- Joined
- Jul 10, 2024
- Messages
- 498
அத்தியாயம் 19
ஆஹ்.. வெயிட்! ரீவைண்ட் பிளீஸ்.
அம்மணி இடிக்க, வர்மா விலக, பாறையின் கூரிய பகுதியை நோக்கி கோற்றொடியின் தலை போக, டக்கென்று முன்னேறிய வர்மாவோ பாய்ந்து அவனின் இடது பின்னங்காலை பாறையில் பதித்தான் நிலையாய்.
பாறையின் கூரிய முனை அவனின் இடது முன்னங்கையின் புறத்தில் அழுந்தி நிற்க, அதே கரங்கொண்டு ஏந்தியிருந்தான் வர்மா நாயகியவள் சிரசை.
பற்றியிருந்தவளின் கபாலத்தை மிக பத்திரமாய் நெஞ்சோடு இறுக்கியிருந்தான் வர்மா. விழுந்தது வேங்கை அவன் இதயத் துடிப்பு துல்லிதமாய் சுந்தரியவள் செவிகளில்.
உடல் சிலிர்த்து போக, சத்தமின்றி மூச்சு வாங்கிய வஞ்சியோ ஏறெடுத்த விழிகள் இமைக்காது அவளின் தலையை மெதுவாய் மேலேத்தி பார்த்தாள்.
மங்கையவள் அசைவில் லேசாய் அடித்தொண்டை கொண்டு வாய் திறக்காமல் உறும்பிய வர்மா முன்னோக்கியிருந்த அவன் தலையை கொஞ்சங் கொஞ்சமாய் பின்னோக்கி கொண்டு வந்தான்.
புளிப்பையாவின் தேகம் கோதையின் உடலோடு உரசி இறங்க, பெண்ணவள் மேனியோ அவளறியாது நாணம் கொண்டது. காரிகை அவளோ மறந்திருந்தாள் வர்மா ஆணல்லா வயமா என்று.
காதலுக்கு கண்ணில்லை என்பதெல்லாம் சரிதான். ஆனால், இது என்ன கேட்டகிரி என்றே தெரியவில்லை.
வர்மா என்று எப்போது அவனுக்கு மிருடானி அவள் பெயர் வைத்தாளோ அப்போதே மனசுக்குள் கன்னியவளுக்கு அவன் மீது ஒரு இஸ்க்கு இஸ்க்கு பிறந்து விட்டது எனலாம்.
வயமாவிற்கும் அப்படி ஏதும் இருக்குமோ என்னவோ. யார் கண்டது. மாஞ்சி மாஞ்சி அவன் அவளை கவனிப்பதையெல்லாம் பார்த்தால் இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம்.
வர்மாவின் பஞ்சு போன்ற மேனி தந்த உராய்வில் மிழிகளை மூடி பைந்தொடியவள் நெளிய நாயகன் அவனோ, வலது முன்னங்கைகொண்டு வாசுரையின் முதுகினை மெதுவாய் வருடியப்படி, நிமிர்ந்திருந்த அவனின் தலையை கீழிறக்கினான்.
வயமாவின் தலை குனிந்திருக்கவும் ஏந்திழையின் தலை மேல் நோக்கி இருக்கவும் ஆணவனின் பச்சை கண்களும் பெண்ணவளின் குண்டு விழிகளும் ஒன்றென கலந்தன அக்கணத்தில்.
பொற்றொடியின் நாசி ஒட்டி கிடந்தவனின் மூக்கோடு சேர்ந்த முகமோ அவளின் தலையை விட இரண்டு மடங்கு பெரிதாய் இருந்தது. வர்மாவின் தின்றிடும் பார்வைகளை பாவையவள் நயனங்களை இமைக்காமல் உள்வாங்கி கொண்டாள்.
மடந்தையின் சிரசு கச்சிதமாய் வர்மாவின் உள்ளங்கைக்குள் அடங்கி போனது. நேத்திரங்கள் சிமிட்டி கறுப்பழகியின் கன்னம் உரசினான் வர்மா அவன் கன்னம் கொண்டு.
மயக்கம் தலைக்கேற தளிரியளின் உடலோ ஓரிடம் நிலை கொள்ளாது அனத்தியது ரகசியமாய்.
உணர்ச்சி என்பது மனித குலத்துக்கு மட்டுமே வித்திட்ட ஒன்றல்லவே. கடவுளால் உலகத்தில் சஞ்சரிக்கப்பட்ட ஒவ்வொன்றும் உணர்ச்சி கொண்டவையே.
மிருடானியின், அருள்மொழி வர்மா இவனும் அப்படியே.
புலிப்பையாவின் தோலில் படர்ந்திருக்கும் அடர்த்தியான விஸ்கர்கள், இரத்தக்குழாய்களால் சூழப்பட்டிருக்கும்.
ஆழமாய் வேரூன்றி இருக்கும் அவைகள் இப்போது இளமையான வர்மாவிற்குள் மாற்றத்தினை ஏற்படுத்தி வேடிக்கை பார்த்தது.
உணர்ச்சியில் கிளர்ச்சி கொண்டவன் தலையை சிலிர்ப்பி ஆட்டினான். அவனின் முகவாயில் பொதிந்திருந்த தடுமனான நீண்ட வெள்ளை வர்ண விஸ்கர்கள் நங்கையவளின் முகம் தீண்ட சிலாகித்து விலோசனங்கள் மூடிக்கொண்டாள் வெட்கி சிவந்த வல்வி.
வயமாவின் பரம்பரையை பொறுத்தவரை ஐந்து வெவ்வேறான விஸ்கர்கள் அவைகளுக்கு உண்டு. வேங்கையின் யாக்கையில் இடத்துக்கு இடம் உணர்ச்சித் தகவல்களைக் கண்டறிந்து மாற்றங்களை அவை ஏற்படுத்தும்.
நோவில்லா நங்கையின் தேகம் இப்போது பருவ காய்ச்சல் கொண்டது. நிலத்தில் கிடந்த கால்களை ஒன்றோடு ஒன்று பினைத்துக் கொண்டாள் வாஞ்சினியவள்.
முதல் முறை காட்டுவாசிகளிடமிருந்து வர்மா அவளை காப்பாற்றிய பொழுதே மொத்தமாய் விழுந்து விட்டாள் பகினியவள். மயங்கி சொக்கித்தான் கிடக்கிறாள் நிஜத்தில் அவனின் வீர தீர சீன்களால்.
அனேகமாய் இதற்கு பிறகு, அடித்து கூப்பிட்டாலும் நகர மாட்டாள் போல மாடர்ன் கேர்ள் மிருடானி பிரேசிலின் அடர்ந்த ஆரணியமான அமேசோனை விட்டு.
தகிப்பு தாங்காது வர்மாவை ஆணானென்று நெஞ்சில் கல்வெட்டாய் பச்சை குத்தி கொண்டவள் பக்கவாட்டினில் தொங்கிய அவளின் கரங்களால் தீவியன் அவனின் கரங்களை உரசி மேலேறினாள் மென்மையாய் மெல்லியாள் அவள்.
இப்போது வர்மாவுக்கும் அதே நிலைதான். உண்மைக்கு சொன்னால், குத்து மதிப்பாய் வர்மாவிற்கு தற்போது மனிதனின் வயது கணக்குப்படி 27 எனலாம். அதாவது, மிருவிற்கு 1 வயது இருக்கும் போது வர்மாவிற்கு 3 வயது என்றிடலாம்.
ஆகவே, இப்போது வர்மாவிற்கு புலி வம்சத்தின் முறைப்படி 9 வயதென்றாலும் 25 வயதான மிருவிற்கு அவன் 2 வயது மூத்தவனே.
உணர்ச்சிகள் எழும்ப இருக்கிறான் வர்மா கையில் கிடப்பவளின் செயலால். சொல்லப் போனால், 5 வயசில் வயசுக்கு வந்த வர்மா இன்னும் கன்னி கழியாதவனே.
எப்படி கழிவான், பொழுதனிக்கும் தின்பது தூங்குவது என்றிருந்தால். அதுவும் குகைக்குள்ளேயே தஞ்சம் கொண்டு. ஐயாவின் நடமாட்டம் எல்லாம் இரவுகளில் மட்டுமே.
நீராட ஓடை போவது மட்டும் அதிகாலையில். பெண் புலிகள் புடைசூழாமல் தப்பிக்க ஹீரோ கையாளும் யுக்தி இது.
ஆகவே, அருள்மொழி வர்மாவாகிய வேங்கை இவன் ஒழுக்க சீலனே.
வர்மாவிற்கும் அப்பா, அம்மா, தங்கை, அண்ணன், அக்கா, தம்பி என்று பெரிய குடும்பமே இருந்தது. ஒருகாலத்தில். ஆனால், இப்போது இல்லை.
வேட்டையாடிடும் பொழுதினில் இழந்தான் வர்மா அவன் அப்பாவை. அம்மாவோ அன்றைய நாளில் குட்டி இவனை தற்காத்து உயிரை விட்டாள்.
தங்கையும் அண்ணாவும் மாமிசம் உண்ணும் காட்டுவாசிகளின் கைவரிசைக்கு பலியாகிப் போயினர். அக்கா கூடி களித்த ஜோடியை தேடி கால் போன போக்கில் போய் விட்டாள். தம்பியோ அருவியில் முதலை அடித்து மாண்டு விட்டான்.
இதுவரை பெண் புலி பக்கம் கூட தலை வைத்து படுத்திடாதவன் இன்றைக்கு மனுஷியான மிருடானியை இவ்வளவு கருசனையாக காவல் காப்பதும், அவளுக்கு ஒன்றென்றால் துடித்து போவதும், இந்நொடியில் கிளர்ச்சி கொண்டு தவித்து நிற்பதும்; எல்லாம் புரியாத புதிராகவே இருந்தது ஹீரோவிற்கு.
தீவியின் ஆரணியம்..
முந்தைய அத்தியாயங்களை படிக்க:
https://amydeepz.com/forums/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D.38/

Author: KD
Article Title: தீவியின் ஆரணியம்: 19
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.