What's new

Welcome!

ஹாய் டார்லிங்ஸ்! வெல்கம் டூ எமி தீப்ஸ் நாவல்ஸ் சைட்! இணைந்திடுங்கள் & மகிழ்ந்திடுங்கள்!

SignUp Now!

KD

Administrator
Staff member
Joined
Jul 10, 2024
Messages
498
அத்தியாயம் 132

விதி அதன் வேலையை தேவையான நேரத்தில் மிக மிக சரியாகவே செய்திடும்.

தீனவானனின் பைக் நடு இரவில் சத்தம் போட்டதும், அதை ப்ரீதன் ரவுண்டடிக்க கொண்டு போனதும், விசா டக்கென்று துயில் கலைந்ததும், கணவனவனை தேடி வெளி வாசல் வரை வந்ததும், பக்கத்து பங்களாவை எதார்ச்சையாய் கண்டதும், அவ்விடம் நோக்கியதும், வீடு திரும்பியவன் பைக் விபத்தானதும், இரக்கமற்ற காட்சிக்கு சாட்சியாகியதும் பின் அதை தடுக்க மாளிகைக்குள் நுழைந்ததும் என்று எல்லாமே விதியின் அழகான சதியே.

குஞ்சரியை கட்டிலில் கலை பொருள் போல் கைகால்களை கட்டி தொங்க விட்டு காணாமல் போயிருந்த தீயவனோ போதையான உடம்புக்கு மேலும் வேகம் சேர்க்க வீட்டின் பின்புறமாய் பார்க் செய்திருந்த கயவர்களின் காருக்குள் நெருப்பை பற்ற வைத்து நாசி வழி வஸ்துவை நுகர்ந்து அதன் வீரியத்தில் திளைத்திருந்தான்.

அந்நேரம் பார்த்து மேல் மாடி நோக்கி ஓடோடி வந்த விசாவோ கயிறுகளால் கைதியாக்கப்பட்டிருந்த குஞ்சரியை விடுவித்து வீல் சேரில் அமர்த்த, போதையேறிய கள்வனோ பெண்களிருந்த அறை வந்து சேர்ந்தான்.

சிக்கினாள் விசா கொடூரனின் கையில் குஞ்சரிக்கு பதிலாய் மஞ்சத்தில் அவனுக்கு விருந்தாகிட.

வீட்டுக்குள் நுழைந்த ப்ரீதனோ வரவேற்பறையில் ரத்த வெள்ளத்தில் கிடந்தவனை கண்ட பதைப்போடு மேல் மாடி விரைந்தான் சத்தம் கேட்க. ஆனால், அவசரத்தில் எட்டு வைத்த அடிகளோ ஆணவனை மாடி படியினில் விழுந்து வாரிட வைத்தது எழ முடியாதப்படி.

அப்பெரிய மாளிகைக்குள் மாடி படி ஒன்றல்ல ரெண்டு. ப்ரீதன் மற்றும் விசா பயன்படுத்தியது முன் பக்கமென்றால் ரீசனும் அவன் பொண்டாட்டியை கோழியாட்டம் கட்டிப்போட்ட கள்ளனும் உபயோகப்படுத்தியது பின்பக்க மாடியாகும்.

ரீசன் வந்தான். கயவனை கொன்றான். உயிரை துறந்தான்.

ப்ரீதனோ அவன் வல்லபியை காப்பாற்றி உயிரை விட்டிருந்தவனுக்கு கைமேல் அடித்து எவ்வித சத்தியத்தையும் செய்து கொடுக்கவில்லை என்றாலும் ரீசனின் தியாகத்திற்கான பிரதிபலனை கீத்து விஷயத்தில் காண்பித்தான்.

சம்பவம் நடந்து முடிந்த பிறகே கீரன் ஸ்பாட்டுக்கு வர கீத்துவை மருத்துவமனைக்கு தூக்கி போன ப்ரீதன் மட்டுமே அறிவான் சிறுமியவளை பாலியல் பலாத்காரம் செய்வதற்கான முயற்சிகள் கயவர்களால் எடுக்கப்பட்ட தகவல்களை.

கூடவே, அவளின் உடலிலிருந்த போதையையும் குட்டியவளுக்கு ட்ரிப்ஸ் ஏற்றி வெளியேற்றிட மருத்துவரோடு சேர்ந்து ப்ரீதன் ரகசியமாகவே போராடினான்.

பின்னர், அது எப்படியோ கீரனுக்கு தெரிய பெண் பிள்ளை என்பதால் தகப்பன் முறையில் இருந்த இருவருமே கீத்துவின் வாழ்க்கையை பாதிக்கும்படியான விஷயங்களை குழித் தோண்டி புதைத்து விட்டனர் அவர்களுக்குள்ளரேயே.

இன்றைய நாள் வரை இதை குஞ்சரியும் அறியவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இதைவிட சூப்பரான சங்கதி யாதெனில், அதீத போதை அதுவும் சின்னங்சிறு சிறுமி என்பதாலும் அரை மயக்கத்தில் மருத்துவமனைக்கு தூக்கி வரப்பட்ட கீத்துவோ குறிப்பிட்ட கலவரையறையில் நிகழ்ந்திருந்த சம்பவங்களை மறந்திருந்தாள்.

அதாவது, சின்னவள் அவளின் எண்ண ஓட்டத்தில் ஹோக்கி ஸ்டிக்கை கையில் கொடுத்த டேடி ரீசனும் அதற்கு பிறகு சந்தித்து அளவளாவிய அவளின் மம்மி குஞ்சரியும் மட்டுமே நிலைத்திருந்தினர்.

குறிப்பிட்ட அக்காட்சிகள் மட்டுமே கீத்துவின் மூளைக்குள் அன்றைய நாளுக்கான நிகழ்வுகளாய் அடக்கமாகிக் கிடக்க மற்றவையெல்லாம் மறந்து போயிருந்தது குட்டியவளுக்கு. மருத்துவரோ அதை போஸ்ட் ட்ராவ்மாட்டிக் அம்னீஷியா (Post-traumatic amnesia) என்றார்.

அதற்கேற்றாற்போல, சிகிச்சையிலிருந்த கீத்துவோ கண் விழித்த நொடி அனைவரிடமும் நல்லப்படியாய் பேசினாலும் அவள் அப்பா ரீசனை காணாது ரொம்பவே தவித்து போனாள்.

ப்ரீதன் மற்றும் கீரன் இருவரும் மறைத்திருந்தனர் ரீசன் தவறிப்போயிருந்த சங்கதியை எங்கே உண்மை கீத்துவின் மனநிலையை பாதித்து சிகிச்சையைக் கெடுதிடுமோ என்று.

டிஸ்சார்ஜ் ஆகி வீடு வந்தவள் அப்பாவின் சடலத்தைக் கண்டு ஒப்பாரிக் வைத்தாள் உயிரே போகும்படி. இருந்தும், பாவம் கீத்து. சின்னவள் அவளுக்கு துளியும் ஞாபகம் வரவில்லை மறந்து போன எதுவும்.

டேடியின் மரணம் கொடுத்த அடியை தாங்கிட முடியாத சிறுமியவள் மயங்கி விழுந்தாள் பெட்டியிலிருந்த ரீசனின் நெஞ்சிலேயே.

சாவு வீடு கலவரமாகி போக பருவமெய்திடாத மகளவளை தூக்கி போய் மஞ்சத்தில் கிடத்தினான் கீரன் ஆரழகன்.

போர்வை போர்த்தி இல்லாது போன டேடிக்காய் குலுங்கி கதறியவள் நொடியில் கண்ணயர ரீசன் மரிக்கும் முன் மகளிடத்தில் பேசிய விஷயங்களும் அவன் பதித்த நெற்றி முத்தமும் கனவாய் வந்து போனது கீத்துவின் சிந்தைக்குள்.

படக்கென்று விழித்தவள் முகத்தை நீராடித்து கழுவி உற்று நோக்கினாள் சுவர் கண்ணாடியை.

வீட்டின் முன் வாசல் பாடையில் உயிரற்று கிடக்கும் ஜடமாகிய ரீசனே கண்ணாடியில் உயிர் கொண்டு நிற்பதாய் உணர்ந்தாள் மகளவள் அப்பனை அப்படியே உரித்து வைத்திருந்த டேடியின் சின்ன லேடியவள்.

கண்களை இறுக்கமாய் மூடி திறந்த சின்னவள் நீண்டதொரு பெருமூச்சுக் கொண்டாள். லோங் ஸ்லீவ் கொண்ட வெள்ளை ப்ளாவ்ஸை அணிந்தவள் அதை ரீசனை போலவே முழங்கை வரைக்கும் மடக்கி விட்டுக்கொண்டாள்.

வெளியேறினாள் அறையிலிருந்து ரீசனின் மகளவள் பலரின் அழுக்குரல் கோரஸ்ஸாய் கேட்க ரீசனை சவ ஊர்தியில் ஏற்றிடும் கணக்காய்.

முடிவெடுத்து விட்டாள் தீர்க்கமாய் கீர்த்திகா தீனரீசனவள் குஞ்சரியின் புருஷனான ரீசனின் இடத்திலிருந்து இனி அவள் அம்மா தேவகுஞ்சரியை கண்ணில் வைத்து காப்பதற்கு.

லேடி பீஸ்டின் பிக் பாஸ் நான்

32.png
 

Author: KD
Article Title: அத்தியாயம் 132
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top