பகலெல்லாம் உன் சிரிப்பில்
இரவெல்லாம் உன் நினைவில்
நனவெல்லாம் உன் குரலில்
கனவெல்லாம் உன் கைப்பிடியில்
குழலால் முகம் மூடினாய்
மூச்சால் மூர்ச்சையாக்கினாய்
கதுப்பால் கண்ணில் விழுந்தாய்
இதழால் இகல்ந்தாய்
எழுத்தெல்லாம் உன் கதை
கவியெல்லாம் நி(ர்)மலனின் வதை!
💚 கேடி
அத்தியாயம் 78
நம்பிக்கை என்ற ஐந்து வார்த்தையில்தான் காதல் மற்றும் கலவியான மூவெழுத்து சொல்லெல்லாம் உயிர் பெற்று காலங்காலமாய் இப்புவியில் ஜீவித்துக் கொண்டிருக்கிறது.
மனிதன் பரிமாண வளர்ச்சியில் உலகை மட்டும் நவீனப்படுத்தவில்லை, மாறாய் அவன் சுயத்தை கூட ஆராய்ச்சியாக்கி பல கேள்விகளுக்கு விடையாக்கிக்...
அத்தியாயம் 77
அடுத்த மூன்று நாட்களில் காற்று தீ போல் பரவியது நதானியேல் மற்றும் ஜஸ்மினின் விவாகரத்து செய்தி உலகமெங்கும்.
பல நாட்டு ஊடகங்கள் தம்பதிகளின் பிரிவினையைத் தோண்டி துழாவ, இருவரும் கருத்து வேறுபாடே என்று சொல்லி தீனிப்போட்டனர் மீடியாவின் பசிக்கு.
நிழலிகா ஒரு புறம் கவலைக்கொண்டாலும்...
அத்தியாயம் 76
சரியாய் ஒரு மாதம் கடந்திருந்தது.
ஏழாவது மாதத்தில் அடியெடுத்து வைத்திருந்தான் குட்டி குஞ்சனின் குட்டி பையன்.
கணவன் நதானியேலை பிரிந்த ஜஸ்மினோ தனிக்குடித்தனம் போனாள் ஐந்து வயது மகளோடு.
மீடியாவோ தாய் சேய் இருவரையும் மொய்த்தெடுத்து விட்டது.
இதுநாள் வரை புருஷனை பற்றிய...
அத்தியாயம் 73
கைவிரல்களை போலத்தான் மனிதர்களும். ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு ரகம்.
ஜஸ்மின் இளகிய மனம் கொண்டவள். ஐந்து வயது குழந்தையின் தாயவள். கணவன் சினிமாவில் இருப்பதால் பல கிசுகிசுக்களில் மாட்டிடுவான் என்று தெரியும்.
இருப்பினும், நதானியேல் இவ்விஷயத்தில் ஜெண்டல்மேன் என்றே பெயரெடுத்தவன். உடன்...
அத்தியாயம் 72
அழமான அன்புக்கோர் அரிதான குணமுண்டு. அதுதான் விட்டுக்கு கொடுப்பது.
விரனை புரிந்துக் கொள்ள கால தாமதம் ஏற்பட்டாலும் சரி இனி அவனை குற்ற உணர்ச்சி கொண்ட ஒருவனாய் ஒதுக்கி வைத்திடக் கூடாதென்ற முடிவில் அவனோடு சேர்ந்து வாழ முடிவெடுத்தாள் நிழலிகா.
ஆனால், மகேஸ்வரனின் திட்டம் தெரிவையவள்...
அத்தியாயம் 71
தலையோடு ஊற்றிக்கொண்டு வந்தவளின் தலையில் குண்டு விழுந்தது அலறிய கைப்பேசி கொண்டு வந்த தகவல்.
இன்னும் நிழலிகாவால் ஜீரணிக்க முடியவில்லை காதால் கேட்ட சங்கதியை. அவசர அவசரமாக கிளம்பியவள் ஒரு நொடி மஞ்சத்தில் அமர்ந்தாள்.
விழிகளை இறுக்கமாய் மூடி மேடு கொண்ட வயிற்றை தடவினாள்.
''குட்டி...
அத்தியாயம் 70
அதீத அன்பு புரிதலை புத்தியை எட்ட விடாது செய்திடும். அச்சத்தை உருவாக்கி குழப்பத்திற்கு தீனி போட்டிடும்.
நிழலிகாவின் நிலை இப்போதைக்கு இப்படித்தான். விரன் மேல் நங்கையவள் கொண்ட காதல் ஒருவித பயத்தை அவளுக்குள் ஏற்படுத்தி விட, நிஜத்தை புரிந்துக் கொள்ள முயற்சிப்பவளாள் முழுமனதாய் அதை...
அத்தியாயம் 69
உப்பைத் தின்னவன் தண்ணீர் குடித்துத்தான் ஆக வேண்டும். அதுபோலத்தான் நிழலிகாவும்.
சும்மா இருந்த சங்கை ஊதி கெடுத்த கணக்காய் வீட்டுக்கு வந்த பரிசை வாங்கி பிரித்தோமா, பார்த்தோமோ என்றில்லாது டிடெக்டிவ் ஏகம்பரம் வேலை பார்த்தால் இப்படித்தான் முக்குடைப்பட்டு நிற்கணும்.
இருந்த கொஞ்சநஞ்ச...
அத்தியாயம் 68
கடவுளால் படைக்கப்பட்ட ஆறறிவு உயிர்கள் அனைத்தும் ரத்தமும் சதையும் கொண்ட ஜீவன்களே.
கேய், லேஸ்பியன், ட்ரான்ஸ்ஜெண்டர் மற்றும் பைசெக்ஸுவல் போன்ற அனைவரும் பாலினத்தால் வேறுபட்டிருக்கும் மனிதர்களே ஒழிய உணர்வுகளால் அல்ல.
இரு கைகால்கள் தொடங்கி, பேச ஒரு வாயும், சுவாசிக்க நாசியும்...
அத்தியாயம் 67
அன்பை அளந்து வைத்தாலும் அன்புதான், கொட்டி கொடுத்தாலும் அன்புதான். கொடுப்பவர் எடுப்பவர் என்ற பேதமெல்லாம் ஒன்றுமில்லை, அளப்பரிய நேசமது உள்ளத்தில் வெள்ளங்கொண்டிருக்க.
பைசெக்ஸுவளுக்காகவே பிரதானமாக உருவாக்கப்பட்ட இணையதளம் ஆரம்பித்த மூன்றாவது நாள் வந்தது மெயிலொன்று முற்றிழையவளுக்கு...
அத்தியாயம் 66
''சொல்றதுலே என்னடி இருக்கு, செய்றதுலதான் இருக்கு!''
இதுதான் அவிரன் சிங்கின் தார்மீக மந்திரம் கட்டிலின் மீது. காதல் கொண்ட கலவியில் காதலை அவன் வெளிப்படுத்தும் விதமும் இப்படித்தான்.
அப்படியான பிரமாஸ்த்திரத்தையே கையிலெடுக்க முடிவெடுத்தாள் ஊடையவள்.
குட்டி குஞ்சனிடத்தில் சின்ன...
அத்தியாயம் 65
மூன்று நாட்கள் கழித்து வீடு திரும்பினான் விரன் மருத்துவமனையிலிருந்து.
ஒரே கட்டில் என்பதால் அவனுக்கு வசதியாக இருக்கட்டுமே என்று தடுப்பு சுவருக்கு லீவு விட்டாள் வீட்டாள் அவள்.
ஆனால், விரனோ அம்மணி தூக்கி போட்ட தலையணையை தூக்கி வந்து அதே மஞ்சத்தில் பார்க் செய்தான், அறையிலிருந்து...
அத்தியாயம் 64
அண்ணியின் அலறலில் ஓடி வந்தான் சரன் வீட்டு போனின் ரிசீவரை அப்படியே போட்டு. போனோ தள்ளாடி விழுந்தது கீழே.
ரேக்கவோ வலிக்கொண்ட மருமகளின் பின்முதுகில் தைலம் தடவி சுடுநீர் ஒத்தடம் கொடுத்தார். ஒரு மணி நேரங்கழிய சின்ன டிக்கியின் முகமோ பழையப்படி இறுக்கத்தை தளர்த்தி மென்மையாகியது.
அவளை...
அத்தியாயம் 63
அம்மணி சின்ன டிக்கியின் ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்ட விரனால் ஒரு வாரம் கூட தாக்கு பிடித்திட முடியவில்லை.
இருவருக்கும் நடுவிலிருந்த உருண்டை தலையணையை பறக்க விட்டான் துயில் கொண்டவனாய் நடித்து ஆணவன்.
அவனின் தந்திரத்தை அறிந்தவளோ போர்வையோடு ஹோல் கிளம்பினாள் ரகசியமாய் சிரித்து...
அத்தியாயம் 62
வந்தவர்கள் அனைவரும் கிளம்ப நிழலிகாவோ சுவர் கடிகாரத்தில் மணியை பார்த்தப்படி மேல் மாடி நோக்கினாள்.
இன்னும் ஒரு மணி நேரம் இருந்தது, மணி சரியாய் பனிரெண்டாக. ஒரு எட்டு படுக்கைறைக்கு சென்று வர தோன்றியது அந்திகையவளுக்கு.
சாத்தியிருந்த கதவை சத்தமில்லாது திறந்தவளோ, மகனவன் இருக்க...
அத்தியாயம் 61
சரியாக இரண்டு வருடங்கள் கடந்திருந்தது.
''தேங்கியூ சோ மாச் ஜஸ்மின்! மோவியனோட பொறந்தநாளுக்கு நீங்க வருவீங்கன்னு நான் எதிர்பார்க்கவே இல்லே, அதுவும் அவர் கூட! நிஜமாவே, எனக்கிது ஒரு இன்ப அதிர்ச்சிதான்!''
என்ற சின்ன டிக்கியோ வாஞ்சையாய் பற்றினாள் அவளின் இப்போதைய தோழிகளில் ஒருத்தியான...
அத்தியாயம் 58
பைக்கை பார்க் செய்து வரவேற்பறை நுழைந்த விரனோ தூங்காது இன்னும் டிவி பார்த்துக் கொண்டிருந்த சரனை கண்டான்.
தம்பியின் முன் எவ்வித சைன் அண்ட் சிம்டம்சுகளையும் காட்டிக்கொள்ளாதவனோ,
''இத்தனை மணி வரைக்குமா டிவி பார்ப்பாங்க?! அடைச்சிட்டு போய் படு!''
என்றவனை காய்ச்சி விட்டு முனகியவாறே...