கொள்ளையைக் கண்டு பிடிக்க போலீஸ்காரங்க துப்பு கிடைக்காம திணறும் போது அதை அப்படியே தனது நாவலில் புட்டுப் புட்டு எழுதி வைத்திருக்கும் நாவலாசிரியை திரிலோ. கொள்ளையைப் பத்தி விசாரிக்க வந்தவனுக்கு துப்பு கொடுக்கறேன்னு அவன் மனசைக் கொள்ளை அடிச்சதோட இல்லாம இவ மனசையும் அவன் கிட்ட கொடுத்துடறா...

அப்புறம் என்ன...? மோதல், காதல், மீண்டும் மோதல், மீண்டும் காதல்னு அழகழகா காட்சியை வைத்து அவங்க காதலை அருமையா டெவலப் பண்ணி இருக்காங்க ஆசிரியர். படிக்கிற நமக்கு ஒரே குஜால் தான் போங்க...

அதும் நம்ம ஸ்ட்ரெஸ் கிங் அவனுக்கு கோபத்துலயும், காதல்லயும் வர்ற ஸ்ட்ரெஸ்ஸை இறக்கி வைக்கிற அழகு இருக்கே... கிடைச்சவன்(ள்) தாறுமாறு தக்காளிச் சோறு தான். இவங்க ரெண்டு பேரோட காதல் மட்டுமில்ல, இன்னும் நிறைய ஜோடிங்களோட காதலையும் அழகா சொல்லி இருக்காங்க. எல்லாமே மனசை டச் பண்ணற ஜோடிங்களா இருக்காங்க...

லவ் அண்ட் லவ் ஒன்லின்னு சொல்ல முடியாம அப்பப்ப கடமையும் பார்க்கிற போலீஸ்காரங்க தான் நம்ம ஹீரோ அண்ட் அவனோட பிரன்ட்ஸ் கௌதமும், டமனும்.

அப்புறம் முக்கியமான ஒரு கதாபாத்திரம் மிஸ்டர் கான், பச்சைக்கிளி கான்... இவன் பண்ணுற அலும்பும் மைன்ட் வாய்ஸும் இருக்கே... ஹப்பா, சிரிச்சு முடியல.

ஆசிரியர் ஒரு சிறந்த வடிவேல் ரசிகர் போலருக்கு... (செட்டப் செல்லப்பா, வீரபாகு, பச்சக்கிளி, சிம்ரன் னு நிறைய செல்லப்பேரு)

கதை ஆரம்பம் முதல் இறுதி வரை செம விறுவிறுப்பு. அதுவும் அந்த மால்ல நடக்கிற ஷூட்டிங் சீன், அங்கே நடக்கிற களேபரம். அதுல மொத்தக் கதைல இருக்கற கதாபாத்திரங்களை வர்ணிச்சதுன்னு ஒரு சினிமா பார்த்த பீல். ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க எமி.

கதாபாத்திரங்கள் எல்லாருமே மனசைக் கவரும் விதத்தில் அழுத்தமான பாத்திரங்களா இருக்காங்க.

கர்ணன், திரிலோ மனசை மட்டுமில்லாம நம்ம மனசையும் சேர்த்து அவன் குணத்தால கொள்ளை அடிச்சிடறான். இவனை முதல்ல பிடிச்சு ஜெயில்ல போடணும்.

உண்மையான கொள்ளைக்காரியை கண்டு பிடிச்சு என்ன தண்டனை கொடுத்தான்னு கதைல படிச்சு தெரிஞ்சுக்கோங்க.

ரொம்ப அருமையான லவ் ஸ்டோரி. வாழ்த்துகள் எமி.

கதை கிண்டிலில் இருக்கிறது.

என்றும் நட்புடன்,
லதா பைஜூ.

பாம்ஷெல் திரிலோ முழுத்தொகுப்பு படிக்க:


பாகம் 1: https://a.co/d/fOAYhVO

பாகம் 2: https://a.co/d/dCpm6fM

பாகம் 3: https://a.co/d/cT2n0z4

பாகம் 4: https://a.co/d/5QPOiRn

பாகம் 5: https://a.co/d/2GEzJk2

பாகம் 6: https://a.co/d/1yaqKVd
 

Author: KD
Article Title: லதா நாவல் ரிவ்யூஸ்
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top