What's new

Welcome!

ஹாய் டார்லிங்ஸ்! வெல்கம் டூ எமி தீப்ஸ் நாவல்ஸ் சைட்! இணைந்திடுங்கள் & மகிழ்ந்திடுங்கள்!

SignUp Now!

KD

Administrator
Staff member
Joined
Jul 10, 2024
Messages
232
அத்தியாயம் 69

இரவு மணி பத்து.

காத்திருந்தாள் கீத்து மதுக்கூடத்தில், வருவதாய் சொன்ன ஒருத்தனுக்காய்.

ஆனால், எட்டு மணி இப்போது பத்தாகியதுதான் மிச்சம். சொன்னவனின் மூக்கு நுனிக்கூட நுண்ணிடையாளின் கண்ணில் சிக்கிடவில்லை.

தண்ணீர் போத்தலை நீளமான பார் மேஜையின் மீது வைத்த வஞ்சியோ, பப்பின் வாசற்கதவையேதான் குறி வைத்திருந்தாள் இமைக்காது.

உள்ளுக்குள்ளோ கூட்டம் அலைமோதியது, வண்ண விளக்குகளுக்கு கீழ் பயங்கரமாய் கூத்து கட்டி அது வார இறுதி இறுதியின் சனி என்பதால்.

பொறுமையை இழந்த அருணியோ, அலைபேசி கோல்களை டிரக்கிங் (tracking) செய்யும் டிப்பார்ட்மெண்டுக்கு போனை போட்டாள்.

வருவதாய் சொன்னவனின் எண்ணை தெரிவித்து, அதன் தற்போதைய லொகேஷனை கண்டறிய கோரினாள் போலீஸ்காரியவள்.

அதே வேளையில், அந்திகையை நோட்டமிட்டிருந்த சில கண்களோ, ஆளாளுக்கு ஜாடை பார்வை பார்த்து காதலர்கள் போல் பேசிக்கொண்டனர், அவளின் நடவடிக்கைகளை கண்கணித்தவாறு.

ஐந்து நிமிடங்கள் கடக்க, வந்தது கீத்துவிற்கு கோல், கடமை உணர்ச்சியோடு பணிப்புரியும் கோல் ட்ரஸின் துறையிலிருந்து. அவர்கள் சொன்ன சங்கதியை கேட்டவளின் முகமோ வெளிறிப் போனது.

மறுவார்த்தை பேசாதவளாய் போனை காதிலிருந்து கீழிறக்கிய கோதையோ, பல்லை கடித்தப்படி முனகி ஸ்டூலிலிருந்த காலை நீட்டி கடுப்பை காட்ட, மது போதையில் ஆட்டம் போட்டுக் கொண்டிருந்த இளைஞனோ, வதூவின் பாதம் பட்டு தடுமாறி விழுந்தான் முன்னோக்கி போய்.

தடுமாற்றம் கொண்டவன் மற்றவர்களின் மீது மோத, இளைஞன் அவனோடு சேர்ந்து இன்னும் நான்கைந்து பேர் தரையில் பரப்பிக்கொண்டு விழுந்தனர்.

காலொன்று கலவரத்தை ஏற்படுத்த, பப்பின் அடியாட்கள் குழுமி போயினர் சம்பவ இடத்தில். ரீசன் மகளை தெரியாத மதுக்கூடமா.

ஆகவே, எதிர்பாரா விதமாய் நடந்த சங்கடத்தை சொல்லி விழுந்து வாரியவர்களிடம் மரியாதை நிமித்தம் சோரியும் சொல்லி பிரச்சனையை சுமூகமாய் முடித்துக் கொண்டாள் போலீஸ்காரி.

மீண்டும் பழைய ஸ்டூலிலே வந்தமர்ந்தவள் வதனியின் தண்ணீர் போத்தலை கைப்பற்றி மடக் மடக்கென்று அரை போத்தலை காலியாக்கினாள்.

மூளைக்குள் குறுக்கா மறுக்கா ஓடிய கேள்வியை தீவிரமாய் சிந்தித்திட ஆரம்பித்தாள் கீத்து.

பிரைவேட் நம்பர் ஒன்றிலிருந்து கீத்துவின் பர்சனல் போனுக்கு அழைப்பொன்று வந்தது. செத்து போன நுவானை பற்றி தகவல் சொல்லணும் என்றது. நேராய் வரச்சொல்ல, வேண்டாம் பயமென்றது.

வெளியில் சந்திக்க கெஞ்சிய ரகசிய குரலோ, முடியாதென்ற கீத்துவிடம், மரித்தவனை பற்றி போலீஸ்காரியவள் மட்டுமே அறிந்த சுடசுட செய்தியை தனக்கும் தெரியும் என்றுக் காட்டிக்கொள்ள, கொஞ்சம் இறங்கி போனால் இன்னும் நிறைய கறக்கலாம் என்றெண்ணினாள் மகிலையவள்.

ஆகவே, இடத்தை அவன் ஃபிக்ஸ் செய்ய, கிளம்பி போனாள் காவல்காரியம்மா அவன் சொன்ன மதுக்கூடத்திற்கு.

வராதவன் எண்ணை பரிசோதிக்க, அதுவோ இப்போதைக்கு உபயோகத்தில் இல்லை என்று தெரிய வந்தது.

அதுவும், படாஸ் ஏற்கனவே, பாடை கட்டிய டேனியலின் பெயரில் இருப்பதாய் கோல் ட்ரக்கிங் டிப்பார்ட்மெண்ட் சொல்ல, எவனோ கதை தெரிந்தவன்தான் இப்படி போலீஸ்காரியை சுத்தலில் விடுகிறான் என்பது வல்வியவளுக்கு புலப்பட்டது.

ஒருக்கால் அது படாஸோ என்றுக் கூட தோன்றியது தெரிவையவளுக்கு. காதலி அவளை சந்திக்க நினைக்கிறானோ என்றுக் கூட மடவரலின் மனசு தவித்தது.

இப்படியான அதீத யோசனையில் நங்கையின் மண்டை பாரங்கொண்டு வின்னு வின்னென்று வலிக்க, அங்கிருந்து வெளியேறினாள் கிருத்திகா.

சரியாய் நடந்திட கூட முடியவில்லை அரிவையவளாள். தள்ளாடினாள் கோதையவள், மயக்கம் அம்பகங்களை கட்ட.

சமாளித்தப்படி கொண்டாட்டம் கொண்ட கூட்டத்திலிருந்து வெளியேற முனைந்த மங்கையோ, பின் பாக்கெட்டிலிருந்து அலைபேசியை கைப்பற்றிட எத்தனித்தாள் குஞ்சரிக்கு போனை போட அவளால் முடியாத பட்சத்தில்.

பார்வைகள் மங்கலாக போதையிலான மயக்கம் ஒருவித கிறக்கத்தை ஏற்படுத்தியது குமாரி அவளுக்கு.

இல்லாத படாஸ், கைக்கெட்டும் தூரத்தில் தெரிய, சிணுங்கியவளை அந்நேரம் பார்த்து யாரோ இருவர் வலது இடதென்று கைத்தாங்கலாய் பிடித்து மதுக்கூடத்திலிருந்து வெளியே கூட்டிப்போயினர்.

''டேய், விடுங்கடா! படாஸ்! டேய்!''

என்றவளோ அவர்களிடமிருந்து விடுப்பட முயற்சிக்க, புயலாய் வந்து நின்றன இருக்கார்கள் மூவருக்கும் முன்னாள்.

''படாஸ்! வாடா! இங்க வா!''

என்று உளறிய கீத்துவை தூக்கி போய் காரின் பின் சீட்டியில் படுக்க போட்டார்கள் அபலையை இழுத்து வந்த பயில்வான்கள் இருவரும்.

முதல் கார் கிளம்பிட தயாராக, பின் காரிலோ பெரிய உருவங்கள் ரெண்டும் அவசர அவசரமாய் ஏறி அமர்ந்தனர்.

நெடுஞ்சாலையை தாண்டிய காட்டு பாதையிலோ அக்கார்கள் ரெண்டும் பறக்காத குறையாய் வேகங்கொண்டு பயணித்தன.

போதைக்காரியோ, படாஸ் என்று விடாது அனத்தினாள் ஏதேதோ பேசி, தன்னிலை மறந்தவளாய், பின் சீட்டில் மல்லாக்க கிடந்த நிலையில்.

கானகம் சூழ நிரம்பியிருந்த கும்மிருட்டில் குட்டை ஒன்றின் உள்ளிருந்து கேட்டது அழுத்தமான பேரிரைச்சல் ஒன்று.

வனவிலங்குகளோ அதிர்வை உணர்ந்த அச்சத்தில் அடவியை திணறடித்தன வெறிக்கொண்டு ஓடி அங்கும் இங்கும்.

வெளிச்சம் திட்டிகளை கூச, தெளிந்த நீரோடையிலான தாமரை குட்டைக்குள்ளிருந்து வெளிவந்தது மயூர வர்ணத்திலான லம்போர்கினி சியான் (Lamborghini Sian) மேலிருந்த நீரெல்லாம் வழிந்திறங்க தடாலடியான பாய்ச்சலில் நிலத்துக்கு.

செவி டமாராகும் சவுண்டோடு தார் சாலையை கிழித்துக் கொண்டு பயணித்தது மில்லியன் மதிப்பிலான உயர்தர காரது.

இரு எக்சோஸ் பைப்புகளும் நெருப்பை துப்ப, இடக்கையின் ஒற்றை விரலால் ஸ்ட்ரிங்கை ஹெண்டல் செய்த திறமைசாலியோ, வாகனத்தின் அதிகபட்ச வேகமான 355 கிமீ/மணி வேகத்தை அசால்ட்டாய் வினாடிகளில் கடந்தான்.

கழுத்தோர பச்சை நரம்புகள் அத்தனையும் புடைத்துக் கொண்டு நிற்க, லோங் ஸ்லீவ்வை மடக்கி விட்டிருந்தவனின் முழங்கை ஒன்றில் ஸ்மார்ட் வாட்சும், மற்றொன்றில் தங்கத்திலான மெல்லிய பிரஸ்லட்டும் கம்பீரமாய் வீற்றிருக்க, காதுகளிலோ கடுக்கன் கொண்டிருந்தான் அவன்.

மயில் வர்ண இமைகள் ரெண்டும் மரகத பச்சையாக, கீத்துவை கடத்தி போகின்ற காரை ஓவர் டேக் செய்த பேரழகனோ, டயர்கள் நான்கும் கருகும் வாடை கொள்ள கொண்டு போய் நிறுத்தினான் அவன் காரை அவ்விரு கார்களுக்கும் முன்னே.

தடயமே இல்லாது இப்படி முன்னே வந்து நிற்பவனை எதிர்பார்த்திடாதவர்களோ, கொஞ்ச மிரண்டுத்தான் போனார்கள்.

''இந்த ஓடி புடி விளையாட்டு செம்ம போர் படாஸ்! வா! டுஷும், டுஷும் விலையாடலாம்!''

என்ற கிருத்திகாவோ தனியொரு உலகத்தில் அவளின் படாஸோடோ ஐக்கியமாயிருந்தாள்.

ட்ரைவர் சீட்டுக்கு பக்கத்து சீட்டில் அமர்ந்திருந்தவனோ புளூதூத் கொண்ட காதில் கேட்ட குரல் சொன்ன வார்த்தைகளை அப்படியே ட்ரைவர் காதில் ஓதினான்.

''பிளான் பி!''

என்றவன் சொன்னதை ட்ரைவர் உள்வாங்கும் முன், குறுக்கே நிறுத்தியிருந்த காரிலிருந்து இறங்கி வந்த நாயகனோ முழங்கை முட்டியால் காரின் ஜன்னலை குத்தி உடைத்து தலையை காருக்குள் நுழைத்தான்.

ஒருக்கரம் காரின் வெளிப்பக்க ஜன்னலின் மேல் பாகத்தை அழுத்தியிருக்க, மற்றொரு கையால் வானொலி பகுதியிருந்த டேஷ் போர்டை அணைத்துக் கொண்டவனாய்,

''எனக்கு புடிக்காத வேலை பார்க்காதன்னு சொல்லிருக்கேன்னா இல்லை!''

என்று அடிக்குரலில் அழுத்தமாய் சொல்லி, ஓங்கி வைத்த ஒரே அடியால் ரேடியோ ஸ்பீக்கரை டரியலாக்கினான்.

''ரேவ்!''

என்று ஆவேசமாய் அக்கரையிலிருந்து அலறியவனோ, காதிலிருந்த புளூதூத்தை கழட்டி வீசி, கண் முன்னிருந்த காஃபி டேபிளை எட்டி உதைத்தான்.

மொத்த பயில்வானும் வேடிக்கை பார்க்க, கிருத்தியை தூக்கி தோளில் போட்டவனோ கிளம்பி போனான் அங்கிருந்து கார் சத்தம் மீண்டும் ஊரைக் கூட்ட.

படாஸ்...

முந்தைய அத்தியாயங்களை படிக்க:


https://amydeepz.com/forums/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D.14/
 

Author: KD
Article Title: படாஸ்: 69
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top